“மக்கள் போற்றும் மகேஸராகவும்”, “கழகத் தொண்டர்கள் போற்றும் மாமனிதர்”

0

“மக்கள் போற்றும் மகேஸராகவும்”, “கழகத் தொண்டர்கள் போற்றும் மாமனிதர்”

தென் தமிழக வரலாற்றிலே! ஓர் மாபெரும் இயக்கமாக விளங்கிக் கொண்டிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் என்பது சமூக நீதிக்கான இயக்கம் என்பதை நாடறியும். அப்பேற்பட்ட மாபெரும் இயக்கம் எத்தனையோ இளந் தலைவர்களையும், சான்றோர்களையும் அறிஞர்களையும், பகுத்தறிவாதிகளையும், சுயமரியாதைகாரர்களையும் உருவாக்கி உள்ளது. அப்படி வளர்க்கப்பட்ட கழக வரலாற்றின் கொடை வீரர்தான் அன்பில் மகேஸ் பொய்யாமொழி என்றால் அது மிகையல்ல!

எல்லோருக்கும் பிறப்பு உண்டு!
ஆனால் ஒரு சிலருக்கே சிறப்பு உண்டு!

அத்தகைய சிறப்புமிகு வழிதனிலே தனது வாழ்க்கைப் பயணத்தை! ஒரு மாபெரும் வரலாற்றுப் பயணமாக மாற்றி அமைத்திட வேண்டி அனுதினமும் பிறர் நலனே தன் வாழ்நாள் பயன் எனக் கருதி களத்தில் கண் துஞ்சாமல், கயவர்களுக்கு சிறிதும் அஞ்சாமல் உழைப்பு! உழைப்பு! என்று அயராது உழைத்துக் கொண்டு திராவிடப் பேரியக்கத்தின் மாபெரும் தலைவர்களில் ஒருவரான மேனாள் அமைச்சர் மாண்புமிகு அன்பில் பெ.தர்மலிங்கம் தங்கப்பொன்னு அம்மையார் ஆகிய தம்பதியரின் மூத்தச் செல்வன் அன்புக்கே இலக்கணமாய் வாழ்ந்த அன்பில் பொய்யாமொழி – மாலதி அம்மையார் ஆகிய தம்பதியர்கள் முக்கடலில் மூழ்கி  கண்டெடுத்தாற் போல் ஈன்றெடுத்த மூத்தமகன் “அன்பில் மகேஸ் பொய்யாமொழி” எனும் “மக்கள் போற்றும் மகேஸன்” கடந்த 02-12-1977-ஆம் ஆண்டு திருச்சியில் பிறந்தார் என்பது ஒரு சம்பவம். ஆனால் இன்று அவரது செயல்பாடுகளின் மதிப்பீட்டுக் கூறு என்பது சரித்திரமாக மாறி வருவதை யாராலும் மறுக்க இயலாது.

ஈன்ற பொழிதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய் -& என்பதற்கிணங்கவும்,
தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று. & என்பதற்கிணங்கவும்,

வள்ளுவர் வாக்கினை மெய்ப்பித்துக் காட்டி வருகின்ற மாபெரும் இளம் சான்றோர் அல்லவா! அன்பில் மகேஸ் பொய்யாமொழி எனும் வீரப்பிள்ளை.

