வானில் ஒரே நேர்கோட்டில் பறந்த விமானங்கள் ! வாயைப் பிளந்து நின்ற மக்கள் !
ஒரே நேரத்தில் மூன்று விமானங்கள் ஒரே கோட்டில்!
வானில் ஒரே நேர்கோட்டில் பறந்த விமானங்கள் ! வாயைப் பிளந்து நின்ற மக்கள் ! அங்குசம் !
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வானில் அதிசயமான காட்சி ஒன்று மக்கள் கவனத்தை ஈர்த்தது. ஒரே நேரத்தில் மூன்று விமானங்கள் ஒரே கோட்டில் தொடர்ந்து பறந்த காட்சி அங்கு இருந்த பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
பொதுவாக வானில் ஒரே பாதையில் விமானங்கள் பறப்பது அரிதாகவே நடைபெறும். ஆனால், மூன்று விமானங்கள் நேர்கோட்டில் பறந்த காட்சியை அங்கிருந்தவர்கள் தங்கள் கைப்பேசியில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். அந்த காணொளி தற்போது வைரலாகி, பல்வேறு வகையான கருத்துக்கள் வெளியாகி வருகிறது.
சிலர் இது விமான போக்குவரத்து துறையின் திட்டமிட்ட பறப்பாக இருக்கலாம் எனக் கூற, இன்னொருபுறம் திடீர் சம்பவம் போல தோன்றியதால் அச்சம் ஏற்பட்டதாகவும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
— மாரீஸ்வரன்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.