அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பெயரில் பல்கலைக்கழகம்… வரவேற்பும்!.. மகிழ்ச்சியும்! ஐபெட்டோ வா.அண்ணாமலை

0

திருச்சியில் அடகு நகையை விற்க

கட்சி வேறுபாடு இன்றி முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் பெயரால் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்று கவன ஈர்ப்பு தீர்மானம் சட்டப்பேரவையில் கொண்டு வந்தார்கள். கவன ஈர்ப்பு கொண்டு வந்த சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் அவர்களின் பெயரிலும் டாக்டர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின் பெயரிலும் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.

*பல்கலைக் கழகமாகவே நம்மிடையே வாழ்ந்து வந்த… தலைவர் கலைஞர் அவர்களின் பெயரால் பல்கலைக்கழகம் அமைவது மிகவும் வரவேற்க வேண்டிய ஒன்றாகும்… எவ்வித தயக்கமின்றி தலைவர் கலைஞர் அவர்கள் பிறந்த ஒன்றுபட்ட மாவட்டமான தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின்  பெயரால் பல்கலைக்கழகம் கொண்டுவரக்கூடிய அறிவிப்பினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள்!…. வரவேற்று பாராட்ட வேண்டிய அறிவிப்பாகும்!… வரவேற்று… கொண்டாடி மகிழ வேண்டிய… அறிவிப்பாகும்!…

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

மு.க.ஸ்டாலின் - தமிழக முதல்வர்
மு.க.ஸ்டாலின் – தமிழக முதல்வர்

*பள்ளிக்கல்வி மானிய கோரிக்கையில் வரவேற்க வேண்டிய அறிவிப்புகள் ஏதாவது உள்ளதா?… 172 பக்கம் பல்வேறு தலைப்புகளில்… இதுவரை பள்ளிக்கல்வித்துறையில் நடந்து வந்த சாதனைகளை நிதி ஒதுக்கீட்டினை பட்டியலிட்டுள்ளார்கள். காலை உணவுத் திட்டம் தொடங்கி புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன், நான் முதல்வன், இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும், வானவில் மன்றம் இதைத் தான் சாதனைப் பட்டியலாக வெளியிட்டுள்ளார்கள்.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

*தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் அத்தனை கோரிக்கைகளும் பலமுறை பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை பார்த்து டிட்டோஜாக் சார்பாக விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது. அரசின் கவனத்தை ஈர்த்து நடைபெறுகின்ற மானிய கோரிக்கையில் ஏதாவது அறிவிப்புகளை மாண்புமிகு  அமைச்சர் அவர்கள் வெளியிடுவார் என்று பல்வேறு போராட்டங்களை தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கத்தினர் ஜாக்டோ ஜியோ அமைப்பினரும் நடத்தி வருகிறார்கள்.

*ஏப்ரல் 21ஆம் தேதி டிட்டோஜாக் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர் அவர்களை பார்த்து 2023இல் ஒப்புக்கொள்ளப்பட்ட 13 அம்ச கோரிக்கையினை நிறைவேற்றித் தர வேண்டும். என்று கோரிக்கை விண்ணப்பத்தினை அளித்துள்ளார்கள்.  அமைச்சர் அவர்கள் பள்ளிக்கல்வித்துறை  செயலாளர்,  இயக்குனர்கள் ஆகியோரிடம் கொடுத்து தீர்வு காணுங்கள்!. என்று சொல்லி இருக்கிறார்!..

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

*பள்ளிக்கல்வித்துறை கொள்கைக் குறிப்பில்  ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்புகள்  இடம் பெறவில்லை!..

*தமிழ்நாடு முழுவதும் 12,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது.

*இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு களைவது தொடர்பான அறிவிப்பு… ஊக்க ஊதியம் வழங்குவது தொடர்பாக மறுபரிசீலனை செய்யக்கூடிய அறிவிப்பு…

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

*தமிழ்நாடு முழுவதும் பெண்ணாசிரியர்களுக்கு பெரிய பாதிப்பினை ஏற்படுத்தக்கூடிய  மாநில அளவிலான  ஆசிரியர் முன்னுரிமை அரசாணை 243 ஐ திரும்பப் பெறப்படும் அறிவிப்பு..

*முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சி காலத்தில் பதவி உயர்வு வாய்ப்பு இல்லாத தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான தேர்வு நிலை  தர ஊதியம் ரூ.5400/- தெளிவாக அரசு ஆணைகள் வழங்கப்பட்டதை கூட அதிகாரிகள் பறித்து வருகிறார்கள்… அவர்களுக்கான ஊதிய பாதுகாப்பு பற்றிய அறிவிப்பு…

*தமிழ்நாட்டில் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொடக்கப் பள்ளிகள் இல்லை அந்த கிராமத்தில் உள்ள மாணவர்கள் மூன்று கிலோமீட்டர் தூரம் சென்று படித்து வருகிறார்கள் நான்கு ஆண்டுகளாக புதிய பள்ளிகள் எதுவும் திறக்கப்படவில்லை.*

*காமராசர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடி வருகிறோம். ஆனால் அவர் திறந்த பள்ளிகள் மாணவர்களுடைய எண்ணிக்கையை காரணம் காட்டி மூடப்பட்டு வருகிறது.

*நிர்வாக மாறுதல்கள் இல்லாத நூறு சதவீதம் வெளிப்படையான மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு…

*கற்பித்தல் பணியை தவிர வேற பணிகளை ஆசிரியர்களுக்கு அளிக்க மாட்டோம்… என்கிற அறிவிப்பு..

அமைச்சர் அன்பில் மகேஸ் - வா. அண்ணாமலை
அமைச்சர் அன்பில் மகேஸ் – வா. அண்ணாமலை

*உள்ளிட்ட அறிவிப்புகளை நாளை நடைபெறக்கூடிய பள்ளி மானிய கோரிக்கை விவாதத்தின் போது மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் வெளியிடுவார்கள் என்று தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் ஆர்வப் பார்வையுடன் காத்திருக்கிறார்கள். நாளை 25.04.2025 மாண்புமிகு உயர் கல்வித்துறை அமைச்சர் அவர்களும். மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர் அவர்களும் விவாதத்திற்கு பிறகு  பதிலுரை அளிப்பார்கள் என்ற  நம்பிக்கை உணர்வுடன்  இந்த ஆட்சியின் மீது அக்கறை கொண்டுள்ள வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் அவர்கள் அறிக்கையில் தொிவித்துள்ளார்.

வா.அண்ணாமலை,

ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.