பேரூராட்சி கூட்டத்திற்கு ராஜினாமா கடிதத்துடன் வந்த திமுக வார்டு உறுப்பினர் !
குளித்தலை ஒன்றியம், மருதூர் பேரூராட்சி கூட்டத்திற்கு ராஜினாமா கடிதத்துடன் வந்த அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆளுங்கட்சியை சேர்ந்த திமுக உறுப்பினரால் பரபரப்பு. கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியம் மருதூர் பேரூராட்சி சாதாரண கூட்டம் இன்று மாலை பேரூராட்சி கூட்டம் மன்றத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் எஸ். சகுந்தலா தலைமை வகித்தார். துணைத் தலைவர் நாகராஜன் முன்னிலை வகித்தார். அன்று அனுமதி எதிர்நோக்கி 16 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது. மன்ற பொருளை அலுவலக உதவியாளர் சரவணன் வாசித்தார். கூட்டம் துவங்கியதும், மருதூர் பேரூராட்சியிலேயே அதிக வாக்குகள் வாங்கி வெற்றி பெற்றவர் மயிலாடும்பாறை சேர்ந்த 12 வது வார்டு திமுக உறுப்பினர் சத்திய பிரியா. இவர் எனது வார்டில் எந்த வளர்ச்சிப் பணிகளும் நடைபெறவில்லை. பேரூராட்சி நிர்வாகம் புறக்கணிக்கிறது.
ஆளுங்கட்சி உறுப்பினராக இருந்தும் மக்களுக்கு செய்ய வேண்டிய கடமையை என்னால் செய்ய முடியவில்லை.
பலமுறை வளர்ச்சி பணிகள் குறித்து பேசி விட்டேன். எந்த நடவடிக்கையும் இல்லை. வளர்ச்சி பணிகளில் பாரபட்சம் காட்டுகிறார்கள். எனவே எனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன். அதற்கான ராஜினாமா கடிதத்துடன் வந்துள்ளேன் என்றார்.
செயல் அலுவலரிடம் ராஜினாமா கடிதத்தை கொடுக்க இருந்தேன்.
செயல் அலுவலர் இல்லாததால் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து வெளிநடப்பு செய்வதாக கூறி வெளிநடப்பு செய்தார். ஆளுங்கட்சி திமுக உறுப்பினரே கூட்டத்தை விட்டு வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.