திருவனந்தபுரத்தில் சீயான் விக்ரமின் ‘வீர தீர சூரன்- பார்ட் 2 ‘ டீம்!
இந்த 20- ஆம் தேதி சென்னையில் புரமோஷனை ஆரம்பித்தது ‘வீரதீர சூரன் பார்ட் -2’ டீம். அடுத்து ஹைதரபாத், பெங்களூரு நகரங்களில் புரமோ ஈவெண்ட் முடிந்து நேற்று( மார்ச் 24)திருவனந்தபுரத்தில் புரமோ & பிரஸ்மீட்டை நடத்தியது ‘வீ.தீ.சூ.’ டீம். முதலில் நடந்த பிரஸ்மீட்டில் பேசியவர்கள்…
இயக்குநர் எஸ். யூ .அருண் குமார்
“இந்தப் படம் ஒரு ரியலிஸ்டிக்கான மெயின் ஸ்ட்ரீம் கமர்சியல் ஃபிலிம். உங்கள் அனைவரையும் திருப்திப்படுத்தும் என நம்புகிறேன்”.
சீயான் விக்ரம்
“இந்த திரைப்படம் Raw & Rustic ஃபிலிம். இயக்குநர் அருண்குமார் ‘சேதுபதி’ போன்ற கமர்சியல் படங்களையும் இயக்கி இருக்கிறார். ‘சித்தா’ போன்ற சென்சிடிவ்வான படங்களையும் இயக்கி இருக்கிறார் இந்த இரண்டு படத்தின் கலவையாக இந்த ‘வீர தீர சூரன்’ படம் இருக்கும்.
இந்தப் படத்தில் வழக்கமான மாஸ் கமர்சியல் திரைப்படங்களுக்கான இலக்கணத்தை மாற்றி புதிதாக முயற்சி செய்து இருக்கிறோம். இது எங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கிறது. உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறோம்.
இப்படத்தில் இருக்கும் அனைவரும் சிறந்த பெர்ஃபாமர்ஸ். சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. இது போன்ற ஒரு கமர்சியல் படத்தில் சிறந்த நடிகர்கள்.. ஒவ்வொரு காட்சிகளிலும் தங்களுடைய ஷட்டிலான பெர்ஃபார்மன்ஸை வழங்கி இருக்கிறார்கள். படத்தை பார்க்கும் போது ரசிகர்களுக்கு புது அனுபவமாக இருக்கும்.
சுராஜ் – ஒரு மல்டி டேலன்டெட் ஆக்டர். இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகும் போது அவருக்கு ஒரு தமிழ் வார்த்தை கூட தெரியாது. ஆனால் படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினருடன் பேசி, பழகி தமிழில் பேச கற்றுக் கொண்டார். இந்தப் படத்திற்காக நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு பேசி அனைவரையும் சிரிக்க வைத்தார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு ‘பீப் பாக்ஸ்’ செய்து அனைவரையும் கவர்ந்தார்.
நான் மலையாளத்தில் அறிமுகமாகும் போது எனக்கு ‘மதி’ என்ற ஒரு வார்த்தை மட்டும்தான் தெரியும். இதனால் மலையாள படங்களில் நடிக்கும் போது உள்ளுக்குள் டென்ஷனும் , பதற்றமும் இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் பதினைந்து நிமிடத்திற்கு ஒரு நீளமான காட்சியில் சுராஜ் தமிழில் அற்புதமாக நடித்துக் கொண்டே பேசி அனைவரையும் வியக்க வைத்தார்.
சமீபத்தில் வெளியான ‘பொன் மான்’, ‘மார்க்கோ’,’ ஆவேசம் ‘போன்ற படங்கள் வெளியாகி மலையாள திரையுலகின் வளர்ச்சியைக் காட்டுகிறது. இதே 27-ஆம் தேதி பான் இந்திய படமாக வெளியாகும் பிருத்விராஜின் எம்புரான் படமும் வெற்றி பெற வேண்டும். அந்தப்படத்துடன் எங்களுடைய வீரதீர சூரன் படமும் வெளியாகிறது. இதுவும் ஒரு எமோஷனலான படம். இந்த இரண்டு படமும் வெற்றி பெற வேண்டும். தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் கேரள ரசிகர்களுக்கு இந்த தருணத்தில் என் நன்றி”.
எஸ். ஜே. சூர்யா
“அருண்குமார் சினிமா மீது பெரும் காதல் கொண்டவர்.
இந்தப் படம் மலையாள ரசிகர்களுக்கு இரண்டு விசயங்களில் தொடர்பு ஏற்படும். முதலாவது இப்படத்தின் தயாரிப்பாளர். இந்த மண்ணை சார்ந்தவர். இண்டியூஜுவல் புரொடியூசர். கதையை நம்பி பெரிய நட்சத்திரங்களுடன் இணைந்து பணியாற்றி இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார். இயக்குநர் என்ன விரும்புகிறாரோ… அதை வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர்.
சீயான் விக்ரம் – சுராஜ் போன்ற திறமையான நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். காலங்களை கடந்து நிற்கும் ஒரு படமாக இந்தப் படம் இருக்கும்”.
சுராஜ் வெஞ்சரமூடு
” நான் நடிக்கும் முதல் வேற்று மொழிப் படம் இது. இதற்கு வாய்ப்பளித்த இயக்குநர், தயாரிப்பாளர் உள்ளிட்ட படக் குழுவினர் அனைவருக்கும் நன்றி.
மலையாளம் தவிர வேறு எந்த மொழியும் எனக்கு பேசத் தெரியாது. இந்தப் படத்தில் நான் தமிழில் பேசி நடித்திருக்கிறேன். இதில் கிடைக்கும் பாராட்டுகள் அனைத்தும் இந்த படக் குழுவினரைத் தான் சேரும்.
இந்தப் படத்தை பார்ப்பதற்கு தியேட்டருக்கு வருபவர்கள் ஐந்து நிமிடங்கள் முன்னதாகவே வந்து விட வேண்டும். ஏனெனில் மற்ற படங்களைப் போல் இது சாதாரண படமல்ல. இந்தப் படத்தின் முதல் ஷாட்டில் இருந்தே கதை தொடங்கி விடும். அதனால் அதனை காண தவறாதீர்கள். இதில் இன்னொரு காரணமும் இருக்கிறது .அதில் நான் இருக்கேன்”.
துஷாரா விஜயன்
“இந்தப் படத்தில் கலைவாணி என்பது என் கேரக்டரின் பெயர். சுயநலமற்ற அன்பை அள்ளி வழங்கக்கூடிய கேரக்டர். அவளின் உலகம் என்பது கணவரும், குழந்தைகளும் தான். உங்கள் அனைவருக்கும் இந்தப் படம் மிகவும் பிடிக்கும் என நம்புகிறோம்.அனைவரும் கடினமாக உழைத்து இருக்கோம்.
மலையாள ப்படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். விரைவில் மலையாளத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்”.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இதனைத் தொடர்ந்து பிரபலமான லூலூ மாலில் பிரமாண்டமான புரமோ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்கான ரசிகர்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் படக் குழுவினர் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். ரசிகர்களும் நட்சத்திரங்களுடன் செல்ஃபி எடுத்து, தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, ஆதரவு அளித்தனர். திருவனந்தபுரத்தில் இருந்து கிளம்பிய ‘வீ.தீ.சூ’ டீம் இன்று ( மார்ச் 25) காலை மதுரை, மாலை திருச்சி, நாளை ( மார்ச் 26) கோவை என சூறாவளிப் பயணத்தில் இருக்கிறது ‘சூரன்’ டீம்.
— மதுரை மாறன்.