’வீரத்தமிழச்சி’ புரொமோ நிகழ்ச்சி!
மகிழினி கலைக்கூடம்’ பேனரில் சாரதா மணிவண்ணன் & மகிழினி இணைந்து தயாரித்து வரும் தீபாவளிக்கு ரிலீசாகிறது ’வீரத்தமிழச்சி’ என்ற படம். அறிமுக இயக்குனர் சுரேஷ் பாரதி இயக்கத்தில் சஞ்சீவ் வெங்கட், இளையா, சுஷ்மிதா சுரேஷ், ஸ்வேதா டோரத்தி, வேலராமமூர்த்தி, மறைந்த நடிகர் மாரிமுத்து, கே.ராஜன், மீசை ராஜேந்திரன், ஜெயம் கோபி ஆகியோர் நடித்துள்ளனர்.
படத்தின் ஒளிப்பதிவு : சங்கரலிங்கம் செல்வகுமார், இசை : ஜூபின், பி.ஆர்.ஓ : நிகில் முருகன். ‘வீரத்தமிழச்சி’யின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா, செப்.29-ஆம் தேதி காலை சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக டைரக்டர்கள் ஆர்.வி.உதயகுமார், ஷரவண சுப்பையா, பேரரசு, ராஜகுமாரன், சிறு படங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் அன்புச் செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய்வர்கள்….
தயாரிப்பாளர் மணிவண்ணன்,
“தமிழ்ப்பெண்களின் வீரத்தைப் போற்றும் வகையில் இப்படத்தை எடுத்துள்ளோம். இந்த வீரத்தமிழச்சியை வெற்றித் தமிழச்சியாக்கும்படி மீடியாக்களை கேட்டுக் கொள்கிறேன்’.
ஆர்.வி.உதயகுமார்,
“கட்டிடத் தொழிலாளியாக இருந்தவரை டைரக்டராக்கிய தயாரிப்பாளர் உண்மையிலேயே தில்லானவர் தான். எந்தக் கல்லை எங்கே வைக்க வேண்டும், ஜன்னல் எங்கே வைக்கணும், வாசல் எங்கே வைக்கணும் என்பதெல்லாம் டைரக்டருக்குத் தெரியும் என்பதை டிரெய்லரைப் பார்த்தாலே தெரிகிறது”.
பெண்களின் மன உறுதியையும் தன்னம்பிக்கையையும் வெகுவாக பாராட்டிப் பேசினார்கள் ஷரவண சுப்பையா, பேரரசு, ராஜகுமாரன் ஆகியோர்.
“வீரத்தமிழச்சியாக நடிக்க என்னைத் தேர்வு செய்த டைரக்டருக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி. ஏரோநேட்டிக்கல் இன்ஜினியரிங் படித்த நான் சினிமாவில் பெண்களும் சாதிக்க வேண்டும் என்பதற்காகத் தான் வந்தேன்” என்றார் சுஷ்மிதா சுரேஷ்.
ஹீரோ சஞ்சீவ் வெங்கட், இசையமைப்பாளர் ஜூபின் உட்பட டெக்னீஷியன்கள் அனைவருமே படத்தின் அவசியத்தைப் பற்றிப் பேசினார்கள்.
டைரக்டர் சுரேஷ் பாரதி,
“தினசரி 35 ரூபாய் கூலிக்கு கட்டிட வேலை பார்த்த நான் இப்ப டைரக்டராகியிருக்கேன்னா அதுக்கு தயாரிப்பாளர் மணிவண்ணன் சாரும் ஐந்து வருடங்கள் எனக்காக பொறுமைகாத்து என்னைக் காத்த எனது மனைவியும் மகன்களும் தான். இதற்கு முன் பதினெட்டு குறும்படங்களை இயக்கி, 36 விருதுகள் பெற்றுள்ளேன். இது பெண்களுக்கான விழிப்புணர்வுப்படம். படத்தின் க்ளைமாக்ஸ் இதுவரை யாரும் சொல்லாததாக இருக்கும்”.
— ஜெடிஆர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.