திமுக சார்பாக நிறுத்தப்பட்ட வன்னியர் சமூக வேட்பாளர்கள் பட்டியல்
தமிழ்நாட்டில் பெரும்பான்மையாக உள்ள வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம்
திமுக கட்சியில் ஒவ்வொரு சட்டமன்ற தேர்தலிலும் எவ்வளவு எண்ணிக்கையில் வன்னியர் சமூக வேட்பாளர்களை திமுக நிறுத்தியுள்ளது .
2021- சட்டமன்றத் தேர்தலின் படி, வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்கள் 38 பேர் சட்டமன்ற உறுப்பினராக தற்பொழுது இருந்து வருகின்றனர்.
இதில்,
திமுகவில் -19
அதிமுகவில் -9
பாமக-5
காங்கிரஸ் -3
விசிக-1
தவாக-1
அதிகபட்சமாக 1989 மற்றும் 2001 சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பாக வன்னியர் வேட்பாளர்கள் 31 பேர் அதிகமாக நிறுத்தப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வன்னியர் சமூகம் சுமார் 110 சட்டமன்றத் தொகுதிகளில் இருக்கின்றன.
தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமூகமான பறையர்(12%) சமூகத்திற்கு அடுத்து,
வன்னியர் சமூகம் சுமார் தமிழ்நாட்டில் 90 லட்சம் முதல் 1 கோடி வரை மக்கள் வசிக்கின்றனர்.
10 % சதவீதம் வன்னியர் சமூக மக்கள் இருக்கின்றனர்.
2021- சட்டமன்றத் தேர்தலில் வன்னியர் சட்டமன்ற உறுப்பினர் 36 பேர் இதில் திமுக சார்பாக வெற்றி பெற்றவர்கள் 19 பேர்
தமிழ்நாடு 34 அமைச்சரவையில் உரிய அரசியல் பிரதிநிதிதுவம் உண்மையாக கிடைத்துள்ளதா…? என்பதைப் பார்ப்போம்.
சமூக நீதிப் பார்வையில்…
9 வெள்ளாளக் கவுண்டர் எம்எல்ஏவுக்கு 3 அமைச்சர்.
12 முக்குலத்தோர் எம்எல்ஏவுக்கு 5 அமைச்சரவை
7 நாடார் எம்எல்ஏவுக்கு 3 அமைச்சரவை
3 யாதவர் எம்எல்ஏவுக்கு 2 அமைச்சரவை
2 இசை வேளாளர் எம்எல்ஏவுக்கு 2 அமைச்சரவை
5 ரெட்டியார் எம்எல்ஏவுக்கு 2 அமைச்சரவை
21 பட்டியல் சமூக எம்எல்ஏவுக்கு 3 அமைச்சரவை.
( பட்டியல் சமூகத்துக்கு குறைந்தது 4 அமைச்சரவை கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் மற்றும் தமிழ்நாடு அமைச்சரவை பட்டியலில் 4 மற்றும் 5-து இடத்தை கொடுத்திருக்க வேண்டும்)
ஆனால்……..
வன்னியர் சமூகத்தை சேர்ந்த 19 திமுக எம் எல் ஏ களுக்கு 3 அமைச்சரவை மட்டும்தான்…????
அதன்படி திமுகவில் 19 எம் எல் ஏக்கள் இருக்கின்றனர்.
வன்னியர் சமூகத்திற்கு திமுகவில் அதிகபட்சமாக 5 முதல் 6 அமைச்சர்கள் வரை தரப்பட்டிருக்க வேண்டும்.
தற்பொழுது வன்னியர் சமூகத்தில் 4 அமைச்சர்களாக,
எஸ் எஸ் சிவசங்கர்,
எம் ஆர் கே,
பனமரத்துப்பட்டி ராஜேந்திரன்,
துரைமுருகன்
ஆகிய 4 அமைச்சர்கள் இருக்கின்றனர்.
2026- சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் குறைந்தது 35 வேட்பாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும்.
அமைச்சரவையில் 6 பேருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும்.
இது நடக்குமா…?
