காதலர் தினம் ரோஸ் விலை விர்ர்ர் விற்பனை டல்ல்ல்..
காதலர் தினம் ரோஸ் விலை விர்ர்ர் விற்பனை டல்ல்ல்.. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், தளி, கெலமங்கலம், பேரிகை,பாகலூர் உள்ளிட்ட பகுதியில் நிலவும் குளிர்ந்த சீதோஷ்ண நிலையால் மலர் சாகுபடிக்கு கைகொடுத்து வருகிறது. குறிப்பாக, ரோஜா மலர்கள் இங்கு அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது இந்தாண்டு காதலர் தினத்தை முன்னிட்டு ஓசூர் மார்க்கெட்டிலிருந்து கடந்த ஒரு வாரமாக ரோஜாப் பூக்கள் நாடு முழுவதும் கொள்முதல் நடந்து வருகிறது பூக்கடைகளில் விலையும் நான்கு மடங்காக உயர்ந்துள்ளது
கிருஷ்ணகிரி ராயக்கோட்டை சாலையில் உள்ள அப்பு என்ற பூ விற்கும் தம்பி கூறுகையில் இந்த ரக ரெட் ரோஸ் கட்டில், 10 முதல் 14 பூக்கள் இருக்கும். நேற்று முதலே விலை 4 மடங்கு உயர்ந்துவிட்டது .. 10 ரூபாய் முதல் 15 ரூபாய்க்கு விற்ற இலையுடன் கூடிய ஒரு ரோஜா இன்று 30 ,முதல் 40 ரூபாய் வரை விற்பனை ஆகிறது, இந்த ரெட் ரோஸ் கட்டு 500 ரூபாய்க்கும் வாங்கி வந்தேன்
கிருஷ்ணகிரி மாவட்டம் தான் பூ விளையும் பூமி ராயக்கோட்டை, பூவத்தி பேரிகை , லிட்டில் இங்கிலாந்து என கூறப்பட்டும் தளி இங்கெல்லாம் வகையான பூக்கள் விளைவிக்கப்படுகின்றன இங்கு இருந்துதான் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி ஆகிறது. கிருஷ்ணகிரியை சுற்றி செண்ட் தயாரிக்கும் தொழிற்சாலை நிறைய வந்துவிட்டது இங்கு விளைவிக்கும் சில ரக பூக்களில் இருந்தாதான் செண்ட் தயாரிக்கப்படுகிறது அதனால் இந்த ரகம் எப்போதுமே விலை அதிகம் தான் தற்போது மாலை 4 மணி ஆகிவிட்டது 20 கட்டு கூட விற்பனை ஆகவில்லை , போன வருட காதலர் தின நாளில் 200 கட்டுகள் வரை விற்றோம் என்கிறார் பூக்கடை தம்பி அப்பு
காரணம் கேட்டபோது தற்போது உள்ள காதல் உண்மையானது இல்லை காமம் மட்டுமே உள்ளது அதனால் பெண்கள் எல்லாம் உஷார் ஆகிவிட்டதால் பசங்க பூ வாங்க வரவில்லை என்றார் ஆதங்கத்தோடு கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சுற்று வட்டாரத்தில், 2,500 ஏக்கருக்கு மேல் பசுமை குடில்கள் அமைத்து, தாஜ் மஹால், பர்ஸ்ட்ரெட் போன்ற ரோஜாக்கள் சாகுபடி செய்யப்படுகிறது
உலகம் முழுதும் காதலர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ஓசூரிலிருந்து வெளிநாடுகளுக்கு கடந்த 5 ஆம் ந்தேதி முதலே ரோஜா ஏற்றுமதி துவங்கி, 10 நாட்கள் வரை நடந்தது. இங்கிருந்து சிங்கப்பூர், மலேஷியா, ஐக்கிய அரபு நாடுகள், ஜப்பான், வங்கதேசம் உட்பட பல்வேறு நாடுகளுக்கு ரோஜாக்கள் ஏற்றுமதியாகிறது. ஏற்றுமதியாளர்கள் விவசாயிகளிடம் ஒரு ரோஜா, 14 முதல் 18 ரூபாய் வரை வாங்கப்படுகிறது
ஏற்றுமதி, 50 லட்சம் ரோஜா என்ற அளவிற்கு நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்தாண்டை போல் குறைந்ததால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மணிகண்டன்