‘விஸ்வம்பரா’ க்ளிம்ப்ஸ் ரிலீஸ்!
தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, த்ரிஷா, ஆஷிகா ரங்கநாத், குணால் கபூர், மெளனி ராய் உட்பட பலர் நடிக்கும் ‘விஸ்வம்பரா’ படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான யுவி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது. தெலுங்கின் பிரபல இயக்குனரான வசிஷ்டா டைரக்ட் பண்ணியுள்ள இப்படத்தின் ஒளிப்பதிவு : சோட்டா கே.நாயுடு, இசை : எம்.எம்.கீரவாணி, பீம்ஸ் சிசிரோலியா, தயாரிப்பு வடிவமைப்பு : ஏ.எஸ்.பிரகாஷ், பி.ஆர்.ஓ. : யுவராஜ்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் 2026 கோடை விடுமுறையில் ரிலீசாகப் போகும் ‘விஸ்வம்பரா’வின் க்ளிம்ப்ஸ் சிரஞ்சீவியின் பிறந்த நாளை முன்னிட்டு [ ஆகஸ்ட்.22] வெளியிடப்பட்டது.
— மதுரை மாறன்