எழுத்தாளர் ஜெயதேவன் கடைசி கட்டுரை…

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

நண்பர்களே நீங்கள் தொடர்ந்து முகநூலில் பதிவு போடுபவர் என்றால் இதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு பதிவு நல்ல பதிவாக இருக்க வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அந்தப் பதிவை பதிவிடும் நேரம்.

வழக்கமாக நல்ல பதிவுகளை காலை 8 மணிக்குள் பதிவு செய்யுங்கள். அதை விட்டால் பத்து மணிக்கு மேலே பதிவு செய்யுங்கள். 8 டு 10 காலை கடன்கள் முடிக்கக்கூடிய நேரம் ஆகவே யாரும் முகநூல் பக்கம் வரமாட்டார்கள் மீண்டும் 10 மணிக்கு மேல் வருவார்கள்.

Sri Kumaran Mini HAll Trichy

அதேபோல பிற்பகலில் பெரும்பாலும் நல்ல பதிவுகளை குறிப்பாக கவிதைகளை பதிவிட வேண்டாம். அந்த நேரத்தில் முகநூலில் உலவுபவர்கள் மிகக் குறைவு சிலர் உறங்கலாம் சிலர் ஓய்வு எடுக்கலாம்.

மாலையில் என்றால் ஆறு முப்பதுக்கு மேல் பதிவு செய்யுங்கள் எப்படியும் வேலை பார்ப்பவர்கள் வீட்டுக்கு திரும்பி 8 மணி வாக்கில் ஆவது உங்களுடைய பதிவை பார்க்க வாய்ப்புள்ளது. ஆகவே ஆறு மணிக்கு மேல் பதிவிடுங்கள்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

கவிஞர் ஜெயதேவன்.
கவிஞர் ஜெயதேவன்.

சுருக்கமான பதிவு என்றால்

இரவு 10 மணிக்கு மேல் போடலாம். அப்போதும் ஒரு கோஷ்டி முகநூலில் சுற்றிக்கொண்டு இருக்கும். இரவு 11 30 மணிக்கு கூட ரா கோடங்கி மாதிரி உலவுகின்ற சில மானுடர்கள் உள்ளார்கள்.

அப்போது விரிவான பதிவுகளை போட்டு விடாதீர்கள். சுருக்கமான கவிதை அல்லது பதிவை போடுங்கள் உலகம் உறங்குவதே இல்லை.

Flats in Trichy for Sale

நள்ளிரவு 2 மணிக்கு கூட நீங்கள் ஒரு கவிதை போடுங்கள் உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் ஒரு சில நண்பர்கள் விருப்பக்குறி போடுவார்கள்.

சரி ராக்கோழிகளுக்கு உறக்கம் எங்கிருந்து வந்து சேரும் என்று நினைப்பேன் ஆனால் உண்மையில் நமக்கு இரவாகின்ற பொழுது பகலாய் இருக்கும் நாடுகள் இருக்கத்தானே செய்கின்றன. அங்கு இருக்கும் நண்பர்கள் நமக்கு விருப்பகுறி போடுவார்கள்.

ஆனால் பகலில் எதிர்பார்ப்பது போல எதிர்பார்க்க முடியாது. ஆனால் முகநூல் மனிதர்கள் உலாவிக் கொண்டுதான் இருக்கிறார்கள்

கவிஞர் ஜெயதேவன் கடைசி பதிவு
கவிஞர் ஜெயதேவன் கடைசி பதிவு

இந்த சூட்சுமத்தை அடிப்படையில் புரிந்து கொள்ள வேண்டும். முடிந்தவரை ஞாயிற்றுக்கிழமைகளில் நல்ல பதிவுகள் பகலில் போட வேண்டாம். வேலை பார்ப்பவர்கள் அன்றுதான் ஒன்பது மணி வரை கூட தூங்குவார்கள்.

எழுந்து  காலைக்கடன்களை முடித்துவிட்டு கறிக்கடை, மீன் கடை, மார்க்கெட் என்று அவர்கள் கிளம்பி விடுவார்கள். முகநூலில் இயங்கக்கூடிய பெண்களுக்கு சொல்லவே தேவையில்லை அன்று முழுவதும் அவர்களுக்கு வேலை இருக்கும். ஆகவே அவர்களும் முகநூலுக்கு வர வாய்ப்பு இல்லை.

ஞாயிறு என்றால் பெரும்பாலும் இரவு எட்டு மணிக்கு மேல் உங்கள் பதிவுகளை பதிவு செய்யுங்கள் எல்லாம் அனுபவம் கற்றுத் தந்த பாடம்.

 

—   ஜெயதேவன், எழுத்தாளர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.