ஸ்காட்டிஷ் சகோதரர்கள் செய்த உலக சாதனை !
ஸ்காட்லாந்தின் எடின்பர்க் சேர்ந்த எவான், ஜேமி மற்றும் லாச்லான் என்ற மூன்று சகோதரர்கள் எந்த ஒரு பாதுகாப்பு துணையின்றி பசிபிக் கடலை வேகமாக படகில் கடந்து புதிய உலக சாதனை படைத்துள்ளனர். இந்த மூன்று சகோதரர்கள் கிட்டத்தட்ட 139 நாட்கள், 5 மணி நேரம், 52 நிமிடம் பெருவிலிருந்து ஆஸ்திரேலியா வரை 9000 மைல்களுக்கு மேல் படகு மூலம் பயணித்து இந்த நம்பமுடியாத சாதனையை செய்துள்ளனர்.
பெருவின் லிமா நகரில் ஏப்ரல் 12ஆம் தேதி பயணத்தை தொடங்கிய 3 சகோதர்களும் கடந்த சனிக்கிழமை ஆஸ்திரேலியாவில் உள்ள கெய்ர்ன்ஸ் நகரை வந்தடைந்துள்ளனர். தங்கள் சாதனை பயணத்தை மூன்று சகோதரர்களும் நிறைவு செய்யும்போது அவர்களை வரவேற்க அவர்களது தாய் ஷீலா, குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என 50க்கும் அதிகமானோர் கூடியிருந்தனர்.
இந்த பயணத்தின் போது மூன்று சகோதரர்களும் கார்பன் பைபர் படகில் கிட்டத்தட்ட 5 மாதங்கள் தங்கி இருந்து ஒரு நாளைக்கு சுமார் 14 மணிநேரம் படகுக்கு துடுப்பு போட்டது குறிப்பிடத்தக்கது.
— மு. குபேரன்