திருச்சியில் வானவியல் கற்பிப்பதில் இருக்கும் இடர்பாடுகள் மற்றும் தீர்வுகள் குறித்த பயிற்சி பட்டறை

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு அஸ்ட்ரானமி அண்ட் சயின்ஸ் சொசைட்டி, இந்திய வானியற்பியல் நிறுவனம், பிஷப் ஹீபர் கல்லூரி மற்றும் திருச்சி ஆஸ்ட்ரோ கிளப் ஆகியவை இணைந்து  தமிழ்நாட்டில் செயல்படும் பள்ளிகளில் வானவியல் கற்பிப்பதில் இருக்கும் இடர்பாடுகள் மற்றும் தீர்வுகள் குறித்த பயிற்சி பட்டறை  மூன்று நாட்கள் நடத்தப்பட்டது.

பள்ளி மாணவர்களிடையே வானவியல் கற்பிப்பதில் இருக்கும் இடற்பாடுகள் அதற்கான தீர்வுகள் குறித்த மூன்று நாள் பயிற்சி பட்டறை பிஷப் ஹீபர் கல்லூரியில் கடந்த வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்கள் நடந்தன.

அங்குசம் இதழ்.. இலவசமாக படிக்க...

20 மாவட்டத்தில் இருந்து 40 துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள், கல்லூரி மாணவர்கள் 30 பேர் உட்பட 70 பேர் பங்கேற்றனர்.

முதல் நாள்  நடந்த துவக்க விழாவில் பள்ளியின் துணை முதல்வர் சத்தியசீலன் துவக்க உரையாற்றினார். பெங்களூரு இந்திய வானியற்பியல் நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானி நீருஜ் மோகன் ராமானுஜம் நோக்க உரையாற்றினார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

டாஸ் அமைப்பின் மாநில தலைவர் ரமேஷ் ஆசிரியர்கள் தங்களுடைய பாடத்தை பட விளக்கங்களுடன் மாணவர்களிடையே எவ்வாறு நடத்தலாம் என்று ஆலோசனை வழங்கினார். கல்லூரியின் அறிவியல் புல முதன்மையர் வயலட் தயாபரன் வாழ்த்துரை வழங்கினார்.

முதல் நாள் அமர்வில் சூரிய குடும்பம் குறித்து டாஸ் மாநில தலைவர் ரமேஷ் வகுப்பு எடுத்தார் மிகச் சிறிய அளவிலான சூரிய குடும்ப மாதிரியை கோவை ஆஸ்ட்ரோ கிளப் வித்யா ராமமூர்த்தி செய்து காட்டினார்.

ஃப்ரீ டெலஸ்கோபிக் அஸ்ட்ரானமி என்ற தலைப்பில் பெங்களூரு இந்திய வாணியறபியல் நிறுவன விஞ்ஞானி நீருஜ் மோகன் ராமானுஜம் கலந்துரையாடல் நிகழ்த்தினார்.

பந்து மற்றும் கண்ணாடி வில்லைகளைக் கொண்டு  அதில் இருக்கும் தத்துவங்கள் குறித்து, சூரிய பிம்ப எதிரொலி மூலம் திருச்சி அஸ்ட்ரோ கிளப் செயலாளர் உமா, பால சரவணன், ஸ்டேனீஸ் ரத்தினம், திலகவதி, மோசஸ் ஆகியோர் செய்து காட்டினர்.

தொலைநோக்கிகள் அதில் இருக்கும் தத்துவங்கள் இந்திய நாட்டில் இருக்கக்கூடிய ஆய்வகங்கள் குறித்து வானியற்பியல் நிறுவனத்தை சேர்ந்த முனைவர் முத்துமாரியப்பன் கலந்துரையாடல் நிகழ்த்தினார்.

மாலையில் தொலைநோக்கி உதவியுடன் சந்திரன், செவ்வாய் மற்றும் வியாழன் கோள்கள் காண்பிக்கப்பட்டது வியாழன் கோளின் மூன்று நிலாக்களை  ஆசிரியர்கள் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் ஐ எஸ் எஸ் எனப்படும் இன்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷன் பயணித்ததையும் பார்த்து மகிழ்ச்சியுற்று காணப்பட்டனர்.

இரவு வானம் மற்றும் நட்சத்திரங்கள் குறித்து இந்திய வானியற்பியல் நிறுவனத்தை சேர்ந்த கொடைக்கானல் சூரிய உற்றறிவகத்தில் பணியாற்றும் விஞ்ஞானி கிறிஸ்பின் கார்த்திக் எடுத்துக் கூறினார்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இந்த இரவுவான் நிகழ்ச்சியை தங்களது தொலைநோக்கிகலை கொண்டு டா சின் செயலாளர் சாந்தி, திருச்சி அஸ்ட்ரோ கிளப் தலைவர் ஜெயபால், நாமக்கல் அஸ்ட்ரோ கிளப் செயலாளர் அரவிந்தன், ஈரோடு ஆஸ்ட்ரோ கிளப் தக்ஷிணாமூர்த்தி, கிருஷ்ணகிரி ஆஸ்ட்ரோ கிளப் பொருளாளர் சுரேஷ்குமார், நேரு மெமோரியல் காலேஜ் ஆஸ்ட்ரோ கிளப் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ரமேஷ் ஆகியோர் விளக்கங்களுடன் செய்து காட்டினர்.

