அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

ஆச்சரியத்தில் ஆழ்த்திய வெள்ளை நிற சிவிங்கி பூனை!

திருச்சியில் அடகு நகையை விற்க

ஸ்பெயினில் புகைப்படக் கலைஞர் ஒருவரின் கேமராவில் சிக்கிய அரிய வகை வெள்ளை ஐபீரியன் லின்க்ஸின் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பொதுவாக இருக்கும் ஐபீரியன் லின்க்ஸ் இனங்கள் பழுப்பு நிறத்தில் கரு நிற புள்ளிகளுடன் காணப்படும். ஆனால் தற்போது ஸ்பெயினில் உலகின் மிகவும் அரிதான பூனை இனங்களில் ஒன்றான ஐபீரியன் லின்க்ஸ் (Iberian Lynx) முதல் முறையாக வெள்ளை நிறத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த சிவிங்கி பூனை, உலகெங்கிலும் உள்ள விலங்கு ஆர்வலர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

வெள்ளை நிற சிவிங்கி பூனை
வெள்ளை நிற சிவிங்கி பூனை

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

தற்போது தென்பட்டிருக்கும் இந்த பூனை ‘லூசிசம்’ (Leucism) எனப்படும் அரிய மரபணு மாற்றத்தால் வெள்ளை நிற உரோமத்துடன் காணப்படுகிறது. ஆனால் அதன் கண்களின் நிறம் சாதாரணமாகவே உள்ளது. ஐபீரியன் லின்க்ஸ் இனம் முற்றிலுமாக அழியும் தருவாயில் இருந்தது. வேட்டையாடுதல் மற்றும் வாழ்விட அழிப்பு போன்ற காரணங்களால், 2002 ஆம் ஆண்டில் இவற்றின் எண்ணிக்கை வெறும் 100-க்கும் கீழ் இருந்தது. இதனால் உலகின் அழிந்துவரும் உயிரினங்கள் பட்டியலில் இது சேர்க்கப்பட்டது. பல்வேறு விலங்கு நல அமைப்புகள் இணைந்து இந்த இனத்தைக் காப்பாற்ற தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்ட பின் இவற்றின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

 

 —    மு. குபேரன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.