கருணைகளை கொண்டு போய் குப்பையில் போடுங்கள். முதலில், நாங்கள் வாழ்வதற்கான வழியை கிளியர் செய்யுங்கள் ! ஏசி வாங்க சென்றவருக்கு நேர்ந்த கொடூரம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

இந்தக் கோடையில் வீட்டை கூளாக்கலாம் என ஒரு ஏசி வாங்க முடிவெடுத்து, புதுக்கோட்டை வசந்த் அண்ட் கோ-விற்கு தொலைபேசி செய்தேன்.

ஏசியின் விபரம் விலை போன்றவற்றை விசாரித்துக் கொண்டிருந்தவனிடம், மறுமுனையில் இருப்பவர்: நீங்கள் இங்கே இதற்கு முன் ஏதேனும் வாங்க வந்திருக்கிறீர்களா? என்று கேட்டார். ஊர் உள்ளிட்ட விலாசங்களை சொல்லி வந்திருக்கிறேன் என்று கூறினேன். அதற்கு அவர்: தப்பா நினைச்சுக்காதீங்க சார். அன்று வந்த கண்ணு தெரியாதவரா என கேட்டார். ஆம் என்றேன். உடனே அவர் மீண்டும் சாரி சார் தப்பா நினைச்சுக்காதீங்க என்று சொல்லிவிட்டு பேச்சை தொடர்ந்தார்.

Frontline hospital Trichy

பார்வையற்றவர்

நான்: இ எம் ஐ இருக்கா சார்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

அவர்: இருக்கு சார். காடா காட் லேசா

நா: கார்டுலெஸ்.

அ: இ எம் ஐ பார்வையற்றவர்களுக்கு கிடையாது சார்.

நா: நான் அரசாங்க வேலை பார்க்கிறேன் சார்.. எதுக்கு இஎம்ஐ கிடையாது.

அ: மேனேஜர் கிட்ட கேட்டு வரேன் சார். அவரும் முடியாதுன்னுதான் சொல்லுறாரு.  . வேணும்னா உங்க வைஃப் பேர்ல எடுத்துக்கங்களேன்.

நா: என்னோட வைஃப் பிளைன்ட் சார்.

அ: இருங்க சார் மேனேஜர் கிட்ட கேட்டு வந்துடறேன்.

“என் வைஃப் பத்தி மேனேஜர் கிட்ட என்ன கேட்க வேண்டி இருக்கு? என மைண்ட் வாய்ஸ் அலறியது.

அ: இல்ல சார் பார்வையற்றவர்களுக்கு இஎம்ஐ தர முடியாது என்று மேனேஜர் சொல்கிறார். இல்லாட்டி வேற யாரோடயாவது ஐடி கார்டு கொண்டு வாங்க சார் செஞ்சு கொடுத்துரலாம்.

“சம்பாதிக்கிறது நானு, ஏசி இன்னொருத்தன் பேருலையா? நல்லா இருக்குடா உங்க நியாயம்” என மனதுக்குள் நினைத்துக் கொண்டிருக்கையில், அடுத்த இடியை இறக்கினார்.

அ: கொஞ்ச நாளுக்கு முன்னாடி, ஒரு பார்வையற்ற தம்பதி வந்தார்கள். அவர்களும் இ எம் ஐ இல் வாஷிங் மெஷின் எடுக்க வேண்டும் என்றார்கள். அவர்களையும் இது போலத்தான் போகச் சொல்லி விட்டோம் என்று வெகு இயல்பாய் சொன்னார்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

புதுக்கோட்டை வசந்த் அன்கோ
புதுக்கோட்டை வசந்த் அன்கோ

எத்தனை ஆசையாய் அந்த தம்பதியினர் வாஷிங் மெஷின் வாங்க வந்திருப்பார்கள். அவர்களுக்கு தர முடியாது என மறுத்துவிட்டு, அதை சான்றாக என்னிடமும் இயல்பாய் சொல்கிறார்கள். நாளை ஏசி கேட்டு வரும் ஒரு பார்வையற்றவருக்கு எனது பெயரும் மேற்கோள் காட்டப்படலாம்.

