அமைச்சர் செந்தில்பாலாஜி மீது விசாரணை – கைது – கதறல் – தற்போது வரை லைவ் ரிப்போர்ட் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அமைச்சர் செந்தில்பாலாஜி கைது – கதறல் – மருத்துத்துவமனை அடுத்தடுத்து என்ன ? லைவ் ரிப்போர்ட் !

போக்குவரத்து துறையில் வேலைவாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட  வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சென்னை வீடு , கரூர் வீடு என 10க்கு உள்பட இடங்களில் நேற்று 13.06.2023 காலை முதல் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வந்தனர்.

துணை முதலமைச்சர் உதயநிதி வாழ்த்து

தலைமை செயலகத்தில் 10 மணி நேரம் சோதனை நடந்தது. அலுவலக உதவியாளர் விஜயகுமாரை அழைத்துக் கொண்டு அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். முக்கிய ஆவணங்கள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் அறையில் உள்ளதா? என்பதை கண்டறிய அதிகாரிகள் சோதனை செய்தனர்.

சோதனையின் போது… தலைமை செயலாளர் இறையன்புவிற்கு போன் செய்து முதல்வர் ஸ்டாலின் பேசி உள்ளார். நிலைமை எப்படி இருக்கிறது, என்னென்னெ அறைகளில் சோதனை நடக்கிறது. விதி மீறல்கள் செய்யப்படுகிறதா என்று முதல்வர் ஸ்டாலின் போனில் ஆலோசனை செய்து உள்ளார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

இந்த நிலையில் 20 மணி நேர விசாரணைக்குப் பிறகு 14.06.2023 இன்று நள்ளிரவு அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீரென கைது செய்தனர். அமலாக்கத் துறை விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட இருந்த நிலையில் நெஞ்சுவலியால் கதறி அழுதார் அமைச்சர் செந்தில்பாலாஜி. மருத்துவர்களை அழைத்து வர சொன்னார்.

இதனையடுத்து, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அங்கு அமைச்சர்கள் உதயநிதி, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு , கே.என்.நேரு ஆகியோர் வந்து சேர்ந்தனர். ஓமந்தூரார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவர் கைது செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கரூரில் இருந்து புறப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் செந்தில்பாலாஜியை பார்த்து விட்டு வெளியே வருபவர்கள் கைது குறித்து…  பேசும் போது…

மிசாவையே பார்த்தவர்கள் நாங்கள்.. – அமைச்சர் உதயநிதி

மத்திய அரசின் உருட்டல், மிரட்டல்களுக்கு மிசாவையே பார்த்த திமுக ஒருபோதும் அஞ்சாது – ஓமந்தூரார் மருத்துவமனையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி.

அமைச்சர் துன்புறுத்தப்பட்டுள்ளார் – சேகர்பாபு

அமைச்சர் செந்தில் பாலாஜி ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  சுய நினைவில்லாமல் உள்ளார். நான்கு ஐந்து முறை பெயர் சொல்லி அழைத்தபோதும் அவர் கண் திறந்து பார்க்கவில்லை. அவர் காது அருகே வீக்கம் உள்ளது. நிச்சயமாக துன்புறுத்தப்பட்டிருப்பார்.

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சலசலப்புகெல்லாம் எல்லாம் திமுக அஞ்சாது. இது போன்ற பல சோதனைகளை திமுக பார்த்துள்ளது. பயம் கிடையாது.

அமைச்சர் கே.என்.நேரு பேசும் போது…. அமைச்சர் செந்தில் பாலாஜியை நேரில் சந்தித்தேன். அவரால் பேச முடியவில்லை. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒரு மணி நேரம் காத்திருந்து பின்பு அனுமதி வாங்கி பார்த்தேன். துணை ராணுவ படையினர் கட்டுப்பாட்டில் மருத்துவ அறை உள்ளது. தொடர்ச்சியாக மருத்துவ குழுவினரிடம்  உடல் நலம் குறித்து மா.சுப்பிரமணியன் கேட்டறிந்து வருகிறார்.

செல்வப்பெருந்தகை பேசும் போது…  தமிழ்நாட்டிலும் பழிவாங்கும் படலத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது ஜனநாயக சக்திகளுக்கு எதிரானது. எதற்கெடுத்தாலும் கைது நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்கிறது என காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர்

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்ட தகவல், அமலாக்கத் துறையில் இருந்து சட்டப்பேரவை செயலத்திற்கு, கைது செய்யப்பட்டது தொடர்பான தகவல்கள் மற்றும் வழக்குகள் தொடர்பான நடவடிக்கைகளை தெரியப்படுத்த வேண்டும்.

பாஜகவுக்கு எதிராக முதலமைச்சர் இருப்பதால் திமுக அரசி பலவீனப்படுத்தவும், ஆட்சியை சீர்குலைக்க முயற்சி செய்வதாகவும் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் அழகிரி குற்றச்சாட்டு

பாஜக அரசை ஆதரித்து, மாநில அர்சு இயங்கி வந்தால், உச்சநீதிமன்ற தீர்ப்பையும் அவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள். ஆனால் தமிழக அரசு ஆளுநர் ஆர்.என்.ரவியையும், மத்திய அமைச்சர் அமித் ஷாவையும் கொள்கை அடிப்படையில் கடுமையாக விமர்சித்து வருகிறார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், கைது நடவடிக்கை மூலம் முதலமைச்சருக்கு அச்சுருத்தும் நோக்கத்தில் மத்திய ஆட்சியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இது திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல். இதை விடுதலை சிறுத்தைகள் கட்சி கடுமையாக கண்டிக்கிறது என விசிக தலைவர் திருமாவளவன் குற்றச்சாட்டு 

