ஒரு அமைச்சர்களுக்கு எத்தனை உதவியாளர்-டென்ஷனான தலைமைச் செயலகம்!
ஒவ்வொரு அமைச்சர்களுக்கும் அரசு தரப்பில் ஒரு உதவியாளர் நியமிக்கப்படுகிறார். அவர்தான் அதிகாரப்பூர்வ உதவியாளராக செயல்படுவார். ஆனால் ஒவ்வொரு அமைச்சர்களும் தங்கள் மகன்களையும், உறவினர்களையும், நெருக்கமானவர்களையும், விசுவாசமானவர்களையும், உதவியாளரா ஏற்படுத்திக் கொள்கிறார்கள். அதுமட்டுமில்லாது சொந்த மாவட்டத்திற்கு ஒரு உதவியாளர், கட்சி நிர்வாகிகளை கவனிக்க ஒரு உதவியாளர், சென்னை அரசியலை பாக்க ஒரு உதவியாளர் என ஏகப்பட்ட உதவியாளரை வச்சிருக்காங்களாம்.
அதேசமயம் அமைச்சரின் ஒரு உதவியாளரே ஒரு நாளைக்கு பல சிபாரிசு கடிதம், பல போன் கால் என்று ஓய்வில்லாமல் உழைக்கிறார்களாம். ஒரு உதவியாளரே இவ்வளவு தீவிரமாக வேலை செய்ய, ஒவ்வொரு அமைச்சரும் ஏகப்பட்ட உதவியாளரை வைத்து இருப்பதால் ஒவ்வொரு துறையும் யாருக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியாம விழிபிதுங்கி உள்ளதாம்.
இந்த நிலையில் கல்வி ஆண்டு தொடக்கத்தில் மாணவர் சேர்க்கை நடந்த போது, ஆளாளுக்கு போன் அடிச்சு நான் அமைச்சரோடு பிஏ பேசுறேன், நான் அமைச்சரோடு உதவியாளர் பேசுறேன்….. என்று சொல்லி ஸ்கூல் சீட்டுக்கும், காலேஜுக்கும் பெரிய அளவில் மல்லு கட்டு நாங்கலாம்.
இதெல்லாம் தற்போது முதல்வர் காதுக்கு போக யார் யாரெல்லாம் அமைச்சர் பிஏ என்று சொல்லிக்கிட்டு சுத்துறாங்களோ அவங்க எல்லாரையும் விசாரிக்க சொல்லிவிட்டாராம் முதல்வர்.