ஒரு நிறுவனம் பார்வையற்றோருக்குரிய வசதிகளை கட்டாயம் செய்திருக்க வேண்டும். சாதாரண வாடிக்கையாளர்களுக்கு தரும் அனைத்து வசதிகளையும் பார்வையற்றோருக்கும் தர வேண்டும்.

நல்ல நிறுவனம் பார்வையற்றோருக்கு இது போன்ற வசதிகளை செய்து தர முடியாது என ஒருபோதும் வெளிப்படையாய் சொல்லக்கூடாது. அதற்கான சாத்திய கூறுகளையே ஆராய வேண்டும்.

ஆனால், ஒரு பார்வையற்றவருக்கு வாஷிங் மெஷின் கொடுக்கவில்லை, இன்னொரு பார்வையற்றவர் யேசி கேட்டு வந்தார் அதையும் தரவில்லை என சான்றுகளை அடுக்கிக்கொண்டு போகக்கூடாது. ஏனெனில், பார்வையற்றவர்கள் என்ன செய்து விடப் போகிறார்கள்? என்ற மெத்தனத்தில்தான் இது போன்ற பதில்கள் அளிக்கப்படுகின்றன.

ஒரு சாதாரண நபருக்கு இருக்கும் அனைத்து உரிமைகளும் சலுகைகளும் மாற்றுத்திறனாளிகளுக்கும் தரப்பட வேண்டுமென மாற்றுத் திறனாளிகளுக்கான 2016 சட்டம் சொல்கிறது.

சட்டம் இயற்றியதோடு அரசின் கடமை முடிந்து விட்டது என நினைத்தது போலும். அது முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என கண்காணிப்பதும் இல்லை, அது தொடர்பாக புகார் அளிக்க எளிய நடைமுறைகளும் இல்லை. அதனால், பிரச்சனைகள் வந்தாலும் என்ன செய்வது எனத் தெரியாமல் மாற்றுத்திறனாளிகள் முடங்கிப் போகின்றனர்.

கார் வாங்க போனால் உங்க பேரில் தர முடியாது, லோன் வாங்கப் போனால் உங்கள் பெயரில் தர முடியாது, கிரெடிட் கார்டு வாங்கப் போனால் உங்கள் பெயரில் தர முடியாது, இவையெல்லாமே பொருளீட்டும் பார்வையற்றவர்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகள்.

பொருளீட்டுவதோ பார்வையற்றவர்கள், பொருட்கள் மட்டும் அவர்கள் பெயரில் வாங்க முடியாது என்பதெல்லாம் மிகக் கொடிய பொருளாதார ஒடுக்குமுறை.

பார்வையற்ற வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கலை வசந்த் அன் கோ சரி செய்யுமா? அல்லது பார்வையற்ற வாடிக்கையாளர்களே இங்கே வரவேண்டாம் என கோ சொல்லுமா.

“கண்ணு தெரியாதவர்” என்ற ஒரு வார்த்தையை உச்சரித்த உடனேயே, என் உள்ளம் காயப்படுமோ என நினைத்து இரு முறை சாரி சொன்ன அந்த அன்பர். இ எம் ஐ கேட்ட பார்வையற்ற தம்பதிக்கு வாஷிங் மெஷின் தராததையும், எனக்கு ஏசி தர முடியாது என்பதையும் வெகு இயல்பாய் சொல்கிறார் பாருங்கள். உண்மையில் மனம் வலித்தது வாங்கும் திறன் இருந்தும் பொருளை தர முடியாது என்று சொன்ன போதுதான்.

ஐயன்மீர்! உங்களது வார்த்தையில் வழியும்  கருணைகளை கொண்டு போய் குப்பையில் போடுங்கள். முதலில், நாங்கள் வாழ்வதற்கான வழியை கிளியர் செய்யுங்கள்!

முகநூலில் பார்வையற்றவரின் பதிவு

பார்வையற்றவரின் இந்த குற்றச்சாட்டு குறித்து அங்குசம் இதழின் சார்பாக புதுக்கோட்டை வசந்த் அண்ட் கோ அலுவலக தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்ட போது… தொடர்ந்து செல்போனின் ரிங் ஒலித்துக் கொண்டிருந்தது எதிர் முனையில் எந்தவித பதிலும் இல்லை.

அவர்கள் நமக்குத் தரும் பதிலையும் சேர்த்து பதிவு  செய்ய தயாராக உள்ளோம்

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.