இந்தியாவின் பல மாநிலங்களில் பாஜக இது போன்று பழிவாங்கும் செயல்களை ஈடுபட்டு வருவதை நாம் பார்த்து வருகிறோம். இதைவிட பெரிய சவால்களை எல்லாம் நாங்கள் கடந்து வந்தவர்கள். மிசாவையே பார்த்தவர்கள். முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பாஜகவின் பழிவாங்கும் செயல்களை முறியடிப்போம். என்கிறார் அமைச்சர் பொன்முடி

அமைச்சர் பதவியிலிருந்து செந்தில்பாலாஜியை நீக்க  வேண்டும்.  இல்லாவிடில் ஆளுநர் தலையிட்டு செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்  – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

அமலாக்கத் துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம். மோடி அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையே ஆகும் எனவும் விமர்சனம்

செந்தில்பாலாஜி இலாக்கா மூத்த அமைச்சருக்கு ஒதுக்க முடிவு !

அதைத் தொடர்ந்து அந்த தகவல்கள் சபாநாயகருக்கு தெரியப்படுத்தப்படும். அவை நடைபெறும் பட்சத்தில் அந்த தகவல்கள் உடனடியாக அவையில் தெரிவிக்கப்படும். சட்டமன்ற கூட்டம் தற்போது நடைபெறாத நிலையில், அமைச்சரின் கைது நடவடிக்கை தொடரும் பட்சத்தில் ஐந்து நாட்களுக்குள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தப்படும்.. அதேபோல் ஜாமீன் உள்ளிட்ட நடைமுறைகள் தாமதமாகும் பட்சத்தில், அமைச்சரின் இலாகாக்கள் மூத்த அமைச்சர்களுக்கு கூடுதலாக கவனிப்பதற்காக ஒதுக்கப்படும்.

கரூர் மாவட்ட முழுவதும் போலிஸ் கட்டுபாட்டில் 

அமலாக்கத்துறை சோதனையை அடுத்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதன் எதிரொலியாக அமைச்சரின் சொந்த ஊரான கரூரில் பல்வேறு இடங்களில் போலீசார் குவிப்பு.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தந்த காவல் நிலையங்களில் போலீசார் தயார் நிலையில் இருக்க மாவட்ட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவு.

மேலும், கரூர் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மாவட்ட பாஜக அலுவலகம், கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களுக்கு உச்சபட்ச சிகிச்சை உறுதிப்பட வேண்டும். எனவே AIIMS குழு சென்னைக்கு அனுப்பப்பட வேண்டும் என்பது என் கருத்து தெரிவித்துள்ளார்.

சில நாட்கள் மருத்துவ கண்காணிப்பு அவசியம் !

செந்தில் பாலாஜி உடல்நிலை தொடர்பாக ஒமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பிரத்யேக தகவல் அளித்துள்ளனர், “செந்தில் பாலாஜி உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவமனையில் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்ட போது அவருடைய உயர் ரத்த அழுத்தம் 160/100 ஆக இருந்தது. இதய துடிபப்பில் மாற்றம் இருந்தது.

ECG யில் சில மாறுதல்கள் இருந்ததால் அவருக்கு மாரடைப்பு வராமல் இருக்க ICUவில் அனுமதிக்கப்பட்டார். மாரடைப்பு ஏற்படாமல் தடுப்பதற்கான சிகிச்சைகள் அவருக்கு அளிக்கப்பட்டு வருகின்றது

இதய செயல்பாடு இயல்பான நிலைக்கு திரும்பும் வரை ஓரிரு நாட்கள் மருத்துவக் கண்காணிப்பு தேவை. இரண்டு, மூன்று நாட்கள் தங்கி சிகிச்சை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.

போக்குவரத்துத்துறை ஊழல் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் மே 16ஆம் தேதி உத்தரவின்படி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார் என அமலாக்கத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.

அமலாக்கத்துறையின் பிடியில் இருப்பதால் கைதா ? விசாரணையா என்றே தெரியவில்லை

அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, அமைச்சர் செந்தில் பாலாஜியை பார்க்க அமலாக்கத்துறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.

காரணம் எதுவும் சொல்லாமல் அவரை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். உறவினர்கள், நண்பர்கள் யாரிடமும் அதிகாரிகள் எதுவும் சொல்லவில்லை. விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டாரா அல்லது கைது செய்யப்பட்டாரா என்பது குறித்து உறுதியாக அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.

கைது நடவடிக்கை என்றால் அதற்குரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. எந்த வழக்குக்காக விசாரணை நடத்தப்பட்டது என்பது தொடர்பாக அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வோம். கட்சித் தலைமையுடன் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும். செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையின் பிடியில் இருப்பதால் முன் ஜாமீன் தாக்கல் செய்ய முடியாத நிலை உள்ளது’ அதே நேரம் மருத்துவமனையில் அமலக்காதுறையின் கட்டுபாட்டில் உள்ளதால் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டாரா ? அல்லது விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டரா என்பதே இன்னும் வெளிப்படையாக அமலாக்க துறையினர்.. சொல்ல மறுத்து வருகின்றனர் என்றார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் ஆலோசனை

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு சந்தித்து ஆலோசனை. முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவும் வருகை.

அதிமுக ஆட்சிகாலங்களில் நடைபெற்ற ஊழல் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தண்டிக்கப்பட்ட, இந்திரகுமாரி, செல்வகணபதி, பொன்னுசாமி, வரிசையில் செந்தில்பாலாஜியும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது..

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.