2026- சட்டமன்றத் தேர்தலில் ஆட்சிக்கு வரப்போகின்ற கட்சி…
வன்னிய சமூகத்திற்கு உரிய அரசியல் பிரதிநிதித்துவத்தை உண்மையான சமூக நீதி அரசியல் பிரதிநிதித்துவம் கிடைக்குமா…
என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..!
திமுக சார்பில் அதிகபட்சமாக 1971- சட்டமன்ற தேர்தலில் 27 பேர் வெற்றி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதில் பெரும்பான்மையாக 70 சட்டமன்ற தொகுதிகளிலும், 50% சதவீதத்திற்கு மேல், வன்னியர் சமூகம் 45 சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி தோல்வி தீர்மானிக்கிற சக்தியாக இருக்கின்றன.
வன்னியர் சமூகம் முதல் இடத்தில் 61 சட்டமன்றத் தொகுதிகளில் பெரும்பான்மையாக உள்ளனர்.
2-ம் இடத்தில் 35 தொகுதிகளில் வன்னியர் சமூகம் இருக்கின்றன.
சமூக நீதிப் அரசியல் பிரதிநிதித்துவம் பற்றி பார்ப்போம்.
1962-ல் 18 பேர் போட்டியிட்டு 7 பேர் வெற்றி பெற்றனர்
1967-ல் 30 பேர் போட்டியிட்டு 20 பேர் வெற்றி பெற்றனர்
1971-ல் 28 பேர் போட்டியிட்டு 27 பேர் வெற்றி
1977- ல் 27 பேர் போட்டியிட்டு 8 பேர் வெற்றி
1) துறைமுகம் – ஏ செல்வராஜன்
2) மதுராந்தகம் – சி ஆறுமுகம்
3) ராணிப்பேட்டை – துரைமுருகன்
4) தண்டராம்பட்டு – டி வேணுகோபால்
5) செஞ்சி – என் ராமச்சந்திரன்
6) மயிலாடுதுறை- என் கிட்டப்பா
7) திருவிடைமருதூர் – எஸ் ராமலிங்கம்
8) சிதம்பரம் – துரை கலியமூர்த்தி
1980-ல் 17 பேர் போட்டியிட்டு 8 பேர் வெற்றி
1) ராயபுரம் – R.பொன்னுரங்கம்
2) துறைமுகம் – ஏ செல்வராஜன்
3) ராணிப்பேட்டை – துரைமுருகன்
4) தண்டாரப்பட்டு – டி வேணுகோபால்
5) நெல்லிக்குப்பம் – வி கிருஷ்ணமூர்த்தி
6) செஞ்சி – என் ராமச்சந்திரன்
7) மயிலாடுதுறை – என் கிட்டப்பா
8) திருவிடைமருதூர் – எஸ் ராமலிங்கம்
1984-ல் இரு 28 பேர் போட்டியிட்டு 4 பேர் வெற்றி
1) ராயபுரம் – ஆர் பொன்னுரங்கம்
2) துறைமுகம் – ஏ செல்வராஜன்
3) மதுராந்தகம் – சி ஆறுமுகம்
4) தர்மபுரி – ஆர் சின்னசாமி
1989-ல் 31 பேர் போட்டியிட்டு 26 பேர் வெற்றி
1991-ல் 29 பேர் போட்டியிட்டு அனைவரும் தோல்வி.
இதில் ஜெயகொண்டம், ஆண்டிமடம், எடப்பாடி, பள்ளிப்பட்டு, மொரப்பூர் ஆகிய சட்டமன்றத் தொகுதியில் மூன்றாம் இடம் திமுக பிடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
1996-ல் 29 பேர் போட்டியிட்டு 25 பேர் வெற்றி
இந்த தேர்தலில் தோல்வியடைந்த மூன்று தொகுதிகள்
1) எடப்பாடி
2) தாரமங்கலம்
3) ஆண்டிமடம்
2001-ல் 31 பேர் போட்டியிட்டு 5 பேர் மட்டுமே வெற்றி
1) காட்பாடி – துரைமுருகன்
2) குறிஞ்சிப்பாடி – எம் ஆர் கே பன்னீர்செல்வம்
3) சிதம்பரம் – துரை. கி சரவணன்
4) வேதாரண்யம் – எஸ் கே வேதரத்தினம்
5) திருவிடைமருதூர்- எஸ் ராமலிங்கம்
2006-ல் 14 பேர் போட்டியிட்டு 14 பேர் வெற்றி பெற்றிருந்தனர்.
