எது அவசியம்: கலவரமா? வேலைவாய்ப்பா?
மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் கிடையாது என்று மறுத்தது பா.ஜ.க. அரசு. மதுரை விமான நிலையத்தின் தரம் உயர்த்துவதிலோ-விரிவாக்கப் பணிகளிலோ அக்கறை செலுத்தவில்லை ஒன்றிய பா.ஜ.க. அரசு. எய்ம்ஸ் மருத்துவமனையையும் இன்னும் கட்டி முடிக்கவில்லை. மதுரையின் வளர்ச்சிக்கான நியாயமான கோரிக்கைகள் எல்லாவற்றையும் புறக்கணித்துவிட்டு, மதுரை திருப்பரங்குன்றத்தில் முறைப்படி தீபம் ஏற்றிய பிறகும் வம்பு வளர்த்துக் கொண்டிருக்கிறது பா.ஜ.க. கூட்டம்.
அதேநேரத்தில், மதுரையின் பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு வருகின்ற ஞாயிற்றுக்கிழமை TN Rising என்கிற முதலீட்டாளர் மாநாட்டை நடத்துகிறது தமிழ்நாடு அரசு. ஏற்கனவே ஓசூர், கோவை ஆகிய நகரங்களில் TN Rising மூலம் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்த்து வேலைவாய்ப்புகளுக்கு வழிவகுத்துள்ள நிலையில், மதுரையையும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களையும் முன்னேற்றும் வகையில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. மதுரை மாட்டுத்தாவணியில் டைடல் பார்க்கை அமைத்து வருகிறது திராவிட மாடல் அரசு.
புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்ட ஒன்றரை ஆண்டுகளில் தூத்துக்குடியில் தனது நிறுவனத்தை அமைத்து, உற்பத்தியையும் தொடங்கியுள்ள வியட்நாம் நாட்டின் மின்வாகன நிறுவனமான வின்ஃபாஸ்ட், கூடுதலாக சுமார் 4500 கோடி ரூபாய் (500 மில்லியன் டாலர்) விரிவாக்க முதலீட்டிற்கான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. பேட்டரி கார்களைத் தயாரித்து வரும் தூத்துக்குடி வின்ஃபாஸ்ட் நிறுவனம், இந்த புதிய ஒப்பந்தத்தின் மூலம் பேட்டரியில் இயங்கும் பேருந்துகளையும், டூவீலர்களையும் உற்பத்தி செய்யவிருக்கிறது.
ஏற்கனவே செயல்பட்டு வரும் பேட்டரி கார் தொழிற்சாலையில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள்-இளம்பெண்களுக்கு தமிழ்நாடு அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் தனது துறைகளுக்கேற்ற பயிற்சிகளை அளித்து, 200 பேரை வேலைக்கு எடுத்துள்ள வின்ஃபாஸ்ட் நிறுவனம், தனது விரிவாக்கத் திட்டத்தின் மூலம் தென்மாவட்டங்களைச் சேர்ந்த மேலும் பலருக்கு வேலைவாய்ப்பை வழங்கவுள்ளது.
பா.ஜ.க.வின் கலவர அரசியலைத் துணிவுடன் தடுத்த திராவிட மாடல் முதலமைச்சர், அந்தக் கலவரக் கூட்டத்திடம் இளைஞர்கள் பலியாகாமல் இருக்க வேலைவாய்ப்புகளையும் உருவாக்கித் தருகிறார்.
மதுரைக்கு அவசியம் கலவரமா? வேலைவாய்ப்பா?








Comments are closed, but trackbacks and pingbacks are open.