அங்குசம் சேனலில் இணைய

“ராங்கானவர்களின் பயங்கரம்  தான் ”ரைட்” நட்டி சொன்ன சேதி !

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ஆர்.டி.எஸ். பிலிம் ஃபேக்டரி திருமால் லட்சுமணன், டி.ஷியாமளா தயாரிப்பில் உருவாகி வரும் 26-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீசாகிறது ‘ரைட்’ என்ற படம். இயக்குனர்கள் ரவி மரியா, நட்டி[எ] நட்ராஜ் ஆகியோரிடம் உதவிய இயக்குனராகவும் விஜ்ய்யின் ‘ஜில்லா’, ‘புலி’ படங்களில் இணை இயக்குனராகவும் பணியாற்றிய சுப்பிரமணியன் ரமேஷ்குமார் இப்படத்தின் மூலம் இயக்குனராகியுள்ளார். இப்படத்தில் நட்டி, அருண்பாண்டியன், அக்‌ஷரா ரெட்டி, தங்கதுரை, வினோதினி வைத்தியநாதன், மூணார் ரமேஷ், அனுபமா குமாரின் மகன் ஆதித்யா ஷிவக், மற்றும்  வீரம் படத்தில் குழந்தையாக நடித்த யுவினா இதில் கல்லூரி மாணவியாக நடிக்கிறார்.

ஒளிப்பதிவு : எம்.பத்மேஷ், இசை : குணா பாலசுப்பிரமணியன், எடிட்டிங் : நாகூரான் ராமச்சந்திரன், ஆர்ட் டைரக்டர் : தாமு, ஸ்டண்ட் : மிராக்கிள் மைக்கேல், நடனம் : ராதிகா, நிர்வாகத் தயாரிப்பாளர் : பிரான்சிஸ் மார்க்கஸ், பி.ஆர்.ஓ. : சதீஷ் [ எய்ம் ] ‘ரைட்’டின் டிரெய்லர் வெளியீட்டு விழா, செப்.20-ஆம் தேதி சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. இதில் பேசியவர்கள்…திருமால் லட்சுமணன்,

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

“ அருண்பாண்டியன் சாரும் நட்டி சாரும் எங்களுக்கு ரொம்பவும் உறுதுணையாக இருந்தார்கள். இந்தப் படம் ஜெயித்தால் எங்கள் ஊரே டைரக்டரைக் கொண்டாடும்”.

யுவினா,

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

“இந்தப் படம் எனக்கு நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கு. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள்”

குணா பாலசுப்பிரமணியன்,

“இதுவரை ஒன்பது படங்களுக்கு இசையமைத்திருந்தாலும் இதான் எனக்கு முதல் மேடை. அனைவரும் கடுமையாக உழைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளோம்”.

ரைட்அக்‌ஷரா ரெட்டி,

“சினிமாவுக்கு நான் புதுசு தான் என்றாலும் பிக்பாஸ் மூலம் மக்களின் மனதில் இருக்கேன். படத்தில் எனக்கு மிகவும் நல்ல ரோல்.

ரவிமரியா,

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

“நான் இந்தப் படத்தில் நடிக்காவிட்டாலும் சுப்பிரமணியனுக்காக வந்தேன். அவருக்கு அடைக்கலம் தந்தவர் நட்டி தான். இப்படம் வெர்றி பெற வாழ்த்துகிறேன்”.

பிரான்சிஸ் மார்க்கஸ்,

“24 நாட்களில் படத்தை முடித்தாலும் தரமான கண்டெண்டுடன் சிறப்பாக எடுத்துள்ளோம். இதற்கெல்லாம் காரணம் எங்களின் படக்குழுவும் இதில் நடித்தவர்களும் தான்”

வினோதினி வைத்தியநாதன்,

“ஜில்லா படத்திலிருந்தே சுப்பிரமணியன் ரமேஷ்குமாரைத் தெரியும். பிரான்சிஸ் மூலம் வாய்ப்புக் கிடைத்து இந்தப்படத்தில் ஏழு நாட்கள் தான் நடித்தேன்.  இருபத்து நான்கே நாட்களில் படத்தை முடித்திருக்கும் தகவல் எனக்கு இப்பதான் தெரியும். ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் கண்டிப்பாக பூர்த்தி செய்யும்”.

ரைட்நட்டி[எ] நட்ராஜ்,

“இப்ப இருக்கும் இளைஞர்களுக்கு கட்டுப்பாடற்ற சுதந்திரம் கொடுக்கிறார்கள் பெற்றோர்கள். அப்படி ராங்காக போனவர்களின்  பயங்கர வேலைகளைச்  சொல்வது தான் இப்படம். ரமேஷ் என்னிடம் கதை சொன்ன போதே யார், யார் நடிக்க வேண்டும் என்பதையும் எழுதி வைத்திருந்தார். படத்திற்காக கடுமையாக உழைத்துள்ளார். அவருக்கும் இப்படத்துக்கும் உங்களின் ஆதரவைக் கொடுங்கள்”.

சுப்பிரமணியன் ரமேஷ்குமார்,

“எனக்கு சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம். எனது நண்பர் ஜெயபாண்டி மூலமாகத் தான் திருமால் லட்சுமணன் சார் தொடர்பு கிடைத்து இப்படம் உருவாகியுள்ளது. மக்களுக்கு ஒரு பிரச்சனைன்னா போலீஸ் ஸ்டேஷனுக்குப் போவார்கள். ஆனா போலீஸ் ஸ்டேஷனுக்கே ஒரு பிரச்சனை வந்தால் என்ன நடக்கும் என்பது இந்த ‘ரைட்’. எனக்கு உறுதுணையாக இருந்த உதவி இயக்குனர்கள் மற்றும் நட்டி சார், அருண்பாண்டியன் சார், ஆகியோருக்கும் டெக்னீஷியன்களுக்கும் ரொம்ப நன்றி”.

 

 —     ஜெடிஆர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.