அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

கண்டம் விட்டு கண்டம் பறந்து வரும் மைனாக்கள் ! பறவைகள் பலவிதம்- தொடர் 23

திருச்சியில் அடகு நகையை விற்க

வனச்சூழலில், அழகாக பல குரல்களில் கூட்டமாக பழமரங்களில் மைனாக்கள் கூச்சலிடுவதை மிக மிக இரசித்து அனுபவிக்கலாம். ஒவ்வொரு வகை மைனாவிற்கும் ஒவ்வொரு விதமான குரல்கள். அனைத்தும் இனிமைதான். அதில் இது தனி ரகம். வனவிலங்கு சட்டம் கடுமையாவதற்கு முன்பெல்லாம் மனிதர்கள் இதைப்படுத்திய பாடு இருக்கிறதே! குஞ்சுகளாய் இருக்கும்போது கூண்டில் அடைத்து கிளிகளைப்போல், பேசக்கற்றுக் கொடுத்தால், இது அசத்தும். நாகர்கோவிலில் ஒரு உணவகத்தில் உள்ள மைனா அங்கு வருபவர்களைஎல்லாம் …வாங்க வாங்க உட்காருங்க என்று சொல்லுமாம்! (கத்துமாம்).

பறவைகள் பலவிதம்
பறவைகள் பலவிதம்

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

அதேபோல நம்ம ஊருக்கு வலசை வரும் ரோசா மைனாக்களே பற்றி தெரியுமா? யானைகளை போன்றே இந்த பறவையையும் நிரந்தரமாய் ஒரு இடத்தில தங்க வைப்பது இல்லை இயற்கை. ஆம்!

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இப் பறவைக்குப் பெயர் தமிழில் ரோசா மைனா, சூறைக்குருவி, சோளக்குருவி என நாமகரணம் செய்துள்ளனர். சூறைக்குருவி என்று ஏன் பெயர் வந்தது? இவை 5000 – க்கு மேற்பட்ட பறவைகள் கூட மேகம் மாதிரி பெருந்திரள்களாக சோளக்காட்டை வந்தடைந்து சூறையாடுவதால் சூறைக்குருவி, சோளப்பட்சி ஆகிய பெயர்களைப் பெற்றது. அத்தோடு லோகஸ்ட் (Locust) களை அழித்து விவசாயிக்கு நன்மையும் செய்கின்றன, என்பதை மறந்துவிடக்கூடாது. இவை கிழக்கு ஐரோப்பாவிலும், மேற்கு மற்றும் மத்திய ஆசியாவிலிருந்து, நமது நாட்டுக்கு வரும் பறவைகளில் முதலில் வலசை வரும் பறவைகள் என சலிம் அலி தனது The Book of Indian Birds-ல் One of our earliest winter visitors. Begins arriving July-August, depart by mid April-என்று பதிவு செய்துள்ளதை நினைவு கூறுகிறேன்.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

தொடரும்

ஆற்றல் பிரவீன்குமார்,

சூழல் செயல்பாட்டாளா் 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.