அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

கொலைகார  கோவை ; கொள்ளை நகரமான திருவண்ணாமலை ! முழித்துக் கொள்வாரா முதல்வர்?

0

திருச்சியில் அடகு நகையை விற்க

கோவை மாநகர் பாப்பநாயக்கன்பாளையத்தில் மதுரையைச் சேர்ந்த சத்யபாண்டி எனவரை துப்பாக்கி முனையில் மடக்கி வெட்டி வீழ்த்தியுள்ளது  5 பேர் கொண்ட கூலிப்படை கும்பல். அதே போல நீதிமன்றத்தில் வைத்து 2 பேரை பட்டப்பகலில் வெட்டிய சம்பவத்தின் வீடியோ காட்சிகளில் 5 பேர் கொண்ட கும்பல் பொதுவெளியில் வைத்து அசால்ட்டாக வெட்டி வீழ்த்திவிட்டு எந்தவிதமான பதற்றமுமின்றி கூலாக பொதுமக்களை மிரளசெய்யும்  வீடியோ காட்சிகள் கோவையை தாண்டி ஒட்டு மொத்த தமிழகத்தையே அதிர  வைத்துள்ளது.

இது குறித்து பேசிய சீனியர் ஏ.டி.ஜி.பி ஒருவர் நம்மிடம் பேசுகையில் “

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

கடந்த2020 ல் ஆண்டு பிஜு என்கிற இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்த சத்யபாண்டி பிணையில் விடுவிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் கடந்த 12 ம் தேதி இரவு ராமகிருஷ்ணா மருத்துவமனை அருகே உள்ள தனலட்சுமி நகரில் இருந்த சத்யபாண்டியை ஐந்து பேர் கொண்ட கும்பல் இரண்டு மோட்டார் சைக்கிளில் துரத்திச் சென்றுள்ளது.

அந்த இடத்தில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதால் காவல்துறையின் கண்ட் ரோல் ரூமிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதேவேளை சத்யபாண்டி கருப்பக்கல் தோட்டம் பகுதியில் உள்ள பிச்சமுத்து என்பவரது வீட்டில் நுழைந்துள்ளார். அங்கு சத்யபாண்டியை துரத்திய ஐந்து பேரும் அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த சத்யபாண்டியின் உறவினர் மற்றும் உடன் இருந்தவர்களை கொலை செய்த கும்பல் மிரட்டி விட்டுச் சென்றுள்ளது. முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக ரிப்போட் ஆகியுள்ளது.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்
கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்

அடுத்து சம்பவம்தான் மிகவும் மோசமான சம்பவம். கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கோபாலபுரத்தில் அமைந்துள்ளது. அதைச் சுற்றி வழக்கறிஞர் அலுவலகம் மற்றும் முக்கிய அரசு அலுவலகங்கள் உள்ளதால் எப்போதும் அந்த பகுதி பரபரப்புடனே காணப்படும்.  திங்கள்கிழமை என்பதால் நீதிமன்றம் எப்போதும் போல் பரபரப்புடன் காணப்பட்டது. காலை 11 மணி அளவில் நீதிமன்ற வளாகம் வெளியே வந்த இரு இளைஞர்கள் மீது நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளது.இதில் ரத்த வெள்ளத்தில் ஒரு இளைஞர் கீழே சரிந்தார். மற்றொரு இளைஞருக்கு தலை மற்றும் கைகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மற்றும்   காவல்துறையினருக்கும் தகவல் அளித்தனர். இதைத்தொடர்ந்து, இரண்டு இளைஞர்களும் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்து கீழே சரிந்த நபரான கோவை கீரணத்தம் பகுதியைச் சேர்ந்த கோகுல் உயிரிழந்தார்.காயம் அடைந்தவரின் பெயர் சரவணம்பட்டியைச் சேர்ந்த மனோஜ் என தெரிய வந்துள்ளது. தாக்குதலுக்குள்ளான இளைஞர்கள் நீதிமன்ற விசாரணைக்காக வந்ததாக கூறப்படுகிறது.

கோவையில் நடந்த கொலை சம்பவத்துக்கு மத்தியில் துப்பாக்கியுடன் 3 பேர் பிடிபட்ட சம்பவம் கோவையில் சட்டம் ஒழுங்கு என்ன நிலையில் உள்ளது என்பதை நினைக்கையில் நெஞ்சு பதறுகிறது.

