“நன்றி” என்ற சொல்லும் ஒரு நாள் “ஹீரோ” கொண்டாட்டமும் அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துமா?

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

“நன்றி” என்ற சொல்லும் ஒரு நாள் “ஹீரோ” கொண்டாட்டமும் அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துமா?

தேசிய நெடுஞ்சாலை பணிக்காக உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டம் சில்க்யாரா வளைவு – பார்கோட் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுரங்கப்பணிகளின் போது, மண் சரிந்து 41 கட்டுமானத் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டது, உலக செய்தியாக மாறியது.

Frontline hospital Trichy

அதிநவீன இராட்சச இயந்திரங்கள், பன்னாட்டு சுரங்கத்துறை வல்லுநர்களுக்கே சவால்விட்ட இந்த சம்பவத்தில், 17 நாட்கள் திக்..திக்.. திருப்பங்களுக்கு பின்னர், சுரங்கத்தில் சிக்கியிருந்த 41 கட்டுமானத் தொழிலாளர்களையும் உயிருடன் மீட்டதில் பெரும் பங்காற்றியவர்கள் எலி வளை சுரங்க தொழிலாளர்கள்.

அதிநவீன இராட்சச இயந்திரங்களே பழுதாகி நின்ற போதும், உயிரைப்பணயம் வைத்து, வெறும் கைகளால் துளையிட்டுக்கொண்டே முன்னேறி சென்று சாதித்துக்காட்டிய எலி வளை சுரங்க தொழிலாளர்களின் அர்ப்பணிப்புமிக்க செயல்திறனையும், அவர்களது அவலமான வாழ்க்கைச் சூழலையும் நெகிழ்ச்சியான வார்த்தைகளால் விவரிக்கிறார், கல்வியாளரும் இடதுசாரி சிந்தனையாளருமான பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

“நாங்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு பாராட்டப்பட்டச் செய்தியை என் குழந்தைக்கு சொல்ல மாட்டேன். என் குழந்தைகள் இழிவாக கருதப்படும் இதே தொழிலுக்கு வர வேண்டாம். அவர்கள் நன்றாக படித்து மருத்துவராக, பொறியாளராக, விஞ்ஞானிகளாக வளரட்டும்” என்று “எலி துளை” பணியை மேற்கொண்டு வரும் தொழிலாளர்கள் கூறியது நெஞ்சை உலுக்குகிறது.
“விஸ்வகர்மா யோஜனா” என்ற‌ பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளச் சதித்திட்டத்திற்கு சரியான பதிலடியாக இந்த தொழிலாளர்களின் நெஞ்சக் குமுறல் அமைந்துள்ளது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

காலம் காலமாக பாதாளச் சாக்கடை உள்ளிட்ட பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு, உரிய அங்கீகாரம், உரிய ஊதியம் எதுவும் இல்லாமல் மிகவும் கடைநிலைக் களப் பணியாளர்களாக ஊழியம் செய்துவந்த “எலி துளை” நிபுணத்துவம் பெற்ற தொழிலாளர்கள், வர்க்க உணர்வோடு, எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் தங்களின் உயிரைப் பணயம் வைத்து மீட்புப் பணியில் ஈடுபட்டார்கள்.

உயிர்காக்கும் போராட்டத்தில் ஈடுபட அழைக்கப்படுகிறோம், எங்களுக்கு ஊதியம் வேண்டாம்! எங்கள் உயிரைப் பற்றி கவலைப்படாமல் நம்பிக்கையுடன் மீட்புப் பணியில் இறங்குகின்றோம், நிச்சயம் தொழிலாளர் அனைவரையும் மீட்டு வருவோம்! என்று வர்க்க உணர்வு கொண்டு நெஞ்சுறுதியுடன் களத்தில் இறங்கிய “எலி துளை” தொழில்நுட்பம் தெரிந்த தொழிலாளர்களுக்கு செவ் வணக்கம்!

சுரங்கத் தொழிலாளர்கள் மீட்பதில் வர்க்க ஒற்றுமையை பறைசாற்றிய தொழிலாளர்களுக்கு செவ்வணக்கம்!
“நன்றி” என்ற சொல்லும் ஒரு நாள் “ஹீரோ” கொண்டாட்டமும் அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துமா? அவர்களின் தொழில் சிக்கலுக்கு, வாழ்க்கை போராட்டத்திற்கு தீர்வு காண வேண்டியது உழைக்கின்ற வர்க்கத்தின் கடமை அல்லவா?

“உழைக்கும் வர்க்கத்திற்கு சாதி இல்லை, மதம் இல்லை” என்ற மே தின முழக்கத்திற்கு நிகழ்கால எடுத்துக் காட்டாய் விளங்கிய தொழிலாளர்களுக்கு செங்கொடி உயர்த்தி செவ்வணக்கம்!

தொழிலாளர் ஒற்றுமை ஓங்கட்டும்! உழைக்கும் வர்க்கமென அணிதிரள்வோம்! மன உறுதியுடன் நம்புகிறோம் நாம் வெல்லுவோம் ஓர் நாள்!” என்பதாக உணர்ச்சியப்பூர்வமான அறிக்கையை வெளியிட்டிருக்கிறார், பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு.

– அங்குசம் செய்திப் பிரிவு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.