திருச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி திடீர் மாற்றம் ஏன்?
திருச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி திடீர் மாற்றம் ஏன்?

திருச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி மாற்றம் திருச்சி மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் வன்முறை நிகழ்விலிருந்து பாதுகாத்து அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையிலும் மேலும் பாலியல் துன்புறுத்தல் கைவிடப்பட்ட குழந்தைகள் ஆகியோரை மீட்டெடுத்தல் போன்ற பணிகளை இத்துறை மூலம் செய்துவருகின்றனர்.
சமீபத்தில் ஒப்பந்த அடிப்படையில் இதன் அதிகாரியாக இருந்து வந்தவர் கீதா. இவர் தற்போது தமிழக அரசின் சமூக பாதுகாப்பு துறை மூலம் வெளியிடப்பட்ட மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் மாற்றம் லிஸ்டில் இவருடைய பெயரும் வந்துள்ளது. காரணம் இவருடைய பதவி காலம் முடிவடைந்ததால் இவருக்கு பதிலாக இப்பணி நிரப்பப்பட உள்ளது.
மேலும் இவருக்கு பதிலாக இளஞ்சிறார் கூர்நோக்கு இல்லத்தின் கண்காணிப்பாளர் யோவான் கூடுதலாக இத்துறையையும் கவனித்து வருகிறார்.
செய்தி – ஜித்தன்