மதுரை மத்திய சிறைக்கைதிகளால் இயற்கை உரங்களை பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட தர்பூசணி !
மதுரை மத்திய சிறைக்கைதிகளால் இயற்கை உரங்களை பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட தர்பூசணி பழங்கள் மதுரை மத்திய சிறை அங்காடியில் பொதுமக்கள் விற்பனைக்கு துவக்கம்
தென்மாவட்டங்களில் மிகமுக்கியமான சிறைச்சாலையாக விளங்ககூடிய மதுரை மத்திய சிறைநிர்வாகத்திற்கு கீழ் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் புரசடை உடைப்பு பகுதியில் திறந்தவெளி சிறைச்சாலை செயல்பட்டு வருகிறதுஅங்கு கொய்யா, மாதுளை, எலுமிச்சை, வாழை,தென்னை,பனை விவசாயமும், குறுங்கால பயிர்களாகிய காய்கறிகள், பழவகைகள், கீரை வகைகளும் பயிரிடப்படுகிறது.
இந்த நிலையில் சிறைவாசிகளின் பொருளாதார நலன்கருதியும் சிறை நிர்வாகத்தின் வருமானத்தை பெருக்கும் நோக்கோடு கடந்த இயற்கை உரங்களை பயன்படுத்தி இயற்கை முறையில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறதுஇந்த நிலையில் திறந்தவெளி சிறைச்சாலையில் பயிரிடப்பட்ட சுமார் 2 டன் தர்ப்பூசணி பழங்கள் மதுரை மத்திய சிறைச்சாலை வாயிலில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பொதுமக்களின் விற்பனைக்கு வந்துள்ளது.
கோடை காலம் நெருங்கிக் கொண்டிருப்பதால் பொதுமக்கள் மத்தியில் தர்பூசணி பழத்தின் தேவை அதிகரித்துள்ள நிலையில் சந்தை மதிப்பை விட 20 முதல் 30 சதவீதம் குறைவான விலைக்கு இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட தர்ப்பூசணி பழங்கள் சிறை நிர்வாகம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறதுதலா ஒரு தர்பூசணி பழம் 10கிலோ முதல் 13கிலோ வரை எடை இருக்கும் அளவிற்கு பழங்கள் பெரிதாகவும், தரமானதாகவும் இருப்பதால் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் விற்பனை நடைபெறுகிறது.
– ஷாகுல்
படங்கள் – ஆனந்த்