அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

வழிப்பறி குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது…!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் ITI மதுபானக்கடைக்கு அருகே பாலாஜி (30), த.பெ.கதிர்வேல் என்பவர் கடந்த 24.03.2026 ம் தேதி அவரது நண்பர்களை பார்ப்பதற்காக நின்றுக்கொண்டிருந்த போது அங்கு வந்த திருவெறும்பூர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளிகளான கோபால் (எ) குஞ்சு கோபால் (HS No. 01/20) (30), த.பெ. மோகன். அண்ணா நகர். வடக்கு காட்டூர் திருவெறும்பூர். திருச்சி 2. ராஜா முகமது (HSNo. 545/16) (30), த.பெ அப்துல்லா, அண்ணா தெரு, வடக்கு காட்டூர். திருவெறும்பூர், திருச்சி ஆகியோர் மேற்படி பாலாஜி என்பவரிடம் கத்தியை காமித்து மிரட்டி அவரிடமிருந்த ரூ. 500 பணத்தை பறித்துச் சென்று விட்டனர்.

இது தொடர்பாக மேற்படி பாலாஜி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் திருவெறும்பூர் கா.நி. குற்ற எண். 119/26, ச/பி. 309(4), 311 BNS -ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, எதிரிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்கள்.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

இந்நிலையில் மேற்படி சிறையில் இருந்து வரும் எதிரிகளான 1 கோபால் (எ) குஞ்சு கோபால் (HS No. 01/20)(30), த.பெ. மோகன், 2 ராஜா முகமது (HS No. 545/16) (30), த.பெ அப்துல்லா ஆகியோரை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப. அவர்களின் பரிந்துரையின் பேரில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு இன்று 09.04.2026-ம் தேதி சிறையில் உள்ள எதிரிகளிடம் சார்வு செய்யப்பட்டது என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

மேலும் திருச்சி மாவட்டத்தில் ஜனவரி-2026 முதல் தற்போதுவரை மொத்தம் 41 தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட எதிரிகளிடம் சார்வு செய்யப்பட்டுள்ளது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.