அங்குசம் சேனலில் இணைய

செங்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் விஜிலென்ஸ் ரெய்டு ; கலக்கத்தில் திருவண்ணாமலை அதிகாரிகள் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

செங்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் விஜிலென்ஸ் ரெய்டு ; கலக்கத்தில் திருவண்ணாமலை அதிகாரிகள் – திருவண்ணாமலை அருகே சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று ( 02.08.2024 ) திடீர் சோதனை நடத்தினர். சோதனையில் கணக்கில் வராத பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Vigilance raid at Sir Registrar's office
Vigilance raid at Sir Registrar’s office

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி வேல்முருகன் உதவி ஆய்வாளர் கோபிநாத் தலைமையிலான பத்து பேர்  கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் செங்கம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நேற்று இரவு 7 மணியளவில் செங்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டதில் ஆன்லைனில் பணவர்தனை செய்ய வைத்திருந்ததாக கூறப்பட்ட கணக்கில் வராத  73,190 ரூபாய் பறிமுதல் செய்தனர் இதைத்தொடர்ந்து சார் பதிவாளர் பால்வின் சிவராஜ் (பொறுப்பு ), மற்றும் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

சார் பதிவாளர் அலுவலகத்தில் விஜிலென்ஸ் ரெய்டு
சார் பதிவாளர் அலுவலகத்தில் விஜிலென்ஸ் ரெய்டு

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

தொடர்ந்து சிக்கும் அதிகாரிகள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மூன்று சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச வேட்டை நடைபெற்றது கடந்த மாதம் திருவண்ணாமலை நகராட்சியில் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக ஆய்வாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சமீபத்தில் ஆரணி வட்டாட்சியர், கலசப்பாக்கம் பகுதியில் லஞ்சம் கேட்ட விஏஓ, செங்கம் வருவாய் ஆய்வாளர், திருவண்ணாமலை இணை சாா் பதிவாளா் அலுவலகம் எண்-2 , மற்றும் 1 , என அடுத்தடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையில் சிக்கிக் கொண்டு வருவதால் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்

– மணிகண்டன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.