நடிகர் விஜய் விருந்தில் மீடியா சுட்ட வடை !

விஜய் பங்சன்ல சுட்ட வடை வெந்து இருந்ததா? சாம்பார்ல உப்பு இருந்துச்சான்னு.. ஆராய்ச்சியும், வந்த ஆடியன்ஸ்கிட்ட கருத்தும்தான் கேட்கல.

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

நடிகர் விஜய் விருந்தில் மீடியா சுட்ட வடை !

இணையத்தில் திரும்பிய பக்கமெல்லாம், சென்னையில் நடிகர் விஜய் நடத்திய ”விஜய் கல்வி விருது விழா” குறித்த செய்திகளால் நிரம்பி வழிகிறது. பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில், முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கான பாராட்டு விழா என்று இதை நடத்தியிருக்கிறார், நடிகர் விஜய். மாவட்ட வாரியாக மாணவர்களைத் தேர்வு செய்யாமல், 234 சட்டமன்றத் தொகுதிகளை மையமாக வைத்து, தொகுதி வாரியாக மாணவர்களை அடையாளம் கண்டு அணிதிரட்டியிருக்கிறது, விஜய் மக்கள் இயக்கத்தினர்.

அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொடுங்கள் !


சென்னை நீலாங்கரையில் ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற இவ்விழாவுக்கு மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் ஒருநாளுக்கு முன்னதாகவே வரவழைக்கப்பட்டிருக்கிறார்கள். வழக்கம்போல, குட்டி கதைகளை சொல்லாமல் ஏகப்பட்ட அட்வைஸ்களை வாரி வழங்கியிருக்கிறார், நடிகர் விஜய். அசுரன் பட டயலாக்கை சொல்லி கல்வியின் முக்கியத்துவத்தை சொன்னார். பெற்றோரை பிரிந்து மேல்படிப்புக்கு பிரிந்து செல்லும் மாணவர்கள் புது இடத்தில் கிடைக்கும் சுதந்திரத்தை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

இணையத்தில் கொட்டிக்கிடக்கும் பலவற்றிலிருந்து நல்லவைகளை மட்டும் தேர்ந்தெடு என்றார். அப்புறம், உன் ஓட்டை வைத்து நல்ல வேட்பாளரை தேர்வு செய் என்றார். ஓட்டுக்கு காசு வாங்காதே என்றார். அப்படியே, வீட்ல அப்பா, அம்மாகிட்டயும் சொல்லிடுனு சொன்னார். இதுவரைக்கு அவர் ஆடியோ லான்ச்ல சொன்னதையெல்லாம் மொத்தமா சேர்த்து சொன்னார். புதுசா என்ன சொன்னாருனு மட்டும் கேட்றாதீங்க. அவரு இந்த நிகழ்ச்சியை நடத்துனதே புதுசுதான்.

வீடியோ லிங்:

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

தொகுதி வாரியா தேர்வு செஞ்சதும் புதுசுதான். இந்தக்கூட்டத்துக்கு கொஞ்ச முன்னாடி, முக்கியமான தலைவர்களுக்கு அவங்களோடு பிறந்த நாளைக்கு மாலை போடனும்னு சொன்னார். இதுவும் புதுசுதான். தலை நரைச்சு சொட்ட விழுந்து அரசியலுக்கு வராம, 48-லேயே குதிச்சிடனும்னு முடிவுபன்னாரு பாருங்க அதுவும் புதுசுதான்.


கல்வி விருது விழா நடத்துனாரு, அதுல விஜய் இப்படி பேசினாருனு நிகழ்ச்சியோட உள்ளடக்கத்தையும் தாண்டி, மீடியா கொடுத்த முக்கியத்துவமும் இன்ச் பை இன்ச் கவரேஜ் செய்ததும் வித்தியாசமாகத்தான் இருந்தது. விஜய் வீட்டு கேட்டுக்கு முன்னாடி விஜய் ரசிகர்கள் போட்ட குத்தாட்டம் தொடங்கி, அவரு கார்ல கிளம்பினப்போ கூடவே ரசிகர்களும் ஓடிவந்தது… குனிஞ்சாரு, நிமிர்ந்தாருன்னு எல்லாமே சுவாரசியமான செய்திகளா மாறிப்போனது.

அதவிடக்கொடுமை, விழாவில் கலந்துகிட்டவங்களுக்கு காலையில என்ன சாப்பாடு போட்டாங்க? மதியம் என்ன போடப்போறாங்கனு? சாப்பாட்டு மெனுவைக்கூட ஒரு பரபரப்பு செய்தியாக்குனாங்க பாருங்க தமிழக மீடியாவை அடிச்சிக்க முடியாது போங்க. ஏதோ, ஒரு யூடியூப் சேனல் செய்திருந்தா பரவாயில்லை. தமிழகத்தின் முன்னணி ஊடகங்கள்னு பெயரெடுத்த செய்தி சேனல்களே இதைத்தான் செய்திருக்காங்க. அதுலயும் ஊடக பாரம்பரியத்தை கொண்ட செய்தி சேனல் ஒன்று அரங்கத்தில் உள்ள கிச்சனுக்குள்ளேயே புகுந்து, மதிய விருந்துக்கு என்ன சமைக்கிறாங்க? எப்படி சமைக்கிறாங்கனு லைவ்-வே போட்டிருக்காங்க.

விஜய் பங்சன்ல சுட்ட வடை வெந்து இருந்ததா? சாம்பார்ல உப்பு இருந்துச்சான்னு.. ஆராய்ச்சியும், வந்த ஆடியன்ஸ்கிட்ட கருத்தும்தான் கேட்கல. இந்த கொடுமையெல்லாம் எங்கே போயி சொல்லனு புரியல.

”விஜய் கல்வி விருது விழா”வா, விஜய் நடிச்சு வெளியாக போற படத்தோட புரோமோசன் விழாவானு பிரிச்சு பார்க்க முடியாத அளவுக்கு அதகளம் செஞ்சிட்டாங்கனுதான் சொல்ல தோணுது.

– இளங்கதிர்

வீடியோ லிங்:

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.