1) உத்திரமேரூர் – கா சுந்தர்
2) காட்பாடி – துரைமுருகன்
3) நாட்றம்பள்ளி – என் கே சூரியகுமார்
4) ஆரணி – ஆர் சிவானந்தம்
5) செஞ்சி – வி கண்ணன்
6) நெல்லிக்குப்பம் – சபா ராஜேந்திரன்
7) குறிஞ்சிப்பாடி – எம் ஆர் கே பன்னீர்செல்வம்
8) பென்னாகரம் – பி என் பெரியண்ணன்
9) சேலம்-2 – வீரபாண்டி ஆறுமுகம்
10) வீரபாண்டி – ஆ ராசா
11) பனமரத்துப்பட்டி – ஆர் ராஜேந்திரன்
12) ஆண்டிமடம் – எஸ் எஸ் சிவசங்கர்
13) குத்தாலம் – கா அன்பழகன்
14) வேதாரண்யம் – எஸ் கே வேதரத்தினம்
2011-ல் 10 பேர் போட்டியிட்டு 2 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர்
1) காட்பாடி – துரைமுருகன்
2) குன்னம் – எஸ் எஸ் சிவசங்கர்
2016-ல் 25 பேர் போட்டியிட்டு 12 பேர் வெற்றி பெற்றிருந்தனர்
1) மாதவரம் – S.சுதர்சனம்
2) உத்திரமேரூர் – கா சுந்தர்
3) காஞ்சிபுரம் – சிவி எம்பி எழிலரசன்
4) காட்பாடி – துரைமுருகன்
5) சோழிங்கநல்லூர் – எஸ் அரவிந்த் ரமேஷ்
6) பென்னாகரம் – பி என் பி இன்பசேகரன்
7) தர்மபுரி – தடங்கம் பி சுப்பிரமணி
8) புவனகிரி – துரை.கி. சரவணன்
9) நெய்வேலி – சபா ராஜேந்திரன்
10) குறிஞ்சிப்பாடி – எம்ஆர்கே பன்னீர்செல்வம்
11) மயிலம் – ஆர் மாசிலாமணி
12) சேலம் வடக்கு – ஆர் ராஜேந்திரன்
2021-ல் 28 பேர் போட்டியிட்டு 19 வெற்றி பெற்றிருந்தனர்
1) மாதவரம் – எஸ் சுதர்சனம்
2) மதுரவாயல் – காரம்பாக்கம் கணபதி
3) திருத்தணி – எஸ் சந்திரன்
4) உத்திரமேரூர் – கா சுந்தர்
5) சோழிங்கநல்லூர் – எஸ் அரவிந்த் ரமேஷ்
6) காஞ்சிபுரம் – சி வி எம் பி எழிலரசன்
7) ஜோலார்பேட்டை – தேவராஜ்
8) காட்பாடி – துரைமுருகன்
9) செய்யாறு – ஓ ஜோதி
10) நெய்வேலி – சபா ராஜேந்திரன்
11) குறிஞ்சிப்பாடி – எம் ஆர் கே பன்னீர்செல்வம்
12) விக்கிரவாண்டி – அன்னியூர் சிவா
13) விழுப்புரம் – லட்சுமணன்
14) குன்னம் – எஸ் எஸ் சிவசங்கர்
15) ஜெயங்கொண்டம் – க. சொ. க. கண்ணன்
16) பூம்புகார் – எம் நிவேதா முருகன்
17) பெரம்பூர் – ஆர்டி சேகர்
18) உளுந்தூர்பேட்டை – மணிகண்ணன்
19) அந்தியூர் – ஏ ஜி வெங்கடாசலம்








Comments are closed, but trackbacks and pingbacks are open.