15 வயதில் 22 வயது பையனோடு காதல் ! கண்டித்த பெற்றோர் ! ஒரே வீட்டில் ஜோடியாக தூக்கிட்டு மாண்ட துயரம் !
இளம் காதல் ஜோடி தற்கொலை
விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கரிசல்குளத்தைச் சேர்ந்த ஆகாஷ் (22). இவர் பாலிடெக்னிக் படிப்பை முடித்து எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்தார். அதே ஊரைச் சேர்ந்த அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இவர்களின் காதலுக்கு மாணவியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தாகவும், சிறுமியை பள்ளிக்கு அனுப்புவதையும் நிறுத்தியுள்ளனர். இதில் மனமுடைந்த இளம் ஜோடி, இன்று (செப்-06) மாணவியின் வீட்டிலேயே யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஆலங்குளம் போலீஸார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி சாத்தூர் மற்றும் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து ஆலங்குளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பத்தாம் வகுப்பு படிக்கும் நிலையில் அதுவும் 15 வயதில் காதல் வயப்பட்டதும்; அதன் காரணமாக உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு போனதும் துயரில் ஆழ்த்தியிருப்பதோடு மட்டுமன்றி, இன்றைய இளைய தலைமுறையின் சிந்தனை போக்கு குறித்த அச்சத்தையும் தோற்றுவித்திருக்கிறது.
— மாரீஸ்வரன்







Comments are closed, but trackbacks and pingbacks are open.