ராமநாதசுவாமி கோயில் இணை ஆணையாளர் ஆகம விதிகளை மீறுகிறாரா ?
பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடு ராமநாதசுவாமி கோயில் இணை ஆணையாளர் ஆகம விதிகளை மீறுகிறாரா ?
மக்கள் பாதுகாப்பு பேரவை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் இணை ஆணையரை மாற்றக்கோரி மக்கள் பாதுகாப்பு பேரவை அமைப்பினர் இணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 187 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயில் இணை ஆணையர் பொறுப்பில் இருந்து நிலையில் கோயில் தரம் குறைக்கப்பட்டு துணை ஆணையர் பொறுப்பாக மாற்றப்பட்டு அதற்கான அதிகாரியாக மாரியப்பன் நியமிக்கப்பட்டார்.
இதனையடுத்து, பொறுப்பேற்ற நாள் முதல் ஆகம விதிகளை மீறி செயல்படுவதாக தொடர்ந்து உள்ளுர் பொதும்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.உள்ளுர் பொதுமக்கள் வழக்கமாக தரிசனம் செய்யும் பாதை அடைக்கப்பட்டது. பக்தர்கள் தரிசனம் செய்யபவர்களுக்கான கட்டடம் அதிகரிப்பு,பெண்களை கொண்டு தேங்காய் உடைப்பது. பக்தர்களுக்கு பிரசாரம் வழங்க மறுப்பது. சுவாமி சிலைகளை பராமரிப்பு மேற்கொள்ளாமல் இருப்பது. சேதமடைந்த சுவாமி சிலைகளை சீரமைப்பணிகள் மேற்கொள்ளாமல் இருப்பது போன்ற செயல்பாடுகள் காரணமாக தொடர்ந்து தமிழ்நாடு முதல்வர்,அந்து சமய அறநிலைத்துறை அமைச்சருக்கு பல முறை புகார்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனை கண்டித்தும், ஆகம விதிகளை மீறி செயல்படும் இணை ஆணையர் மாரியப்பனை மாற்றக்கோரி மக்கள் பாதுகாப்பு பேரவை சார்பில் இணை ஆணையர் அலுவலகத்தை செவ்வாய்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து, காவல்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் போராட்டத்தை கைவிட மறுத்ததால் போராட்டத்தில் ஈடுபட்ட 187 பேரையும் கைது செய்து தனியார் மகாலுக்கு அழைத்து சென்றனர்.
இந்தப் போராட்டத்தில் மக்கள் பாதுகாப்பு பேரவை நிர்வாகிகள் என்.ஜே.போஸ், சி.ஆர். செந்தில்வேல் பிரபாகரன், குருசர்மா அதிமுக நகர செயலாளர் அர்ஜுனன் அவை தலைவர் பிச்சை, பாஜக நகர் தலைவர் ஸ்ரீதார், காங்கிரஸ் கட்சி நகர் தலைவர் ராஜீவ் காந்தி, தேமுதிக நகரத் தலைவர் முத்து காமாட்சி, நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் கண.இளங்கோ, மக்கள் நீதி மையம் நகர செயலாளர் ராமகிருஷ்ணன், வாழ்வுரிமை இயக்க மாநில இளைஞரணி செயலாளர் சரவணகுமார், ராமகிருஷ்ணாபுரம் குடில் சுவாமி பிரம்மானந்தா, வடகொரியா மற்றும் பல்வேறு சிவனடியார் குழுக்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
-பாலாஜி