“அந்த ஃபுட்டேஜை எங்கிட்ட கொடுங்க”–‘விடுதலை–2’ விழாவில் இசைஞானி ஜாலி கமெண்ட்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ல்ரெட் குமார் தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில்,  விஜய்சேது பதி, சூரி, மஞ்சு வாரியர், பவானி ஸ்ரீ , சேத்தன், தமிழ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘விடுதலை-2’ படம் டிசம்பர்  20 ஆம் தேதி வெளியாகிறது. இதன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நவம்பர் 26- ஆம் தேதி இரவு நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசியவர்கள்…..

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

ஒளிப்பதிவாளர்& நடிகர் ராஜீவ் மேனன்,

'விடுதலை--2' “’விடுதலை-1’ படம் ஒரு மேஜிக். முதல் படத்தில் நிழலில் ஒளிந்திருந்த லீடர் விஜய்சேதுபதி இரண்டாம் பாகத்தில் வெளியே வந்து நிறைய பேசுகிறார், காதல் செய்கிறார், ஆக்‌ஷனும் உண்டு. ராஜா சாரின் இசையில் ஒரு படம் இயக்க  ஆசைப்படுகிறேன். அற்புதமான இசையைக் கொடுத்துள்ளார். நாம் அனைவரும் மறந்து போன ஒரு தலைவர் வெற்றிமாறன் மனதில் திரையிட்டு இப்போது நம் எல்லோருடனும் உரையாட வருகிறார். விஜய்சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறார். வாழ்த்துகள்”

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

நடிகை பவானி ஸ்ரீ,

நடிகை பவானி ஸ்ரீ“விடுதலை-2’ படம் மூலம் உங்கள் அனைவரையும் மீண்டும்  சந்திப்பதில் மகிழ்ச்சி. புதுமுகமான என்னை நம்பி தமிழரசி கதாபாத்திரம் கொடுத்த வெற்றி சாருக்கு நன்றி. விஜய்சேதுபதி சார், சூரி சார் மற்றும் இரண்டாம் பாகத்தில் நடித்திருக்கும் நடிகர்களுக்கும் நன்றி. ராஜா சாரின் இசையில் வரும் பாடலில் நானும் ஒரு பகுதி என்பதில் மகிழ்ச்சி”

நடிகர் கென் கருணாஸ்,

“இயக்குநர் வெற்றிமாறன் சாருக்கு என் முதல் நன்றி. எனக்கு இந்தப் படம் பெரிய வாய்ப்பு. தயாரிப்பாளர் எல்ரெட் குமார் சார் என்னை எப்போதும் பார்த்தாலும் பாசிட்டிவாக பேசுவார். இளையராஜா சார் இருக்கும் மேடையில் இருப்பதே எனக்கு பெருமை. என் வாழ்க்கையில் சில பேரை சந்தித்தற்காக கடவுளிடம் நன்றி சொல்வேன். அப்படியானவர்களில் விஜய்சேதுபதி சாரும் ஒருவர். அவருடன் நடித்ததில் மகிழ்ச்சி. சூரி அண்ணன் என் வாழ்வில் மிக நெருக்கமான ஒருவர். படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி”

நடிகர் சூரி ,

நடிகர் சூரி

“கடந்த 49 வருடங்களாக நம் எல்லோர் வீட்டு விசேஷத்திலும் ராஜா அய்யாதான் விழா நாயகன். இசைக் கடவுள், இசை மருத்துவர் என எல்லா வார்த்தைகளுக்கும் அவர் தகுதியானவர். அவர் இசையமைக்கும் படத்தில் நடித்திருப்பது என் பாக்கியம். தயாரிப்பாளர் எல்ரெட் சாருக்கு நன்றி. ’விடுதலை1’ படம் உங்களுக்குப் பிடித்தது போலவே, ’விடுதலை2’ படமும் உங்களுக்குப் பிடிக்கும். ‘விடுதலை’க்கு முன் ’விடுதலை’க்கு பின் சூரி என என் வாழ்க்கையை பிரிக்கலாம். வெற்றிமாறன் என்ற யுனிவர்சிட்டியில் விடுதலை என்ற டிகிரி வாங்கியிருக்கிறேன். என் காமெடியைப் பார்த்து வாழ்த்தியவர்கள் இப்போது நல்ல நடிகனாக என்னைப் பாராட்டுகிறார்கள். ‘கருடன்’, ‘கொட்டுக்காளி’ படங்களையும் வாழ்த்தினார்கள். இதற்கெல்லாம் காரணம் வெற்றிமாறன் சார்தான். நல்ல நினைவுகளை இந்தப் படம் கொடுத்திருக்கிறது”.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

 நடிகர் விஜய் சேதுபதி,

“சூரி மாதிரியான பெரிய ஹீரோ அவரது படத்தில் எனக்கு பெரிய வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அற்புதமாக நடித்திருக்கிறார். சேத்தன் சாரின் நடிப்பு என்னை பிரமிக்க வைக்கிறது. அந்த கதாபாத்திரத்திற்கு மிகச்சரியான தேர்வு அவர். அவரைத் தவிர வேறு யாரையும் ரீபிளேஸ் செய்ய முடியாது. உணர்வுகளை இசையாக மாற்றுபவர் ராஜா சார். இசை மூலம் எனக்கு பேரானந்தம் கொடுத்த இசைஞானி க்கு நன்றி. அவரது பேச்சும் வாழ்க்கையில் பல புரிதல்களை எனக்குக் கொடுத்தது. இது முழுக்க முழுக்க வெற்றிமாறன் மட்டுமே உரிமை கொண்டாடக்கூடிய படம். இந்தப் படம் உருவாக நாங்கள் உறுதுணையாக இருந்தோம். தயாரிப்பாளர் எல்ரெட் சார் இந்தப் படத்தைக் கிரீடமாக சுமந்து கொண்டிருக்கிறார்”.

