காதல் லீலை வீடியோ வெளியிட்ட கறுப்பு ஆடு யார்?
திருச்சி சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் எஸ்எஸ்ஐயாக இருந்தவர் பாலகிருஷ்ணன்.(54). இவர் கடந்த 12ம் தேதி ஸ்டேஷனில் இரவுப் பணியில் இருந்த முதல்நிலை காவலர் சசிகலா(34), என்பவருக்கு முத்தம் கொடுத்தார்.
அப்போது அங்கு தற்செயலாக வந்த தனிப்பிரிவு ஏட்டு கேசவனிடம் சசிகலா இது குறித்து புகார் தெரிவித்தார். இதையடுத்து அவர் சசிகலாவின் புகாரை எஸ்பிக்கு அனுப்பினார்.
இதைத் தொடர்ந்து, பாலகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் இவர்கள் இருவரும் ஸ்டேஷனில் முத்தம் பரிமாறிக் கொண்ட வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஸ்டேஷனில் இருந்த இந்த வீடியோ பதிவு விசாரணைக்காக எஸ்பியிடம் அளிக்கப்பட்டது. அந்த பதிவு தற்போது வெளியானது அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எஸ்பி அலுவலகம் மூலம்தான் இது வெளியாகி இருக்கும் என்று உயர் அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் முத்தம் கொடுத்த எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் மீது வழக்கு பதிய சொல்லியிருக்கிறார்கள் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. சசிகலா மீதான விசாரணை தொடர்ந்து கொண்டிருக்கிறது என்கிறார்கள் காவல்துறை வட்டாராங்கள்.