திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் உலக மண் வள பாதுகாப்பு தின விழா நிகழ்ச்சி
திருச்சி ஜோசப் கல்லூரியில் உலக மண் வள பாதுகாப்பு தின விழா 2024 திருச்சிராப்பள்ளி செயின்ட் ஜோசப் கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பர்டு 06.12.2024 வெள்ளிக்கிழமை அன்று கல்லூரியின் மைய மூலிகை தோட்டம் நாகமங்கலத்தில் சிறப்பாக கொண்டாப்பட்டது.
இவ்விழாவில் அருட்தந்தை முனைவர் T சகாயராஜ் சே ச தலைமை தாங்கினார். தமது உரையில் இவ்விழாவினை கொண்டாடுவதின் நோக்கம் இயற்கை சூழலை பேணி பாதுகாப்பதற்கு மரங்கள் அவசியம் பற்றி மாணவர்கள் புரிந்து கொண்டு சமூகப் பணியில் சுற்றுச்சூழலை பாதுகாக்க மரங்களை நட்டு பாதுகாக்கும் செயலில் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய திரு கோபிநாத் வனத்துறை அதிகாரி திருச்சி மாவட்டம் அவர்கள் பேசுகையில் காடுகள், நிலங்களின் சுற்றுச்சூழலை பாதுகாப்பு பற்றி சிறப்புரையாற்றினார்.
முன்னதாக கல்லூரியின் தாவரவியல் துறை பேராசிரியர் முனைவர் திரு T பிரான்சிஸ் சேவியர் தமது கருத்துரையில் மண்ணின் நாம் வாழும் பூமியினை பாதுகாக்க பல்லு உயிரிகளை பாதுகாத்தால்தான் மனிதர்கள் வாழத் தகுதியான இடமாக பூமி விளங்கும் என்று வலியுறுத்தினார்.
திரு ஜெயச்சந்திரன் ஒருங்கிணைப்பாளர் தொடக்க உரையாற்றினார் திரு எஸ் லெனின் ஒருங்கிணைப்பாளர் அனைவரையும் வரவேற்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இளநிலை ஒருங்கிணைப்பாளர் திரு எஸ் ஜெயசீலன் நன்றி உரை கூறினார். இளநிலை ஒருங்கிணைப்பாளர் திருமதி எச் யசோதை கலந்து கொண்டார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இந்நிகழ்ச்சியில் பல்வேறு வனத்துறை அலுவலர்கள் பணியாளர்கள் கல்லூரி மாணவ, மாணவிகள் என எண்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு 50க்கும் மேற்பட்ட வனத்துறை பரிந்துரை செய்யப்பட்ட சுற்றுச்சூழலை மேம்படுத்தும் மரக்கன்றுகளை நட்டு இவ்விழாவினை சிறப்பித்தனர்.