அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

Why Stalin is more dangerous?

திருச்சியில் அடகு நகையை விற்க

திராவிட இயக்கத் தலைவர்களின் உரைகள் வடமாநிலங்களில் இந்தியில் மொழிபெயர்க்கப்படுவது 60 ஆண்டுகளுக்கு முன்பே நிகழ்ந்துள்ளது. தந்தை பெரியாரின் வடமாநில சுற்றுப்பயணங்களின்போது அவரது பகுத்தறிவுப் பரப்புரை ஆங்கிலத்திலும் இந்தியிலும் மேடையில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஒரு சில மேடைகளில் பெரியாரும் ஆங்கிலத்தில் உரையாற்றியிருக்கிறார்.
ஆசிரியர் அய்யா வீரமணி அவர்கள் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, வடமாநிலங்களில் தொடர் பரப்புரை செய்தபோது, அவரது ஆங்கில உரை இந்தி, பஞ்சாபி, மராத்தி உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.

1995ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர்கள் கன்ஷிராமும் மாயாவதியும் முன்னெடுத்த 3 நாள் ‘பெரியார் மேளா‘ நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர்களின் உரைகள் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டன. தேசிய முன்னணி உருவாக்கப்பட்ட பிறகு, வடமாநிலத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் கலைஞர், “என்னை தேசவிரோதி என்கிறார்கள். சொல்பவர்கள் யார் தெரியுமா?” என்று கேட்டு, அவர் பேசிய உரை வரலாற்று சிறப்புமிக்கது.

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

மேடை பேச்சுக்கும் தலைமை பண்புக்கும் சம்பந்தம் கிடையாது - தந்தை பெரியார் |  Periyar Speech on Stage Speech and orators - Tamil Oneindiaதிராவிடர் கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் மாநில அளவிலான இயக்கங்கள்தான். அவற்றின் கொள்கைகள் உலகெங்கும் வாழும் மக்களுக்கான சமூகநீதியையும் சமத்துவத்தையும் வலியுறுத்துபவை. தேர்தல் அரசியல் களத்தில், ஜனநாயகத்தைக் காக்கின்ற பெரும் போராட்டச் சூழலில் பீஹார் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, ராஷ்ட்ரிய ஜனதாதளத் தலைவர் தேஜஸ்வி உள்ளிட்டோருடன் களமிறங்கிய தி.மு.கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அங்கு ஆற்றிய உரை இந்திய மக்கள் மனதின் எதிரொலியாக இருந்தது. அதனை மிக நேர்த்தியாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் இந்தியில் மொழி பெயர்த்தவர் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநிலப் பொதுச்செயலாளரான வழக்கறிஞர் அலிம் அல்புகாரி.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

61 ஆண்டுகளில் ஒரு தேர்தலில் தோல்வியடையாத கலைஞர் கருணாநிதி - இந்தியா டுடேபெரியாரின் வடமாநிலப் பரப்புரையின்போது அவரது பகுத்தறிவுக் கருத்துகளுக்கு சில இடங்களில் எதிர்ப்பு வெளிப்பட்டிருக்கிறது. ஆனாலும், பெரியார் துணிச்சலாகத் தன் கருத்துகளை எடுத்துரைத்தார். பின்னர், ஆசிரியர் வீரமணி அய்யா கலந்து கொண்ட வடமாநிலக் கூட்டங்களில், ‘பெரியார் ஜிந்தாபாத்’ என்று அங்குள்ளவர்கள் வாழ்த்தி முழங்கினர்.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

ஒரு முறை கலைஞர் வடமாநிலங்களில் பேசச் சென்றபோது, “இராமனின் எதிரியே…” என்று அவரை விமர்சித்து எழுதியிருந்தார்கள். “இராமனின் எதிரி நானல்ல, இராவணன்” என்று தனக்கேயுரிய பாணியில் பதிலடி கொடுத்தார், “இராவணன் எங்கள் பாட்டன்’ எனக் கவிதை எழுதிய கலைஞர். இப்போது கலைஞரின் புதல்வர்- ஜனநாயகக் காவலர்- கழகத் தலைவர் அவர்கள் பீஹாரில் பேசியபோது, அவரது உரையின் இந்தி மொழியாக்கத்தைக் கேட்டு, ‘ஜிந்தாபாத்.. ஜிந்தாபாத்’ என்று அவரை வாழ்த்தினார்கள் பீஹார் மக்கள்.

DMK Story Of M K Stalin | "மாநகரத் தந்தை" முதல் "தமிழக முதல்வர்" வரை - மு.க. ஸ்டாலின் குறிப்புகள் | | Tamil Nadu News in Tamilமுத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இன்று எல்லா மாநிலங்களுக்கும் தேவைப்படுகிறார். அதனால்தான் எதிரிகள், Stalin is more dangerous than Karunanidhi என்று கதறுகிறார்கள்.

7 ஆண்டுகளுக்கு முன் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார். இன்று இந்தியாவின் நம்பிக்கைக்குரிய தலைவர்களில் ஒருவராக- பாசிச பா.ஜ.க.வுக்கு எதிரான ஜனநாயகப் போர்க்களத்தின் தளபதியாக உயர்ந்து நிற்கிறார். டெல்லியைத் தந்திர பூமி என்றார் முத்தமிழறிஞர் கலைஞர். அந்த தந்திரக்காரர்களை அம்பலப்படுத்தும் வகையில் வெற்றிகரமான வியூகங்களை வகுத்து செயல்படுகிறார் கலைஞரின் புதல்வர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.