திருச்சி நியூரோ ஒன் மருத்துவமனையில் உலக பிசியோ தெரபி தினம் !
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் செயல்பட்டு வரும் மூளை மற்றும் நரம்பியல் சிறப்பு சிகிச்சை மருத்துவமனையான நியூரோ ஒன் மருத்துவமனையில் உலக பிசியோதெரபி தினத்தை முன்னிட்டு செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
செய்தியாளர் சந்திப்பு நிகழ்வுக்கு தலைமையேற்று நியூரோ ஒன் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் விஜயகுமார் பேசும்போது, ”நரம்பியல் மறுவாழ்வு என்பது ஒரு சிக்கலான மருத்துவ செயல் முறையாகும். நரம்பியல் மறுவாழ்வு குழுவில் இயற்பியலாளர், மறுவாழ்வு மருத்துவ நிபுணர், நரம்பியல் நிபுணர், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ,பிசியோதெரபிஸ்டுகள், சுவாச சிகிச்சையாளர்கள், புரோட்டெடிஸ்ட் மற்றும் எலும்பியல் நிபுணர், மறுவாழ்வு செவிலியர், உளவியலாளர்கள், தொழில் ஆலோசகர்கள், உள்ளிட்ட குழுவே இணைந்து பணியாற்ற வேண்டும் .
நியூரோனில் நியூரோ மறுவாழ்வு அலகு செறிவில் நியூரோ பிளாஸ்டி சிட்டி மீது இத்தகைய சிறப்பு சிகிச்சை செய்கிறோம். எங்களிடம் ஒரு கட்டமைக்கப்பட்ட சிகிச்சை நெறிமுறைகள் இருப்பதால் நரம்பியல் பிசியோதெரபியில் நாங்கள் முன்னோடியாக இருக்கிறோம் .
இத்தகைய நோய்களை தொடக்க நிலையிலையே கண்டறிந்தால் குணமாக்குவது எளிது ஆனாலும் மூளை உணர்வை மீண்டும் தூண்டி மறு சீரமைப்பு செய்வதற்கு குறைந்தபட்சம் 15 ல் இருந்து 90 நாட்கள் கால அவகாசம் தேவைப்படும். நோயாளிகள் இந்த காலகட்டத்தில் தாமாகவே முன்வந்து பொறுமையுடன் பிசியோதெரபி பயிற்சிகளை விடாமல் மேற்கொள்வது அவசியம்” என்று தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது தலைமை பிசியோதெரபிஸ்ட் டாக்டர் பிரசாத் ராமலிங்கம் மக்கள் தொடர்பு அதிகாரி ரமேஷ் உட்பட மருத்துவ குழுவினர் உடன் இருந்தனர். தொடர்ந்து தசை நார்கள் பலன் இல்லாமல் செயல் இழந்த நிலை மற்றும் பல்வேறு நரம்பு கோளாறு பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் சிகிச்சை மூலம் மீண்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.
— சந்திரமோகன்