வைக்கம் போராட்டம் நூற்றாண்டு நிறைவு விழா! தந்தை பெரியாருக்கு புகழ்மாலை சூட்டிய முதல்வர்கள்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தொட்டால் தீட்டு” என்பார்கள். தொடாமலேயே, சிலரைக் கண்ணால் பார்தாலேயே தீட்டு என்ற வழக்கமும் ஒரு காலத்தில் இருந்தது தீண்டாமை இந்த நாட்டின் சாபக்கேடு” என்றார் அண்ணல் காந்தியடிகள். தீண்டாமைக் கொடுமையை ஒழித்திட கேரள மண்ணில் வைக்கம் நகரில் நடைபெற்று வெற்றிகண்ட  இந்தியாவின் முதல் போராட்டம்தான்  வைக்கம் போராட்டம்

வைக்கம் வரலாறு

அங்குசம் இதழ்.. இலவசமாக படிக்க...

கேரள மாநிலம் வைக்கம் நகரில் மகாதேவர் கோவில் இருக்கும் தெருவில் நடந்தாலேயே தீட்டாகிவிடும்; ஆதலால், கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களிலும், கோவிலுக்கு எதிரே உள்ள தெருவிலும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஈழவர்கள், தீயர்கள், புலையர்கள் என ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர் நடந்து செல்லவே கூடாது என்னும் கொடிய தடை இருந்தது. அந்தத் தடையை உடைத்திட 1924-ஆம் ஆண்டில் நடைபெற்ற போராட்டம்தான் வைக்கம் போராட்டம் !

வைக்கம், கேரள மாநிலத்தின் அன்றைய திருவாங்கூர் சமஸ்தானத்தில் அடங்கியிருந்த நகரமாகும். அந்நகரிலுள்ள மகாதேவர் கோவிலைச் சுற்றி அரசு அலுவலகங்கள், நீதிமன்றம் எல்லாம் இருந்தன.ஈழவர் சமுதாயத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் மாதவன் என்பவர் தீண்டத்தகாதவர் என்பதால், அந்த நீதிமன்றத்திற்குள் முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டது. இதனை எதிர்த்துதான் வழக்கறிஞர் மாதவன், கேசவ மேனன், டி.கே.மாதவன், பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப் முதலான பலர் போராடினார்கள். அப்படிப் போராட்டம் நடத்திய அனைவரையும் திருவாங்கூர் சமஸ்தான போலீசார் கைது செய்தனர். அதனால், போராட்டம் நின்றுவிடும் சூழ்நிலை உருவானது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

அப்போது இறுதியாக கைதாகிச் சிறை சென்ற பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப், கேசவ மேனன் ஆகியோர் கையெழுத்திட்டு; அப்போது, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த தந்தை பெரியார் அவர்களுக்குக் கடிதம் எழுதி, தாங்கள்தான் வைக்கம் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்தி வெற்றி தேடித் தேர வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தனர். அந்தக் கடிதம் கிடைத்ததும், 13.04.1924 அன்று வைக்கம் நகருக்கு வந்த தந்தை பெரியார் அவர்களால் போராட்டம் தீவிரம் அடைந்தது.

திருவாங்கூர் மகாராஜா ஏற்கனவே பலமுறை ஈரோடு நகருக்கு வந்து தந்தை பெரியார் இல்லத்தில் விருந்தினராகத் தங்கியிருந்தவர். ஆதலால், தந்தை பெரியார் அவர்களைத் தம் விருந்தினராக நடத்த விரும்பினார். அதைக் காவல் துறையினரும் மகாராஜாவின் அலுவலர்களும் பெரியாரிடம் தெரிவித்தனர். தந்தை பெரியார் அவர்கள், நான் அரச விருந்தாளியாக இங்கு வரவில்லை என நயமாகக் கூறி மறுத்துவிட்டார்.

அதன் பின்னர், தந்தை பெரியார் அவர்களின் போராட்டத்தில் மக்கள் திரண்டதைக் கண்டு பொறுக்க முடியாத நிலையில், திருவாங்கூர் போலீசார் தந்தை பெரியார் அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். முதல் முறை 1 மாதமும், இரண்டாவது முறை 6 மாதமும் கடுங்காவல் தண்டனை வழங்கி, தந்தை பெரியார் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

தந்தை பெரியார் கைதாகிச் சிறையில் இருந்தபோது, தந்தை பெரியார் அவர்களின் துணைவியார் அன்னை நாகம்மையார் அவர்களும், தங்கை கண்ணம்மாள் அவர்களும் வைக்கம் வந்து, போராட்டக்களத்தில் இறங்கினர். வைக்கம் நகரைச் சுற்றியிருந்த கிராம மக்களும் திரண்டு தொடர்ந்து போராடியதால் திருவாங்கூர் சமஸ்தான அரசு பணிந்து, மகாதேவர் கோவில் தெருக்களில் ஈழவர் முதலான வகுப்பார் நடந்து செல்வதற்கு இருந்த தடையை நீக்கி, எல்லோரும் செல்லலாம் என்று ஆணைபிறப்பித்தது.

