அக்.10 முதல் ஜி-5யின் வெப் சீரிஸ் ‘வேடுவன்’
மண்சார்ந்த கதைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வெப்சீரிஸ்களை தொடர்ந்து தனது ஓடிடி பிளாட்ஃபார்மில் ரிலீஸ் பண்ணி வருகிறது ஜி-5. இப்போது ‘ரைஸ் ஈஸ்ட்’ பேனரில் ஸ்ரீநிதிசாகர் தயாரித்துள்ள ‘வேடுவன்’ வெப் சீரீஸ் அக்.10 முதல் ஸ்ட்ரீமிங் ஆகிறது. பவன் டைரக்ட் பண்ணியுள்ள இந்த சீரிஸின் கதை நாயகனாக கண்ணா ரவி நடித்துள்ளார்.
”மனிதனின் பல்வேறு குணாம்சங்களை இந்த வெப்சீரிஸில் நடித்தது முற்றிலும் புதுமையான அனுபவம். நமது வாழ்க்கையில் எடுக்கும் சில முடிவுகளையும் அதன் விளைவுகளையும் ஆழமாக சித்தரிக்கிறது இந்த சீரிஸ்” என்கிறார் கண்ணா ரவி.
இந்த சீரிஸில் நடித்திருக்கும் மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய எந்த விபரமும் இல்லை.
— ஜெடிஆர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.