அங்குசம் பார்வையில் ‘ வித்தைக்காரன்’ படம் எப்படி இருக்கு !..

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அங்கும் பார்வையில் ‘ வித்தைக்காரன்’. தயாரிப்பு: ‘ஒயிட் கார்பெட் ஃபிலிம்ஸ் ‘ கே.விஜயபாண்டி. டைரக்டர்: வெங்கி. ஆர்ட்டிஸ்ட்ஸ்: சதீஷ், சிம்ரன் குப்தா, ஆனந்த் ராஜ், சுப்பிரமணிய சிவா, மதுசூதன், ஜான் விஜய், பாவெல் நவநீதன், ஷாம்ஸ், ஜப்பான் குமார். டெக்னீஷியன்கள்: ஒளிப்பதிவு: யுவா கார்த்திக், இசை: வி.பி.ஆர், எடிட்டிங்: சித்தார்த் இளங்கோ, புரொடக்ஷன் கணட்ரோலர்: எஸ்.என்.அஷ்ரப், புரொடக்ஷன் எக்ஸ்கியூட்டிவ்: சுலைமான் ஹக்கீம். பிஆர்ஓ: சதிஷ் ( எய்ம்).

இரட்டையர்களான சதீஷின் அப்பா ஒரு மேஜிசியன். சிறு வயதிலேயே தன் மகன்களிடம் ” ஏமாறுவது தான் தப்பு. ஏமாத்துறது தப்பேயில்ல” என போதிக்கிறார். செய்யாத கொலைக் கேஸில் சிக்கி ஜெயிலுக்குப் போகிறார் சதீஷின் அப்பா. தங்கள் அப்பாவை ஜெயிலுக்குள் சிக்க வைத்த வில்லன்கள் மூன்று பேரை மாஜிக் வித்தை மூலம் பழிவாங்கும் கதையாக, சுவாரஸ்யமாக இருக்கும் என நம்ம நினைவு சுழல ஆரம்பிக்கிறது. ஆனால் ” ஒங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்ப தப்பு” என டைரக்டர் வெங்கி காமெடி டிராக்கில் திரைக்கதையை கொண்டு போகிறேன் பேர்வழி என கங்கணம் கட்டிக் கொண்டு களம் இறங்கியிருக்கார்.

Frontline hospital Trichy

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

ஆனால் ‘வெரி வெரி டெட் ஸ்லோ’ சீன்களால வித்தைக்காரனின் எந்த வித்தையும் எடுபடவில்லை. சதீஷ் ரொம்பவே திணறியிருப்பது ஏகப்பட்ட சீன்களில் பளிச்சென்று தெரியுது. நல்லா சிரிக்கக் கூடிய காமெடி என்றால் அது ஆனந்த ராஜ் வரும் சீன்கள் தான். சுப்பிரமணிய சிவாவும் மதுசூதனும் காமெடிக்கு வில்லனாகி, வில்லத்தனத்தை காமெடியாக்கிவிட்டார்கள்.

அப்புறம் ஹீரோயின் பேரு சிம்ரன் குப்தா. அத மட்டும் நோட் பண்ணிக்கங்க, அது போதும். தமிழ் சினிமாவின் அந்தக் காலத்து ஜேம்ஸ் பாண்ட் ஜெய்சங்கர் படத்தை நிறைய பார்த்திருப்பார் போல மியூசிக் டைரக்டர் வி.பி.ஆர். அதே டைப்ல பேக் ரவுண்ட் ஸ்கோரும் பண்ணிட்டார். இந்த வித்தைக்காரனிடம் எந்த கெத்தும் இல்லை.‌.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

–மதுரை மாறன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.