திருவாரூர் தேர்தல் ரத்து ஏன் ? உளவுத்துறையின் பகீர் தகவல் !
திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
வரும் 28ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதனை எதிர்த்து மனு செய்யப்பட்டிருந்ததன் காரணமாக
தமிழக தலைமை தேர்தல் அதிகாரியின் அறிக்கையை தலைமை தேர்தல் ஆணையம் கேட்டிருந்தது. இதன் அடிப்படையில் தேர்தல் ரத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த இடைத்தேர்தலை தள்ளி வைக்க அதிமுக, திமுக, கம்யூ. கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தன என்பது குறிப்பிடதக்கது.
இன்றைக்கு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு வருகிற நிலையில் தேர்தல் கமிஷன் தன்னிச்சையாக இந்த முடிவு எடுத்தது ஏன்?
மத்திய அரசு காரணமா? அல்லது மாநில அரசா?
தேர்தல் அறிவிக்கும் போது கஜா நிவாரண நடைமுறை தேர்தல் ஆணையத்துக்கு தெரியாதா?
இன்று சுப்ரீம் கோர்ட்டில் 3 வழக்குகள் வருகின்றன. கோர்ட் தடை விதிக்காது என்று தேர்தல் ஆணையம் பயந்து இருக்கிறது. எனவே தான் அது தன்னிச்சையாக தேர்தலை ரத்து செய்து அறிவித்திருக்கிறது.
ஆணையத்தை நம்பி டெபாசிட் பணம் கட்டிய சாமான்யர்களின் நிலை. அரசியல்வாதிகளை விட பரிதாபம்.
,
தேர்தல் ரத்துக்கு காரணம் உளவு துறை கொடுத்த ரிப்போர்ட் அப்படி…..
திமுக 40 ல் இருந்து 45 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெரும்..டி டி வி இரண்டாம் இடத்திலும்.. அதிமுக டெப்பாசிட் கேள்வி குறியாக இருக்கும் என்றும் அறிக்கை தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறது…இதனால் தான் அதிமுக தேர்தலை ரத்து செய்ய முடிவு செய்திருக்கிறது.
அந்த உளவுத்துறை ரிப்போட்டில் பாஜக மொத்தம் 215 ஓட்டு வாங்குவார்கள் என்று இருக்கிறது. என்பது தான் மிகவும் முக்கியமான விசயம்.