நீர் பாதுகாப்பும் பாலின சமத்துவமும் !
உலகளாவிய அளவில் அதிகரித்து வரும் தண்ணீர் நெருக்கடிக்கு மத்தியில், நீடித்த நீர் மேலாண்மையின் அவசியத்தை எடுத்துரைக்கும் வகையில், திருச்சி சேவை SEVAI அமைப்பின் சார்பில், 2026 மார்ச் 22 அன்று ஸ்ரீரங்கத்தில் உலக நீர் தினத்தைக் கொண்டாடியது.
“பொதுவில் அன்றாட பயன்பாட்டிற்கான தண்ணீர் சேகரிக்கும் பொறுப்பு பெண்கள் தலையில்தான் சுமத்தப்படுகிறது. குறிப்பாக, பள்ளி – கல்லூரி செல்லும் மாணவிகளின் கல்விச் சூழலை பாதிப்பதோடு, நீர்ப்பற்றாக்குறை அவர்களின் சுகாதாரத்தையும் சேர்த்தே பாதிக்கிறது” என்றார், சேவை தொண்டு நிறுவனத்தின் கூடுதல் இயக்குநர் சி. சுதா.
மேலும், ஐ.நா. முன்னெடுத்துவரும் “நீர் மற்றும் பாலினம்” என்ற கருப்பொருளுக்கு இணங்க, திருச்சி சேவை அமைப்பு OFI-யின் ஆதரவுடன் 100 கிராமப்புற குளங்களை புனரமைத்துள்ளது. மேலும், இயற்கை நீர் செறிவூட்டல் வழிமுறைகள், திறந்த கிணறு புனரமைப்பு மற்றும் ஆழ்துளைக் கிணறு ஆழப்படுத்துதல் ஆகியவற்றின் வழியாக பாசனம் மற்றும் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்தியுள்ளது.
இதனுடன் கூடவே, மரம் நடுதல் மற்றும் வேளாண் காடு வளர்ப்பு இயக்கங்கள் உள்ளிட்டு காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டங்களையும் சேவை SEVAI தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது என்பதையும் இந்நிகழ்வில் பதிவு செய்தார்கள். நிறைவாக,
சி. சுதாவிடமிருந்து செல்வி ஏ. காந்திமதி புனித நீரைப் பெற்றுக்கொண்டார். செல்வி கோகிலவாணி நன்றியுரை வழங்கினார். நீர் பாதுகாப்பு மற்றும் பாலின சமத்துவத்தையும் சேர்ந்தே வலியுறுத்திய நிகழ்வாக அமைந்தது.
— கிருஷ்








Comments are closed, but trackbacks and pingbacks are open.