இப்படி, வைக்கம் பேராட்டத்தை வெற்றிபெறச் செய்ததால் தந்தை பெரியார் அவர்களைத் தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள் “வைக்கம் வீரர்” எனப் பாராட்டி எழுதினார்.

தமிழ்நாடு அரசு நினைவகம் புதுப்பிப்பு

வைக்கத்தில், கோயில் நுழைவு போராட்டம் தொடங்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் இருந்து சென்ற பெரியார் அப்போராட்டத்தில் பங்கேற்று வெற்றியை நினைவு கூரும் விதமாக, தந்தை பெரியாருக்கு வைக்கத்தில் சிலை அமைக்கப்பட்டு 1994-ம் ஆண்டு நினைவகம் திறக்கப்பட்டது.

அந்த நினைவகம் பழமையாக மாறியதால், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அதனை ரூ.8.14 கோடியில் சீரமைக்க உத்தரவிட்டார். அதன்படி, சீரமைப்பு பணி நிறைவடைந்துள்ளது. இதில், பெரியாரின் சிலை, பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் புகைப்படங்கள் அடங்கிய நிரந்தர கண்காட்சிக்கூடம், நூலகம், பார்வையளர்கள் மாடம், சிறுவர் பூங்கா உள்ளிட்டவை அமைந்துள்ளது.

வைக்கம் நூற்றாண்டின் நிறைவு விழா

அதன்படி, தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறையால் புதுக்பிக்கப்பட்ட தந்தை பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , (12.12.2024) இன்று காலை;திறந்து வைத்தார்  இதன் ஒரு பகுதியாகத் தந்தை பெரியார் நினைவகத்தில் உள்ள அவரது உருவப்படத்திற்கு  விழாவில் பங்கேற்றுள்ள தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இதனையடுத்து 2024 -ஆம் ஆண்டிற்கான ‘வைக்கம் விருது’ கர்நாடக மாநிலம், மைசூரு மாவட்டத்தைச் சேர்ந்த புகழ் பெற்ற எழுத்தாளர் தேவநூர மஹாதேவாவுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டிருந்தது. அதன்படி தேவநூர மஹாதேவாவுக்கு ஐந்து இலட்சம் ரூபாய்க்கான காசோலை,  பாராட்டுச் சான்றிதழ் மற்றும் தங்க பதக்கம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால், இன்று நடைபெற்ற வைக்கம் நினைவகம் திறப்புவிழா நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.

சமூக நீதி காவலராக பெரியார் திகழ்ந்தார் பெரியார்: கேரளா முதல்வர் பினராயி விஜயன் புகழாரம்

கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையேற்கும், இவ்விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். விழாவிற்கு தலைமையேற்று பேசிய கேரள முதல்வர் பிரணாயி விஜயன் பேசுகையில், சமூக நீதி காவலராக பெரியார் திகழ்ந்தார் பெரியார். மதம், கடவுளின் பெயரில் மக்களுக்கு கல்வி தடுக்கப்பட்டதை கடுமையாக எதிர்த்தார் பெரியார். சோவியத் ரஷ்யா சென்ற பெரியார் அங்கு 3 மாதம் தங்கியிருந்தார். சோசலிச ஆட்சி நடைபெற்ற சோவியத் ரஷ்யாவில் உயர்வு, தாழ்வு இல்லை என்பதை நேரில் பார்த்தவர் பெரியார். சமத்துவத்தை வலியுறுத்தி பேசிய பெரியார், அதன் வழியிலேயே செயல்பட்டதில் வியப்பு ஒன்றும் இல்லை. சமூக நீதி என்ற மையப்பொருளைக் கொண்டு அனைவருக்கும் சமத்துவம், சுதந்திரம் போன்றவற்றை வலியுறுத்தியவர் பெரியார்.

