விஜயிடமிருந்து உங்கள் பிள்ளைகளை பாதுகாத்துக்கொள்ளுங்கள்… !
பெற்றோர்களே, சிறார் குற்றவாளிகளை உருவாக்கும் விஜயிடமிருந்து உங்கள் பிள்ளைகளை பாதுகாத்துக்கொள்ளுங்கள்… படத்திலுள்ள சிறுவன், (16 வயதிருக்கலாம்) எங்க விஜய் மீது தமிழக அரசு கை வைத்தால் தமிழ்நாட்டையே ப்ளாஸ்ட் பண்ணிடுவேன் என்று முதல்வரின் பெயரை சொல்லியே மிரட்டலாகப் பேசி ரீல்ஸ் விட்டிருக்கிறான்…
ப்ளாஸ்ட் என்ற சொல்லுக்கான வீரியம் அனைவருக்கும் தெரியுமென்று நம்புகிறேன். இதை பேசியதற்காக இவனை உள்ளே தூக்கிவைத்தால் இவனுடைய எதிர்காலம் மொத்தமும் கூர்நோக்கு இல்லம்… சிறைச்சாலை என்று தான் கழியும்… அதை புரிந்துகொள்ளும் பக்குவம் கூட இல்லை. இவனது நலன் கருதி வீடியோவை பதிவிடவில்லை…
இங்கே விஜய், இச்சிறுவனைப்போல் பல்லாயிரக்கணக்கானவர்களை உருவாக்கி வருகிறார் என்பதே பயங்கரமான உண்மை. தனது ரசிகர்களை அப்படியே ஓட்டரசியலுக்காக மாற்றும் எண்ணத்தில் தான் இப்போதுவரை திரைப்பட பாணியிலேயே பஞ்ச் டயலாக் அரசியலை பேசுகிறார்… அவர் ‘ஸ்டாலின் அங்கிள்’ என்று முதல்வரை நக்கலடித்துப் பேசியதால், இந்த சிறுவன், ஸ்டாலின் பெயரை சொல்லியே ப்ளாஸ்ட் பண்ணுவேன் என்று ரீல்ஸ் விடுகிறான். நாளுக்கு நாள் விஜயின் க்ரைம் ரேட் தான் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. விஜயின் வழக்கறிஞர் கேட்டுக்கொண்டபடி வீடியோக்களை பரிசோதனை செய்தால் அந்த உண்மை தான் பளிச்செனத் தெரிகிறது.
கட்டுக்கடங்காத கூட்டத்திலிருந்து, கூரைகளை பிய்த்துக்கொண்டு மேலேறி, தகர ஷெட் மீது வரிசையாக ஏறிச்செல்லும் விஜய் ரசிகர்களைக் காணமுடிகிறது… இப்படியான ரசிகர்களை உற்சாகப்படுத்த, தனது கேரவனின் லைட்டை ஒளிரவிட்டும், அணைத்துமாக வேடிக்கை காட்ட, கூட்டமே ஆர்ப்பரிக்கும் வீடியோவையும் காண முடிகிறது… அந்த வீடியோவில் விஜயின் உடல்மொழி குரூரமானது… தனது அடிமைகளின் மோதலை ரசிக்கும் ராஜாவின் உடல்மொழி அது!
திரும்பவும் பெற்றோர்களுக்குத்தான் ஆலோசனை சொல்கிறேன்,,, உங்கள் பிள்ளைகளை பாதுகாத்துக்கொள்ளுங்கள்… எதிர்காலம் சூன்யமாவதும், சூப்பராக அமைவதும் உங்கள் பொறுப்பான வளர்ப்பில் தான் இருக்கிறது… இன்னும் கொஞ்ச நாட்களிலேயே மீண்டும் பரப்புரையை விஜய் தொடங்குவார்… ஓடிடி, தொலைக்காட்சிகள் பெருகியுள்ள சூழலில் ஒரு நடிகனைக் காண்பதற்காக உங்கள் பிள்ளைகளை பலி கொடுக்காதீர்கள்… பிரச்சனையென்றால் ஓடி பதுங்கக்கூடிய இவரெல்லாம் அரசியல் தலவரே அல்ல!
– வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.