அங்குசம் சேனலில் இணைய

மருத்துவமனைக்கு எட்டு கிலோமீட்டர் தொட்டில் கட்டி தூக்கிச் செல்லும் அவலம் !

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

வால்பாறை பழங்குடி கிராமத்தில் சாலை வசதி இல்லாமல் ஒரு நோயாளியை தொட்டில் கட்டி மருத்துவமனைக்கு கொண்டு வரும் காட்சி பதற வைக்கிறது. கோவை மாவட்ட வால்பாறை சுற்றுவட்டார வன பகுதியில்  சுமார் பத்திற்கும் மேற்பட்ட ஆதிவாசி பழங்குடி கிராமங்கள் உள்ளது. இங்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.  இவர்களுக்கு சாலை வசதி மின்சார வசதி குடிநீர் வசதி போன்ற வசதிகள் இல்லாமல் வனப்பகுதிக்குள் வாழ்ந்து வருகின்றனர்.

அவசர கிகிச்சை பயணத்துக்கு தொட்டில்; அதுவே ஆம்புலன்ஸ் வால்பாறை காட்டில்!இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள உடும்பன்பாறை ஆதிவாசி பழங்குடி கிராமம் வன பகுதிக்குள் எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு சுமார் 20 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆக-25 அன்று, அக்கிராமத்தில் ஒரு முதியவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவரை   மருத்துவமனைக்கு அழைத்து  வருவதற்கு வசதி இல்லாமல் அவரை தொட்டில் கட்டி 8 கிலோமீட்டர் தொலைவு வரை தூக்கிச் சென்று எஸ்டேட் பகுதிக்கு வந்து தனியார் வாகனத்தில் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். அங்கே முதலுதவி சிகிச்சளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

எட்டு கிலோமீட்டர் முதியவரை தொட்டில் கட்டி மருத்துவமனைக்கு அழைத்து வந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சாலை வசதி செய்து தர வேண்டும் எங்களது 108 வாகனத்தை பாருங்கள் தொட்டில் கட்டி தூக்கி செல்கிறோம் என்று வேதனையில் சத்தமிட்டு செல்கின்றனர் .

 

  —    M.சேதுமாதவன், வால்பாறை

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.