திருச்சி சமயபுரத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி அஜித்குமார்  கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்தவரும் தற்போது கோவை பீளமேட்டில் தங்கி இருந்து டிரைவர் வேலை செய்து வரும் சந்திரசேகர் , சிங்காநல்லூர் அருகே உள்ள வரதராஜபுரத்தை சேர்ந்த கவுதம்  உள்ளிட்ட 3 நபரை குண்டுடன் கூடிய ஏர்கன் வகை துப்பாக்கி ஒன்று, அரிவாள் என சகல ஆயுதங்களுடன் கைது செய்துள்ளனர். கோவை குண்டுவெடிப்பிற்கு பிறகு அமைதியான கோவையில்தான் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு  கார் குண்டு வெடித்தது.

என்.ஐ.ஏ . ஏ
என்.ஐ.ஏ . ஏ

நல்ல வேளையாக யாருக்கும் எந்தவிமான உயிர் சேதங்கள் இல்லை இப்போது என்.ஐ.ஏ . ஏஜென்சியின் கழுகு பார்வையில்  கோவை இருந்தாலும் உள்ளூர் சட்டம் – ஒழுங்கு சரியில்லை என என்.ஐ.ஏ.வின் தலைமை ஏற்கெனவே  சட்டம் – ஒழுங்கு டி.ஜி.பி.க்கும் மாநில உளவுத்துறை ஏ.டி.ஜி.பி டேவிட்சனுக்கும் எச்சரிக்கை சமிக்கை கொடுத்தனர். ஆனால் இருவரும் கோவையை கவனிக்காமல், இன்னும் வெடித்தது கார் குண்டே இல்லை என்கிற விவாதங்களை விட்டு வெளியே வரவில்லை இப்பொழுது பாருங்கள் அமைதியான கோவையில் கூலிப்படையினர் கோர்ட் வளாகத்திற்குள்ளே வெட்டி வீழ்த்திவிட்டு சாவகாசமாக நடந்து செல்கிறார்கள்.

கோவையில் நடந்த கொலை சம்பவ வீடியோக்கள் வைரலாக சுத்த ஆரம்பித்துள்ளது. இது முதல்வருக்கு பெரிய தலைவலியை உண்டாக்கும். முதல்வர்தான் மக்களிடமும், எதிர்கட்சிகளிடம் பதில் சொல்வார் அதிகாரிகள் இல்லை. இன்னும் உளவுத்துறை ஏ.டி.ஜி.பி மற்றும் அவருடைய பரிந்துரை பெயரில் போடப்பட்ட சில வேலை தெரியாத அதிகாரிகளை வைத்திருந்தால் முதல்வருக்கு பெரும் கெட்ட பெயரைத் தேடித் தரும் என ” அங்குசத்திடம்  நேர்மையான ஏ.டி.ஜி.பி ஒருவர் தெரிவித்தார்.

 

Balakrishna IPS
பாலகிருஷ்ணன் IPS

கொலை – கொள்ளை  நகராகும் கோவை ! மேற்கு மண்டல ஐ.ஜி – கமிஷனருக்கு என்னாசு !

கோவை நிகழ்வுகள் குறித்து பேசிய ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் ” கோவை குண்டுவெடிப்பிற்கு பிறகு கோவை உள்ளிட்ட மேற்கு மண்டலத்தில் எப்போதுமே சீனியர் அந்தஸ்தில் உள்ள ஐ.ஜிக்கள், மற்றும் நேர்மையான ,புலனாய்வில் நல்ல திறன் படைத்த அதிகாரிகளை மட்டுமே நியமனம் செய்வது வழக்கம்  தமிழக காவல்துறை. ஆனால் தற்போது திமுக ஆட்சியில் உளவுத்துறை தலைவர் டேவிட்சனின் உறவினரான பாலகிருஷ்ணன்  என்பவரை கோவை மாநகர கமிஷனராக  நியமனம் செய்துள்ளனர்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

பாலகிருஷ்ணன் நல்ல துடிப்பான அதிகாரி நன்றாக வேலை செய்வார். திருச்சியில் பணியாற்றிய போது மிகத்திறமையாக வேலை செய்தார். தவறு செய்யும் அதிகாரிகள்  மீது உடனே நடவடிக்கை எடுத்தார்.  ஆனால் அவருக்கு இந்து- முஸ்லீம், நக்சலைட், சிபி, சிமி உள்ளிட்ட அடிப்படை வாதிகள் பிரச்னைகளை குறித்து போதிய அனுபவம் இல்லை அதே போல மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர்க்கு  அனுபவம் இல்லை அவரை வைத்திருந்தால் இன்னும் சறுக்கல்தான்.

