LLR வழங்க லஞ்சம் ! கையும் களவுமாக சிக்கிய ஆய்வாளா்!
திருச்சி, குண்டூர் கிராமத்தைச் சேர்ந்த பழனியப்பன் என்ற முன்னால் இராணுவ வீரர் நடத்தும் ஓட்டுநர் பயிற்சி பள்ளியிலிருந்து இரண்டு நபர்களுக்கு இருசக்கர, நான்கு சக்கர வாகனம் ஓட்டுநர் பயிற்சி பெற LLR கேட்டு திருச்சி மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆன்லைனில் விண்ணப்பித்து உரிய கட்டணம் செலுத்திய பின்பு, மோட்டார் வாகன ஆய்வாளர் மணிபாரதி அவர்கள், பழனியப்பன் விண்ணப்பித்த இரண்டு LLR விண்ணப்பத்தை பரிசீலித்து LLR வழங்கியதற்காக ரூ.1,000/- லஞ்சம் கேட்டுள்ளார்.
அதன் தொடர்ச்சியாக 12.12.2025ந் தேதி Ex-Servicemen பழனியப்பன் திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இன்று 12.12.2025ந் தேதி துணை சக்திவேல், பிரசன்னவெங்கடேஷ், பாலமுருகன் மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு கண்காணிப்பாளர் மணிகண்டன், ஆய்வாளர்கள் பிரிவு காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட பொறிவைப்பு நடவடிக்கையின் போது மோட்டார் வாகன ஆய்வாளர் மணிபாரதி லஞ்சப்பணம் ரூ.1,000/-பழனியப்பனிடமிருந்து கேட்டு, தனது உதவியாளர் திலீப்குமார் வழியே பெற்று வைத்திருந்தபோது கையும் களவுமாக பிடிபட்டுள்ளார்.
மேலும், சோதனையில் ரூ.13,000/-கணக்கில் வராத பணம் திலீப்குமார் என்பவரிடமிருந்து கைப்பற்றப்பட்டது. மேலும், மோட்டார் வாகன ஆய்வாளர் மணிபாரதி என்பவரது வீட்டில் சோதனையிட கணக்கில் வராத பணம் ரூ.1,90,000/-மும் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக திருச்சி மேற்கு, மோட்டார் வாகன அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.







Comments are closed, but trackbacks and pingbacks are open.