  •  இவர்தன் பள்ளிப் படிப்பை காமகோடி வித்யாலயா பள்ளியிலும் பின்பு மேல்நிலைப் படிப்பினை E.R மேல்நிலைப் பள்ளியிலும், தன் இளங்கலை மற்றும் முதுகலை படிப்பினை திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியிலும் திறன்பட பயின்று முதல் நிலையில் தேர்ச்சிப் பெற்று கல்வி முடிப்பை நிறைவு செய்துள்ளார்.
  • இவருக்கு மிகவும் பிடித்தமான உணவு மீன் குழம்பு சாப்பாடு ஆகும்.
  • இவருக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டு என்பது மட்டைப்பந்து (Cricket) ஆகும்.
  • இவர்தன் கல்வி படிப்பை முடித்தவுடன் பெங்களூரில் உள்ள “நோபல் டெக்” எனும் தனியார் நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராக (Managing Director) ஆக பணி புரிந்துள்ளார். அதே போன்று இந்நிறுவனத்தின் பணிகளை வெளிநாட்டில் கவனிப்பதற்காக இலண்டனில் ஆறுமாத காலம் திறன்பட பணியாற்றி நிறுவனத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
  • இவருக்கு உடன் பிறந்தவர்கள் இருவர். சகோதரி கயல்விழி என்பவரும், சகோதரர் உதயநிதி பொய்யாமொழி என்ற இரண்டு பேரும் உடன் பிறந்தவர்கள் ஆவார்கள்.
  • இவர் ஜனனி என்பவரை, முத்தமிழறிஞர் தலைவர் மாண்புமிகு கலைஞர் தலைமையிலேயே, தமிழகத்தின் விடிவெள்ளி தன்னிகரற்ற தலைவர் மாண்புமிகு தளபதி அவர்களின் முன்னிலையில் கழகத்தின் மூத்த முன்னோடிகள் அனைவரின் மனநிறை வாழ்த்துக்களுடன் இவருக்கு திருமணம் நடந்தேறியது.
  • இத்தகைய சிறப்புமிகு தம்பதியர்க்கு இரு மகன்கள் உள்ளனர். மூத்தமகன் இனியன் மகேஸ் பொய்யாமொழியும், இளைய மகன் கவின் மகேஸ் பொய்யாமொழியும், ஆக இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர்.
    • இவருக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு இந்திய திருநாட்டின் பேரியக்கமாக விளங்கிக் கொண்டிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஈடு இணையற்ற அணியாக விளங்கிக் கொண்டிருக்கின்ற இளைஞர் அணியின் மாநில துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டு அதில் திறன்பட பணியாற்றி அன்றைய இளைஞர் அணியின் செயலாளராக இருந்த நம் கழகத் தலைவர் அவர்களின் நன்மதிப்பையும் பாராட்டையும் பெற்றவர் ஆவார்
   • இவரின் புயல்வேக செயலினைப் பாராட்டி தலைமை இலக்கிய அணி சார்பாக “சிறந்த இளைஞர்காண” விருதையும் பாராட்டையும் பெற்றவர் ஆவார். இவ்விருதினை பாண்டிச்சேரியில் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
   •  கடந்த 2016-ஆம் சட்டமன்றத் தேர்தலில் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக நிறுத்தப்பட்டு அதில் அறியப்பெரும்பான்மையோடு 85,950 வாக்குகள் பெற்று மாபெரும் வெற்றிகண்டார்.

   

  • இன்று தமிழகத்திலேயே திருவெறும்பூர் தொகுதிக்கு தான் என்னென்ன பணிகள் எல்லாம் செய்வேன் என்று வாக்குறுதி அளித்தாரோ அத்தனை பணிகளையும் சிறப்பாக செய்து மக்கள் நலனில் மகத்தான அக்கறை கொண்ட சட்டமன்ற உறுப்பினர் நம் M.L.A. என்று அனைத்து தரப்பு மக்களும் சொல்லி மகிழக்கூடிய அளவிற்கு ஓர் அளப்பரிய புரட்சிப் பணியை மக்களுக்கு செய்து வருகிறார் என்பதே நிதர்சனமான உண்மை.
  •  தமிழகத்திலே மக்கள் மக்கள் பிரச்சனைக்காக மாவட்ட ஆட்சித் தலைவரையும், மாநகராட்சி ஆணையரையும் மற்றும் அனைத்து துறைச் சார்ந்த அதிகாரிகளையும், நேரில் பலமுறை சந்தித்து எண்ணற்ற மனுக்களுக்கு தீர்வு கண்டுள்ள ஒரு மாபெரும் சட்டமன்ற உறுப்பினர் என்ற நற்பெயரை கழகத்தலைவர் அவர்கள் காட்டிய வழியில் உழைப்பு! உழைப்பு! என்று அயராது உழைத்து பேரறிஞர் அண்ணா சொன்னது போல்

மக்களிடம் செல், மக்களிடம் சொல், மக்கள் மனதை வெல்!