மேலும், வர்ணாசிரம கோட்பாடுகளை தனது கொள்கைகளால் முறியடித்தவர் பெரியார். வைக்கம் கோவில் வளாக பாதையில் ஒடுக்கப்பட்டோர் நடக்கும் உரிமையை பெற்றுத் தர நடந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கினார் பெரியார். பெரியாரை திருவிதாங்கூர் சமஸ்தான அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. தான் மட்டுமின்றி தனது குடும்பத்தை சேர்ந்த பெண்களையும் போராட்டத்தில் பங்கேற்க வைத்தார் பெரியார். மகாராஷ்டிராவில் ஜோதிபாய் பூலே, சாவித்ரிபாய் பூலேவைப் போல் தமிழ்நாட்டில் பெரியார் நாகம்மை தம்பதி போராடினார்கள் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

பெரியாருக்கு எதிராக யாகம் எடுத்த ஊரில் இன்றைக்கு புகழ் மாலை சூட்டும் நிகழ்ச்சி  முதல்வர் ஸ்டாலின் சிறப்புரை

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் பேசும்போது  “பெரியாருக்கு எதிராக யாகம் நடத்திய மண்ணில் பெரியார் கொண்டாடப்படுவதுதான் அவரது சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி. வைக்கம் நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்க எனக்கு வாய்ப்பு கிடைத்ததை வரலாற்று பெருமையாக கருதுகிறேன்.

வைக்கம் போராட்டம் எப்படி கம்பீரமானதோ, அதைப்போலவே பெரியார் நினைவகமும் கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது. பெரியார் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெறும் இந்த நாள், வரலாற்றில் பொன்னாள். கேரளாவுக்கு வரும் அனைவரும் வைக்கம் பெரியார் நினைவகத்தை பார்த்து ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்ட வரலாற்றை அறிய வேண்டும்.ஒருவர் ஓயாது உழைத்து ஒரு பெரிய சமூகத்தை மாற்றிய வரலாறு தமிழ்நாட்டை தவிர வேறு எங்கும் இல்லை.

கேரளா காங்கிரஸ் தலைவர்களின் கோரிக்கையை ஏற்று 5 மாத காலம் வைக்கத்தில் தங்கி பெரியார் போராட்டம் நடத்தினார். கேரளாவில் 75 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார் பெரியார். பெரியாரின் வைக்கம் போராட்டம் மிகவும் முக்கியமானது என அம்பேத்கர் குறிப்பிட்டார். வைக்கம் போராட்டத்தை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் பல கோயில் நுழைவு போராட்டங்கள் நடந்ததற்கு பெரியாரே காரணம்.

பெரியாரின் போராட்டம் காரணமாகவே கோயில்களுக்குள் நுழையும் அனைவரையும் பாதுகாக்க 1939ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது.100 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் முன்னேறி இருக்கிறோம். ஆனால் இன்னும் நாம் வெகுதூரம் முன்னேறி செல்ல வேண்டியுள்ளது. பாகுபாடுகளுக்கு எதிரான போராட்டத்தை நாம் தொடர வேண்டும். வைக்கம் போராட்டத்தில் தமிழ்நாட்டிலிருந்து பங்கேற்றவர்களின் பட்டியல் நீளமானது.  இனி நாம் அடையவிருக்கும் வெற்றிகளுக்கு அடையாளமாக வைக்கம் இருக்கும். வைக்கம் போரில் வெற்றி பெற்ற பெரியாரை வைக்கம் வீரர் என்று திரு.வி.க போற்றினார்.

தீண்டாமையை ஒழிக்க திருவிதாங்கூரில் எடுத்த முயற்சி முக்கியமானது. சமூக மாற்றமே முதன்மையானது என பெரியார் போராடினார் என அம்பேத்கர் பாராட்டினார். வைக்கம் போராட்ட நினைவு அஞ்சல் தலையை விரைவில் வெளியிடவுள்ளோம். கேரளாவிற்கு வரும் அனைவரும் வைக்கம் நினைவகத்திற்கு வர வேண்டும். சட்டம் தேவைதான்.

அதைவிட மக்களின் மனமாற்றம் மிகவும் முக்கியம். யாரையும் தாழ்த்தி பார்க்காத சமத்துவ எண்ணம் மக்கள் மனதில் வளர வேண்டும். பகுத்தறிவு மற்றும் அரசியல் கண்ணோட்டத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். பாகுபாடுகளுக்கு எதிரான நம் போராட்டத்தைத் தொடர வேண்டும். முன்பு இருந்ததைவிட வேகமாக செயல்பட வேண்டும்” என உரையாற்றினார்.

மேலும், இந்த நூற்றாண்டு விழாவிற்கு திராவிடர் கழகத் தலைவரும், தந்தை பெரியார் அவர்களின்  மாணவருமான  ஆசிரியர் கி.வீரமணி முன்னிலை வகிகித்தனர் .

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், இ.ஆ.ப. அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார், தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் , தொல் திருமாவளவன் எம்பி உட்பட  கேரள அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும் பங்கேற்று சிறப்பித்தனர் இறுதியாக  , கேரள மாநில அரசின் தலைமைச் செயலாளர் திருமதி சாரதா முரளிதரன், இ.ஆ.ப., அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

 

மணிகண்டன்.

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.