தருமபுரி கலெக்டர் சாந்தி
தருமபுரி கலெக்டர் சாந்தி

 கலெக்டர் வீட்டில் கை வைத்த சம்பவம் உச்சகட்டம்

தருமபுரி கலெக்டராக இருப்பவர் சாந்தி. இவர் திருப்பூரை சேர்ந்தவர் . தர்மபுரி மாவட்ட கலெக்டராக உள்ளார். கலெக்டர் சாந்தியின் தாய்-தந்தை இருவரும் திருப்பூர் மாவட்டம் சேவூர் அருகே மங்கரசுவளையபாளையம் லூர்துபுரத்தில் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 2 ம் தேதி அதிகாலை இவர்களது வீட்டிற்குள் 2 ஆசாமிகள் புகுந்தனர். அவர்கள் திடீரென்று கிருஷ்ணசாமியை இரும்பு திருப்புளியால் தாக்கி வீட்டிலிருந்த 7 பவுன் தங்க நகை மற்றும் ரூ.7 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். உண்மையில் கொள்ளையடித்தது சொன்னால் தலை சுற்றும்.  திமுக ஆட்சியில் மாவட்ட கலெக்டர் வீட்டுக்கே பாதுகாப்பு இல்லை என்று சில விவகாரங்களை மூடி மறைத்துள்ளனர்.

மதன் குமார் போலீசார் பொலீரோ ஜூப்பை தூக்கிய ஜெகஜால கில்லாடி
மதன் குமார் போலீசார் பொலீரோ ஜூப்பை தூக்கிய ஜெகஜால கில்லாடி

போலீஸ் பொலீரோ ஜூப்பை தூக்கிய ஜெகஜால கில்லாடி!

கடந்த 10 ம் தேதி சேலம் குமாரசாமிபட்டி ஆயுதப்படை மைதானத்தில் 2-ம் நிலை காவலர்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. இதற்காக நியமிக்கப்பட்ட போலீஸ் அதிகாரிகள் நேற்று மைதானத்திற்கு வந்தனர். அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஆயுதப்படைக்கு சொந்தமான பொலிரோ வாகனத்தை காணவில்லை. மாவட்டம் முழுவதும் சல்லடை போட்டு விசாரணை செய்ததில் காணாமல் போன

அந்த வண்டி  அரசு முத்திரையுடன் தாரமங்கலம் தொளசம்பட்டி பிரிவு ரோட்டை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் மதன்குமார் பயன்படுத்தியது  வந்தது. மேலும் மதன் குமார் முதல்வர் நிவாரண பிரிவின் உதவி இயக்குனர் என்ற அடையாள அட்டையும் அவர் வைத்திருந்துள்ளார் அதனை அவர் போலியாக தயாரித்து வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும் மதன் குமாரை விசாரணை செய்கையில் வேலை வாங்கித் தருவது, டெண்டர், டீசல் கொள்ளை, என  டிசைன், டிசைனாக சம்பவங்களை அடுக்கிக் கொண்டே போகிறார்கள். இந்த சம்பவத்தை எதிர்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி ஈரோடு, மதுரை உள்ளிட்ட பொதுக் கூட்டங்களில் வைத்து சட்டம் – ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் ஆட்சியை வறுத்துத்தெடுத்தார் ஆனாலும் இன்னும் முதல்வர் அந்த இருவரை நம்பித்தான் ஆட்சியை நடத்துகிறார்.

வடக்கு மண்டல ஐஜி கண்ணன்
வடக்கு மண்டல ஐஜி கண்ணன்

எம் கொள்ளையில் கோட்டைகோட்டை விட்ட உளவுத்துறை தலைமை?