தயாரிப்பாளர் எல்ரெட் குமார்,

எல்ரெட் குமார் “விடுதலை பயணம் முடிவது கடினமாக உள்ளது. ஆனாலும், இந்தப் பயணத்திற்கு நன்றி. இந்தப் படத்தை முதலில் முடிவு செய்து வைத்திருந்தது வெற்றி சாரும் ராஜா சாரும் தான். அவர்கள் இந்தப் படத்தைத் தயாரிக்க எனக்கு வாய்ப்புக் கொடுத்தார்கள். படத்தில் பணிபுரிந்த அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி. ராஜா சாருடன் அதிகம் உரையாடுவதற்கு இந்தப் படத்தில் வாய்ப்பு கிடைத்தது பொக்கிஷம். தமிழ் சினிமாவில் ஒரு பெரிய மாற்றம் நடந்து வருகிறது. ’விடுதலை’ இரண்டு நடிகர்களை இன்னும் மேலே தூக்கி வைக்கும் என்று நம்புகிறேன். விஜய்சேதுபதி சாருக்கும் சூரி சாருக்கும் வாழ்த்துக்கள்.”

இயக்குநர் வெற்றிமாறன்,

“ஒரு படம் எடுப்பதற்கு நிறைய உழைப்பு தேவை. ஒருவர் நம்பும் விஷயத்தை மற்றவர்களும் கண்ணை மூடிக்கொண்டு நம்புவது படத்தின் வெற்றிக்கு மிக முக்கியம். டிசம்பர், 2020–ல் படத்தை ஆரம்பித்தோம்.இரண்டு பாகமும் எடுக்க கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் ஆகிவிட்டது. இத்தனை காலம் இந்த கதையை புரிந்து கொண்டு முழு நம்பிக்கையுடன் பயணித்த குழுவினருக்கு மிக்க நன்றி. படத்தில் என்னுடைய அசிஸ்டெண்ட் அனைவரும் கோ-கிரியேட்டர்ஸாக உழைத்திருக்கின்றனர். இதுபோன்ற டீம் கிடைத்தது என் பாக்கியம். இதில் ராஜா சார் உள்ளே வந்தது எனக்கு அதிர்ஷ்டம்.

'விடுதலை--2' அவர் ரொம்பவே பன்ச்சுவல். நான் பத்து நிமிடம் தாமதமாக அவரைப் பார்க்கச் சென்றால் கூட அதற்குள் நான்கு ட்யூன் போட்டு வைத்திருப்பார். அவர் எனக்கு பர்சனலாகவும் நிறைய இடம் கொடுத்திருக்கிறார். அதெல்லாம் எனக்கு பெருமையான விஷயம். படத்தில் இயக்குநரின் வேலை என்ன அதற்கு தன்னுடைய சிறந்த பங்களிப்பு என்ன தர முடியும் என்பதில் அவர் தெளிவாக இருப்பார். அவரின் ஜீனியஸ் மைண்டை அருகில் இருந்து பார்த்தது மகிழ்ச்சி. படத்தில் நான்கு பாடல்கள் உண்டு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கும். இந்தப் படம் மூலம் எல்லோரும் நிறைய கற்றிருக்கிறோம். என்னுடைய குடும்பம், நண்பர்கள், டீம் எல்லோருக்கும் நன்றி”

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இசைஞானி இளையராஜா,

“எல்லாப் படத்தின் இசை வெளியீட்டு விழா போல இது நடக்கவில்லை. ‘விடுதலை’ படத்திற்காக வெற்றிமாறன் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார் என்பது எனக்குத் தெரியும். ‘தெனந் தெனமும்’ பாடலை சஞ்சய் சுப்ரமணியம் பாடினார். அதன் பிறகு இயக்குநர் என்னை பாட சொல்லிக் கேட்டார். அதன் பிறகு சஞ்சய் ‘மனசுல’ பாடல் பாடினார். அவர் பெரிய சங்கீத வித்துவான். அவருக்கு எனது நன்றி.

இசைஞானி இளையராஜாமுதல் பாகம் மாதிரி இரண்டாம் பாகத்தை நினைத்து விடாதீர்கள். இதில் வேற மாதிரி வெற்றி மாறன் பயணம் செய்திருக்கிறார். இந்தப் படத்திற்கு இசையமைப்பது ஆகாயத்தில் புள்ளி வைப்பது மாதிரி. வெற்றி மாறன் சொல்வதையெல்லாம் கேட்டு அப்படியே இசையாக மாற்றினேன். நான் இசையமைக்கும்போது வெற்றி மாறன் எப்போதும் ரெக்கார்டு செய்து கொண்டே இருப்பார். (“அந்த ஃபுட்டேஜை எனக்கு கொடுங்க. நல்ல பிரைஸ் கிடைக்கும்” என  வெற்றிமாறனைப் பார்த்து ஜாலி கமெண்ட் அடித்தார் இசைஞானி)இவ்வளவு நேரம் நான் ஒரு நிகழ்வில் இருந்தது இல்லை. நிகழ்வுக்கு போவதும் இல்லை. இந்த நிகழ்வில் முன்பே  பேசிவிட சொன்னார்கள். நான் இருக்கேனு சொன்னேன். எல்லோர் பேசுவதையும் கேட்கும் ஒரு நல்ல வாய்ப்பு எனக்குக் கிடைத்தது” என்றார்.

 

— மதுரை மாறன்.

Saravana Multispeciality Hospital Pvt. Ltd., Madurai,

Leave A Reply

Your email address will not be published.