 • என்று அடிக்கடி கழகத் தலைவர் அவர்கள் சுட்டிகாட்டிய மக்கள் பணியை செய்திட ஊக்கப்படுத்தியதை தன் மனதில் கொள்கை தீபமாக ஏற்றி அதனை இன்று நிறைவேற்றி காட்டி வருகிறார் என்று சொன்னால் அது மிகையல்ல!
 • பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் செனட் குழு உறுப்பினராகவும் உள்ளார்.
 •  தமிழக வாலிபால் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.
 • திருச்சி விமான நிலையத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.
  • பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் செனட் குழு உறுப்பினராகவும் உள்ளார்.
 • இவரின் ஆற்றல்மிகு செயல்பாட்டையும், மக்கள் பணியையும் பார்த்து வியந்து கழகத் தலைவர் அவர்களால் கடந்த 04–&02&-2020-ஆம் நாளன்று திருச்சி தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
  • திருச்சி தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக, பொறுப்பேற்றபிறகு திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பாறை ஆகிய மூன்று தொகுதி மக்களின் பிரச்சனைகளையும் கருத்தில் கொண்டு அல்லும் பகலும் பாராமல் இயக்கப் பணியையும், மக்கள் பணியையும் தன் இரு கண்களாக கொண்டு பணியாற்றி “மக்கள் போற்றும் மகேஸராகவும்”, “கழகத் தொண்டர்கள் போற்றும் மாமனிதராகவும்” தலைமை தமக்கிட்டப் பணியை தனித்துவத்தோடு கூடிய தலைமைப் பண்போடும் கடமை, கண்ணியம், கட்டுப்பாடுடனும் அதனை நிறைவேற்றி கழகத் தலைவர் அவர்களின் பொற்பாதங்களில் இந்த மூன்று சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றி வாகையைச் சூடி சமர்ப்பித்திட்டு தலைவர் அவர்கள் முதலமைச்சராக தொடர்ந்திட வேண்டும் என்கிற உயர்ந்த கொள்கையோடு அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கும் ஒரு உண்மைத் தொண்டன் உண்டு என்று சொன்னால் அதன் முழுப்பெயர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி” தான். மாற்றாரும் போற்றும் மகத்துவம் கொண்ட சரித்திர நாயகன் அல்லவா!
  • அது மட்டுமல்ல இவரின் உயர் பண்பு என்பது நட்புக்கு இலக்கணமாகவும், நன்றிக்கு எடுக்காட்டாகவும் விளங்கக் கூடியவர். சிறந்த நிர்வாகத்திறன் கொண்டவர்.
 • நம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் மாபெரும் இயக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரும் பெரும் தலைவர், ஒப்பற்ற தலைவர், தன்னிகரில்லா தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அமைச்சரவையில் ஒரு முதன்மைபெற்ற அமைச்சராக மாண்புமிகு பள்ளி கல்வி துறை அமைச்சர் இரவு பகல் பாராமல் உழைத்து கல்வி துறையில் மாபெரும் புரட்சி செய்து மாண்புமிகு தமிழக முதல்வர் சொன்னது போல் என் இரண்டு கண்களில் ஒன்று கல்வித் துறை மற்றொன்று சுகாதார துறை என்று சொல்கிற அளவில் ஓர் உயர்ந்த இடத்தில் வைத்துள்ளார்
 • இது தெற்கு மாவட்ட திமுக தொண்டர்களுக்கு ஒரு பெருமையாகவும் ஏன் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து திமுக தொண்டர்களுக்கும் பெருமை சேர்த்திடும் விதமாக நம் முதல்வரின் எண்ணங்களை செவ்வனே செயல் படுத்தும் நம் பள்ளி கல்வித்துறை அமைச்சரின் செயல்பாடுகளை நாம் வணங்குவோம்..

“மக்கள் போற்றும் மகேஸர்” பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

சேர மன்னர்களின்
ஊக்கம் என்பேனா!

சோழ மன்னர்களின் ஆக்கம் என்பேனா!

பாண்டிய
மன்னர்களின்
தாக்கம் என்பேனா!

பகுத்தறிவுத் தந்தை பெரியாரின்
கடமை!
கண்ணியம்!
கட்டுப்பாடு!
என்ற வாள்!
என்பேனா!

அறிவுலக மேதை
அறிஞர் அண்ணாவின்
மக்களிடம் செல்!
மக்களிடம் சொல்!
மக்கள் மனதை வெல்!
என்ற கோல் என்பேனா !

முத்தமிழறிஞர்
கலைஞரின்
என் அன்பு உடன்பிறப்புக்களே!
என்ற மந்திர சொல்லின்
முதல் தொண்டன் என்பேனா!

தன்னிகரற்ற தலைவர் தளபதி
மு.க.ஸ்டாலினின்
அருமை!
அற்புதம்!
அபாரம்!
என்ற மாபெரும்
விருதைப் பெற்ற
எளிமையின் முழுமை
என்பேனா!

எரிமலைச் சுடர்
திராவிடக் கீர்த்தி
இளஞ் சூரியன்
உதயத்தின் இதயம்
என்பேனா!

கழகத் தொண்டர்களை
தன் அன்பினால்
ஆளுகின்ற அன்பிலார்
ஏன்பேனா!

மொத்தத்தில்
ஒற்றைச் சொல்லில்
“மக்கள் போற்றும் மகேசர்”
என்பேனா!

வாழ்க பல்லாண்டு
வாழ்த்துகிறேன்
வணங்குகிறேன்!

Senthil_DMK
Senthil_DMK

வழக்கறிஞர் ந.செந்தில் .M.A.,M.Sc.,B.L.I.S.,LLB.,
கழக மாநில இலக்கிய அணிப் புரவலர்
43வது வார்டு மாமன்ற உறுப்பினர், திருச்சி மாநகராட்சி

Leave A Reply

Your email address will not be published.