ஹரியானா ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் மேவாட் திருடர்கள். இவர்கள் ஏ.டி.எம்.கொள்ளையில் எக்ஸ்பர்ட்ஸ். ஹரியானாவில்  நூ மாவட்டம் மற்றும்  ஆல்வார் மாவட்டம்  2 மாவட்டம் சேர்ந்தது மேவாட் ரீஜன் . இங்குள்ள சில கும்பல்கள்தான் ஏ.டி.எம். கொள்ளைகளில் எக்ஸ்பர்ஸ்ட். இவர்களுக்கு ஏ.டி.எம்.இயந்திரங்களில் உள்ள  ஸ்கேனர் கருவிகளை பயன்படுத்தி நாசூக்காக திருடுவதில் வல்லவர்கள். இவர்களது கைவரிசை தென் மாநிலங்களில் ஆண்டுக்கு ஒரு முறை திருவிழா போல நடக்கும். தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட 8 மாநிலங்களில் வருடத்திற்கு ஒரு மாதம் என வருட பிளான் போட்டு கச்சிதமாக கொள்ளை அடிப்பர். அதோடு ஒரு ஏ.டி.எம்.களில் கொள்ளை கொள்ளை அடித்தால் அதே ஏடி .எம்.களில் மீண்டும் அதே பணத்தை வேறொரு வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைத்து விட்டு வெறும் கையோடு வெற்றிகரமாக செல்வர்.

இதனால் போலீஸ் வாகன சோதனைகளில் கூட அவர்களை பிடிக்க முடியாது. இப்படியாப்பட்ட பலே கில்லாடிக் கும்பலை கடந்த ஆண்டு சென்னை சிட்டி போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் மற்றும் சவுத் ஜோன் அடிசனல் கமிசனர் கண்ணன் தலைமையிலான டீம் முதன் முறையாக ஹரியானாவில் போய் தூக்கி வந்தனர். இப்பொழுது அவர்கள் ஜாமினில் வெளியே வந்து சிட்டியை விட்டு விட்டு கோயில் நகரமான திருவண்ணாமலையில் கை வரிசை காட்டியுள்ளனர்.

Davidson - IPS
Davidson – IPS

கோட்டை விட்ட உளவுத்துறை !

இந்த ஏடி.எம்.கொள்ளையர்கள் கடந்த டிசம்பர் மாதமே  தமிழகத்தில் கால் வைத்துள்ளதாக சிட்டி கிரைம் டீம் மாநில  உளவுத்துறை தலைமைக்கு நோட் நோட்டது. ஆனால் மாநில உளவுத்துறை தலைமை அதனை சம்பந்தப்பட்ட மாவட்ட எஸ்.பி க்கள் மற்றும் ஐ.ஜி.க்களுக்கு ஈகோவில் சொல்லாமல் கோட்டை விட்டதால் இப்பொழுது ஏ.டி எம்.மை உடைத்து தீ வைத்து எரித்து கொள்ளையடித்து சாகவாசமாக தமிழக எல்லைகளை கடந்துள்ளனர். இன்னும்  ஓரிரு நாட்களில் கொள்ளையர்களை பிடித்து விடுவர் ஆனாலும் கொள்ளை நடந்தது நடந்ததுதான் மாநில உளவுத்துறையின் தலைமையிலான ஈகோவினால் இப்போது எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வர் ஸ்டாலினை அறிக்கை, பொதுக்கூட்டங்களில் கிழித்தெடுப்பார் இதனால் அவமானம் ஸ்டாலினுக்குதான் என்பதை இன்னும் ஒரு முதல்வராக அவர் உணரவில்லை.

ஒரு அதிகாரி மீது தொடர்ச்சியாக விமர்சனங்கள் வந்தால் அது குறித்து உடனடியாக விசாரித்து உண்மை தன்மையை அறிய வேண்டும், . இந்த அரசாங்கமே சில அதிகாரிகளை வைத்து இயங்குவது போல கட்டமைப்பது போல் வெளிப்படுத்துவது,  முதல்வருக்கு சறுக்கல் ஆகும் என்பதை முதல்வர் எப்போது உணர்வார்? ” என்றார்.

 

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.