வங்கி கடன் தொல்லையால் விசைத்தறி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தனியார் வங்கியின் கடன் தொல்லையால் விசைத்தறி தொழிலாளி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சேலம் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. தற்கொலைக்கு காரணமான தனியார் வங்கி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய நிதி உதவி அளிக்க வேண்டும் என உறவினர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டம் இடங்கணசாலை மாடயாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணி. விசைத்தறி தொழில் செய்து வந்த நிலையில் தனது வீட்டை அடமானம் வைத்து வெரி டாஸ் பைனான்ஸ் என்ற தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி முறையாக மாதம் கடனை கட்டி வந்துள்ளார். இந்த நிலையில் இந்த மாதம் 20 நாட்களாக கடனை திருப்பி செலுத்தாததால் வங்கி ஊழியர் கார்த்திக் தலைமையில் உடனடியாக கடனை செலுத்த வேண்டும் எனத் தொடர்ந்து டார்ச்சர் செய்துள்ளனர் இதனால் மனமுடைந்த அவர் வீட்டிற்குள்ளே சென்று கதவை தாழிட்டு தூக்கில் தொங்கியுள்ளார்.

Sri Kumaran Mini HAll Trichy

விசைத்தறி தொழிலாளி  மணி
விசைத்தறி தொழிலாளி மணி

Flats in Trichy for Sale

ஒரு மணி நேரம் ஆகியும் வங்கி அதிகாரிகள் அங்கிருந்து செல்லாமல் அவர் இறந்த நேரத்திலும் அங்கேயே இருந்துள்ளனர் பிறகு அவரது மகள் வந்து ஜன்னல் வழியாக பார்த்த போது தான் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது அதன் பின்னாலே வங்கி அதிகாரிகள் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

தற்கொலை செய்து கொண்ட மணி என்பவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும் மதன் மற்றும் தர்ஷினி என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஈரோடு தற்கொலை சம்பந்தமாக மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தற்கொலைக்கு காரணமான தனியார் வங்கி நிர்வாகத்தினர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இரண்டு பிள்ளைகள் இருப்பதால் அவர்களுக்கு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.