வன்னியர் சங்க மகளிர் மாநாடு….  அனுமதி கொடுக்குமா தமிழ்நாடு காவல்துறை ?

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

வன்னியர் சங்கம் சார்பில் கடந்த மே 11ஆம் தேதி மாமல்லபுரத்தில் சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற்றது இந்நிலையில், ஆகஸ்ட் 10ஆம் தேதி வன்னியர் சங்கம் சார்பாக மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார்  கடலோர பகுதியில் மகளிர் மாநாடு நடைபெறும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவுத்திருந்தார் •

இந்நிலையில், வன்னியர் சங்கத் தலைவர் பு•தா• அருள்மொழி அவர்கள் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலினை சந்தித்து மாநாட்டிற்கு அனுமதி கேட்டு கடிதம் கொடுத்தார் •

Sri Kumaran Mini HAll Trichy

vanniyar sangam mahalir conclaveஅந்த கடிதத்தில், “வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி  ஞாயிற்றுக்கிழமை மாலை 3:00 மணி அளவில் பூம்புகாரில் வன்னியர் சங்கம் சார்பில் வன்னிய மகளிர் பெருவிழா மாநாடு பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் மற்றும் வன்னியர் சங்க தலைவர் பு•தா• அருள்மொழி ஆகிய எனது மற்றும் மகளிர் சங்க நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற உள்ளது  •

இந்த மகளிர் மாநாட்டிற்கு அனுமதியும், பாதுகாப்பும் வழங்கி உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

நடைபெற உள்ள மாநாடு பொது மக்களுக்கும், போக்குவரத்திற்கும் எவ்வித இடையூறும் இல்லாமல் மிகுந்த கட்டுப்பாட்டுடனும், அமைதியுடனும் காவல்துறையின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டும் நடந்து கொள்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் •

காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின்

Flats in Trichy for Sale

காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின்

மேற்குறிப்பிட்டுள்ள வன்னிய மகளிர் மாநாடு பூம்புகார் இதே இடத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்துள்ளது என்பதையும் தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம் ” என்று தெரிவித்துள்ளார்•

கடிதத்தை பெற்றுக் கொண்ட மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், அந்த இடத்தை பற்றி ஆலோசனை செய்து விட்டு அனுமதி பற்றி தகவல் சொல்கிறேன் என அனுப்பி வைத்தார் •

’குயிலி’ பட விழாஇந்த மாநாடு நடத்த திட்டமிட்டுள்ள இடம், மத்திய, மாநில அரசு கட்டுப்பாட்டில் உள்ளது• மேலும், வனம், சுற்றுலா, மீன்வளம் மூன்று துறைக்கும் சொந்தமான இடமாக இருப்பதால் அனுமதி கொடுப்பதில் சிக்கல் ஏற்படும் என்கிறார்கள் காவல்துறை வட்டாரங்களில் •

இது தொடர்பாக பாமக நிர்வாகிகள் கூறுகையில்,

” காவல்துறை அனுமதி கொடுக்கவில்லை என்றால், நீதிமன்றம் சென்று அனுமதி பெற்று திட்டமிட்டபடி மாநாடு நடத்துவோம் என்கிறார்கள் ” உறுதியாக.

– மகிழன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.