திருச்சியில் 10 மணி நேரம் 10. நிமிடம் 10.விநாடி சிலம்பம் சுற்றி உலக சாதனை !
திருச்சியில் 10 மணி நேரம் 10. நிமிடம் 10.விநாடி சிலம்பம் சுற்றி உலக சாதனை !
திருச்சி பொன்மலை விவேகானந்தா நகரை சேர்ந்தவர் ரிபாயா (12) இவர் தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். சிலம்பம் கராத்தே யோகா ஸ்கேட்டிங் உள்ளிட்ட விளையாட்டு களில் சிறு வயது முதல் பயிற்சி எடுத்து பதக்கம் சான்றிதழ் பெற்றுள்ளார்.
அந்த வகையில் சிலம்பத்தில் உலக சாதனை படைக்கும் முயற்சியாக திருச்சி பொன் நகரில் மாநகராட்சி பள்ளியில் சில மக்களை பயிற்சி ஆசான் கலை சுடர்மணி தங்கராஜ் முன்னிலையில் 10 மணி நேரம் சுலபம் சுற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கின்னஸ் உலக சாதனையாளர் எவரெஸ்ட் ஹீரோ கிராண்ட் மாஸ்டர் டாக்டர் டிராகன் ஜெட்லீ நடுவராக நேரில் ஆய்வு செய்து ஜெட்லி புக் ஆப்ரெக்காட்சில் பதிவு செய்தார்10 மணி நேரம் பத்து நிமிடம் 10 வினாடி சிலம்பம் சுற்றி முடித்த அவருக்கு உலக சாதனை சான்றிதழ் பதக்கம் கேடயம் வழங்கப்பட்டது.

விழாவில் சிறந்த உலக சாதனை பயிற்சியாளர் விருது கலைச்சுடர் மணி தங்கராஜுக்கு வழங்கப்பட்டதுவிழாவில் உலக சாதனை மாணவி குடும்பத்தினர் சிலம்பு ஆர்வலர்கள் சமூக ஆர்வலர்கள் கின்னஸ் உலக சாதனையாளர்கள் சாய்னா ஜெட் லீ, சசிகலா ஜெட்லி ஏராளமானோர் கலந்து கொண்டு வாழ்த்தினார்.
மேலும் மாணவனின் சாதனை நேபால் உள்ள எவரெஸ்ட் உலக சாதனை புத்தகத்திலும் ஆசிய பசிபிக் சாதனை புத்தகத்திலும் இடம் பெற அனுப்பி வைக்கப்பட்டுள்ளது