திமுக கூட்டணியில் தொடங்கிய விரிசல்-சிக்கலில் தொகுதிப் பங்கீடு!

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை அனைத்தையும் ஒவ்வொரு கட்சிகளும் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே அதிமுக கூட்டணியில் உள்ள பாமக தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது, தொடர்ந்து தேமுதிக அறிவித்தது. இது அதிமுகவிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. சரி எதிர்க்கட்சித் தரப்பு தான் இப்படி இருக்கிறது. என்று பார்த்தால் ஆளும்கட்சி தரப்பின் நிலையோ அதைவிட மோசமாக உள்ளதாம்.
ஊரக உள்ளாட்சி காண தொகுதி பங்கீடு குறித்து ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களும் கூட்டணிக் கட்சியின் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்து வருகின்றனர். இப்படி இப்ப தேர்தல் நடக்க உள்ள பெரும்பான்மையான மாவட்டங்களில் கூட்டணிக் கட்சிகளுடன் திமுக சரியாக ஒத்துப் போகலையாம். அதிகமான சீட்டில் திமுகவே போட்டிப் போட முயற்சி பண்ணுதாம். அதனால கூட்டணியில் இருக்கிற காங்கிரஸ், இரண்டு கம்யூனிஸ்ட்கள், விசிக உள்ளிட்ட கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளார்களாம்.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

மேலும் மாவட்ட நிர்வாகிகள் மாநில நிர்வாகிகளுக்கு இது குறித்த தங்களுடைய ஆதங்கங்களை வெளிபடுத்தி இருக்காங்களாம். கூட்டணியில் இருக்கும் கட்சிகள் வலுவாக இருக்கக் கூடிய பகுதியில் கூட ஒன்னு, ரெண்டு, மூணு என்று சீட்டு கொடுத்த எப்படி சரிவரும் என்று திமுகவினர் நடத்திய பேச்சுவார்த்தையில் கூட்டணிக் கட்சிகள் சொல்லி இருக்காங்களாம்.

நீங்கள் வேலை பெறுவது எளிது...

மேலும் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு வரை எல்லாமே சுமூகமாக போச்சு, ஆனா சட்டமன்றத் தேர்தல் தொகுதிப் பங்கீட்டில் தொடங்குன மனகசப்பின் தொடர்ச்சியா தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தல் தொகுதி பங்கீடு வரையும் மனக்கசப்பு ஏற்பட்டு இருக்கு..‌. என்று கூட்டணி கட்சிகள் புலம்புராங்கலாம்.

3

இப்படி 9 மாவட்ட தொகுதி பங்கீடு குறித்து ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளுக்குள்ளும் பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருக்கும்போது மனக் கசப்பு ஏற்பட்டதால், உடனே திமுக 20 ஆம் தேதி எதிர்க்கட்சிகள் நடத்த உள்ள போராட்டத்திற்கு தயாராகுங்கள் என்று சொல்லி பிரச்சனைக்கு தற்போது ரெஸ்ட் விட்டி உள்ளதாம்.

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.