இரண்டாம் நாள் அமர்வில் கேலக்ஸி மற்றும் காஸ்மாலஜி குறித்து வானியற் பியல் நிறுவனத்தை சேர்ந்த நீரஜ்மோகன் ராமானுஜம் பவர் பாயிண்ட் விளக்க காட்சி மூலம் கலந்துரையாடல் நிகழ்த்தினார்.

அன்றாட வாழ்வில் அ ஸ்ட்ரோனோமி என்ற தலைப்பில் டாஸ் மாநில பொருளாளர் மேகலா மாநில பொது செயலாளர் மனோகர் ஆகியோர் கலந்துரையாடல் நிகழ்த்தினார். சூரியன் மற்றும் சந்திரன்  விளையாட்டை வாணியற்பியல் நிறுவனத்தை சேர்ந்த கிறிஸ்பின் கார்த்திக் செய்து காட்டினார்.

ராக்கெட் தொழில்நுட்பம் குறித்து விரல் பொம்மை நிகழ்வை பப்பெட் கலைஞர் விருதுநகர் ரமேஷ்குமார் நிகழ்த்தி காட்டினார். தொடர்ந்து ஆசிரியர்கள் எவ்வாறு மாணவர்களை கவர்ந்து பாடம் நடத்தலாம் என்பது குறித்து பாப் அப் ஆர்ட்  மூலம் ஓவிய ஆசிரியர் அருணபாலன் செய்து காட்டினார்.

கெப்லேர்ஸ் லா குறித்து கொடைக்கானல் சூரிய உற்றறிவகத்தை சேர்ந்த பிரேம் குமார் சூத்திரங்களுடன் விளக்க உரையாற்றினார். ஐஎஸ்ஆர்ஓ, நாசா, ரோஸ் காஸ்மாஸ், இ எஸ் ஏ குறித்தும் அதன் சாதனைகள் குறித்தும் இஸ்ரோ மேனாள் பொறியாளர். இங்கர்சால் செல்லதுரை பி பி டி விளக்க உரையாற்றினார்.

மாணவர்கள் இடையே ராக்கெட் தொழில்நுட்பத்தை காகித கலை மூலம் எவ்வாறு கொண்டு செல்லலாம் என்பது குறித்து சந்தோச உலகம் அமைப்பின் இயக்குனர் அமலராஜன் செய்து காட்டினார்.

பள்ளிகளில் வானவியல் போதிப்பதில் இருக்கும் இடர்பாடுகள் குறித்தும் அதை நிவர்த்திக்கும் முறைகள் குறித்தும் தற்போது பள்ளிகளில் நடைபெற்று வரும் வானவியல் வகுப்புகள் குறித்தும் டாஸ் மாநில துணைத்தலைவர். சக்திவேல் விளக்க உரையாற்றினார். பகல் நேர வானவியல் இரவு நேர வானவியல் குறித்து பள்ளி மாணவர்கள் என்னென்ன சிறிய அளவிலான ஆய்வுகள் செய்யலாம் என்பது குறித்து வானியற்பியல் நிறுவனத்தை சேர்ந்த நீருஜ்  மோகன் ராமானுஜம் மற்றும் தமிழ்நாடு அஸ்ட்ரானமி அண்ட் சயின்ஸ் சொசைட்டியின் மாநில பொதுச் செயலாளர் மனோகர் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஞாயிறு மாலை நடைபெற்ற நிறைவு விழாவில் ராமன் ரிசர்ச் பவுண்டேஷனை சேர்ந்த பேராசிரியர் ரவிச்சந்திரன் பிஷப் ஹீபர் கல்லூரியின் இயற்பியல் துறை தலைவர் ஜோஸ்பின் பிரபா ஆகியோர் கலந்துகொண்டு பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினர்.

 நிறைவு விழாவில் டாஸ் மாநில செயலாளர் சாந்தி தலைமையுரையாற்றினார். திருச்சி ஆஸ்ட்ரோ கிளப் துணைத் தலைவர் பாலசரவணன் வரவேற்புரை ஆற்றினார். இணை செயலாளர் மோசஸ் நன்றி உரையாற்றினார்.

ஸ்கோப் பெஸ்டிவல் குறித்த இணைய வழி போட்டியை திறம்பட நடத்திய பேராசிரியர் ரமேஷ்,நாமக்கல் அரவிந்தன், நெல்லை முத்துசாமி ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. வானவியல் அறிவோம் புத்தகம் வெளியிடப்பட்டது.

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.