தமிழ்நாட்டை கதற விட்ட விஜய்!

உண்மையில் விஜய் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கி இருக்கிறார். அவரது ரசிகர்கள் மொழியில் சொல்ல வேண்டுமானால் தமிழ்நாட்டை கதற வைத்துக்கொண்டு இருக்கிறார்.

  1. சாட்டை முருகன் பேசுவதையும், மாரிதாஸ் பேசுவதையும் அவர்களை எதிர்ப்பவர்களும் பகிரும் சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறார்.
  2. பாஜக நாதகவையெல்லாம் லெப்ட் கேண்டில் செய்யவர்களை, தவெக குஞ்சுகளிடம் எப்படி பேசுவது என புரியாமல் நிற்க வைத்திருக்கிறார்.
  3. கடுமையான அரசியல் விமர்சனங்களை சந்தித்த ரஜினியின் அரசியல் விலகல் எத்தனை நேர்மையானது என்பதை விஜய் புரியவைத்திருக்கிறார்
  4. கமலஹாசன், அஜீத், சூர்யா, விஜயகாந்த் போன்றவர்கள் மனிதநேயமிக்கவர்கள் என்பதை புரிய வைத்து இருக்கிறார்.
  5. உண்மையில் மாஸ்டர் படத்தில் விஜய் செய்ய வேண்டிய கேரக்டர் பவானி தான் என்பதை நேற்று உணர வைத்து இருக்கிறார்!
  6. அரசு இயந்திரம் இயங்கவில்லை என்கிற கேள்விக்கு பழக்கப்பட்ட தமிழ்மக்களிடம் – அரசு இயந்திரம் ஏன் வேகமாக இயங்குகிறது என்கிற கேள்வியை கேட்டு திகைக்க வைக்கிறார்.
  7. பாஜகவை விட கேவலமான கட்சியை தமிழ்நாடு பார்க்காது என்று நினைத்தவர்கள் முகத்தில் கரியை பூசி இருக்கிறார்.
  8. இன்னும் ஒரு தேர்தலில் கூட போட்டியிடாத அங்கிகரிக்கபடாத ஒரு கட்சியை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு விஜய் தான் முதல் எதிரி என்று பேசி ஷாக் கொடுக்கிறார்.
  9. Rules and Regulations எங்களுக்கு கிடையாது, அப்படி இருந்தால் அது மீறப்படும் என்று வரும் சினிமா வசனத்தை நிஜவாழ்வில் தனது தொண்டர்களை உசுப்பேத்தி செய்ய வைத்து மாஸ் காட்டுகிறார்.
  10. சொப்பனசுந்தரி காரை போல விஜய்யும் விஜய் கட்சியும் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதை சஸ்பென்ஸாகவே வைத்திருந்து 41 பேரை சாகடித்திருக்கிறார்

மொத்தத்தில் விஜய் தமிழ்நாட்டை கதற விட்டுக்கொண்டு இருக்கிறார் 🔥🔥🔥

 

–  ராஜராஜன். RJ

Comments are closed, but trackbacks and pingbacks are open.