”ஸ்பா”வில் விபச்சாரம் – விஜய் மன்ற நிர்வாகி கைது ! காப்பாற்றும் புஸி ஆனந்த் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

”ஸ்பா”வில் விபச்சாரம் – விஜய் மன்ற நிர்வாகி கைது ! காப்பாற்றும் புஸி ஆனந்த் !

திருச்சியில் பல இடங்களில் ஸ்பா என்ற பெயரில் விபச்சாரம் நடைபெற்று வருவதாகவும், இதனை கண்டுகொள்ளாமல் இருக்க விபச்சார தடுப்பு பிரிவு எஸ்.ஐ. ரமா கூகுள் பே மூலம் மாசாமாசம் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைதானார்.

Frontline hospital Trichy

அவரது கைது நடவடிக்கையை தொடர்ந்து, திருச்சி கருமண்டபம் சிங்கராயர் பகுதியில் இயங்கி வந்த ஷைன் ஸ்பா-வில் பெண்களை வைத்து விபச்சார தொழில் செய்த புகாரில், அதன் உரிமையாளர் செந்தில், மேலாளர் லட்சுமி தேவி மற்றும் விபச்சார தொழிலில் ஈடுபட்ட இரண்டு இளம்பெண்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

திருச்சியின் மையமான பகுதியில் நான்காண்டுகளாக இயங்கிவரும் ஷைன் ஸ்பா-வின் உரிமையாளர் செந்தில், தளபதி விஜய் மக்கள் இயக்க திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளர் என்பதுதான் ஹைலைட்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

விஜயின் தீவிர ரசிகராக காட்டிக் கொள்ளும் செந்தில், சமீபத்தில் வயலூர் ரோட்டில் விஜய் திருமண மண்டபத்தை கட்டியெழுப்பியுள்ளார். இதனை அகில இந்திய விஜய் மக்கள் மன்ற பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் திறந்து வைத்தார்.

புஸ்ஸி ஆனந்தின் பினாமி தான் இந்த செந்தில் என்ற டாக் ஒன்று உலவி வரும் நிலையில், ஸ்பா-என்ற பெயரில் விபச்சாரம் நடத்தியதாக செந்தில் மீது குற்றச்சாட்டு எழுந்ததிலிருந்து அவர் கைதாகும் நாள் வரையில் எந்த ரியாக்ஷனும் காட்டாமல் விஜய் மக்கள் இயக்கம் அமைதி காத்து வருவது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

”அரசியலுக்கு வர்றதுக்கு முன்னாடியே இப்படியா?” என்று பெருமூச்சு விடுகிறார்கள் பொதுஜனங்கள்!

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.