அங்குசம் சேனலில் இணைய

“பெண் எழுத்து சமூக அக்கறையும் ‘வலி’மையும் கொண்டது”- கவிஞர் தனலெட்சுமி பாஸ்கரன் உரை-யாவரும் கேளீர் – தமிழியல் பொதுமேடை

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

அங்குசம் சமூக நல அறக்கட்டளை தொடர்ந்து நடத்தி வரும் யாவரும் கேளீர் – தமிழியல் பொதுமேடை நிகழ்வில், 26.07.2025 சனிக்கிழமை மாலை 6 மணியளவில் கவிஞர் தனலெட்சுமி பாஸ்கரன் “பெண் எழுத்தின் தனித்துவம்” குறித்து உரையாற்றினார். நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் தி.நெடுஞ்செழியன் கவிஞர் தனலெட்சுமி பாஸ்கரன் எழுதிய நூல்கள் குறித்தும், அண்மையில் கவிக்கோ விருது பெற்ற செய்திகளையும் அறிமுக உரையில் சுட்டிக்காட்டினார். பின்னர் நிகழ்ச்சியின் புரலவர் பேராசிரியர் முனைவர் ரெ.நல்லமுத்து பயனடை அணிவித்து சிறப்பு செய்தார். பெரியார் விருதாளர் திருச்சி தி.அன்பழகன் நூல்கள் வழங்கினார்.

நிகழ்வில் தொடக்க உரையாற்றிய ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் தி.நெடுஞ்செழியன், “இலக்கியப் படைப்பில் ஆண் எழுத்து, பெண் எழுத்து என்று பிரித்துப் பார்ப்பது சரியா?” என்ற ஒரு கேள்வியை என்னிடம் பலர் முன்வைத்தனர். எழுத்துகளில் பெண் எழுத்து என்பது ஆணின் எழுத்தைவிட வலி மிகுந்ததாக இருக்கிறது. காரணம் உலகம் தொடங்கிய காலம் முதல் இன்று வரை பெண்கள் அடக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும், உரிமை மறுக்கப்பட்டுமே அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கிடைத்த கொஞ்ச நெஞ்ச விடுதலையோடு அவர்கள் சமூகத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

யாவரும் கேளீர் - ஆண்களின் கவிதை பெண்களின் பிரச்சனைகளை மட்டுமே பேசும். பெண்களின் படைப்பில் அவர்களின் வலி, வேதனை, சமூகத்தின் மீதான அவநம்பிக்கை இவற்றைக் கொண்டுதான் பெண் எழுத்துகள் பெரும்பாலும் அமைந்துள்ளன.” என்றார் முத்தாய்ப்பாக.

சிறப்புரையாற்றிய கவிஞர் தனலெட்சுமி பாஸ்கரன், “இதுவரை யாரும் சிந்திக்காத கோணத்தில் யாவரும் கேளீர் நிகழ்வில் என்னை “பெண் எழுத்தின் தனித்துவம்” குறித்து உரையாற்ற சொன்னபோது, உண்மையில் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. பெண் எழுத்து என்பது பெண்களின் அன்றாட பணிகளைச் செய்துவிட்டு, கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் படைப்புகளைப் படைக்கின்றார்கள். அவர்களின் படைப்புக்குப் பொதுவாக வரவேற்பு என்பது கிடைக்காது. முதலில் குடும்ப உறுப்பினர்களே இது தேவையில்லாத வேலை என்று நம்மை மட்டம் தட்டுவார்கள். அதையெல்லாம் தாங்கிக் கொண்டு, பொறுத்துக்கொண்டு எழுதி, அது புத்தகம் வடிவம் பெற்று, ஒரு அமைப்பின் விருதினைப் பெறும்போதுதான் நம்மைத் திரும்பி பார்த்து பாராட்டுவார்கள். பெண் படைப்பாளிக்கு இதுவே பெரிய வலி, வேதனையும் நிறைந்தது.

என்னுடைய எழுத்தில் பெண்களின் மனஉணர்வுகளைப் பதிவு செய்திருக்கிறேன். பெண்களை வலிமையற்றவர்கள், இளகிய மனம் படைத்தவர்கள் என்றே பல இலக்கியப் பதிவுகள், திரைப்படப் பாடல்கள் சித்தரிக்கின்றன. உண்மை அதுவல்ல. பெண்ணின் வலிமைக்கு நிகராக உலகில் எதுவுமில்லை என்று கூறலாம். பேறுகாலத்தில் பெண்கள் அடையும் இடுப்பு வலிக்கு நிகராக உலகத்தில் எந்த வலியும் இல்லை. அந்த வலியைத் தாங்கும் பெண்கள் வலிமையற்றவர்கள் என்று கூறுவது பொருத்தமுடையது இல்லை. என் கவிதையை வாசித்து, தொடர்ந்து என்னை கவிதை எழுத வைத்தவர், நூலாக்கம் செய்ய வைத்தவர் மறைந்த கவிஞர் நந்தலாலா என்பதைப் பெருமையோடு இந்த அவையில் பதிவு செய்கிறேன்.

யாவரும் கேளீர்  பெண்களின் பேறுகால வலியை, ஈன்றவளின் / ஜனன வலியை உணர்த்தியது / குருதிபடிந்த குழந்தையின் தேகம்…..“  என்ற இந்தக் கவிதையில் தாய் தன் குழந்தையை இரத்தத்தைக் கொடுத்து பெற்று எடுக்கிறாள் என்பதைச் சுட்டிகாட்டியுள்ளேன்.

ஆண்கள் தங்களின் சுயநலத்திற்காகவே பெண்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவர்களின் உண்மையான நலனில் அக்கறைக் கொள்வதில்லை என்பதை பலவீனம் என்ற கவிதையில்,

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

“உன் மூர்க்கத்தனத்துக்கு / அன்பென்று பெயர்சூட்டி / பதுமையாக்கி வீழ்த்துகிறாய் … / எழுவதற்கு உன் கரங்கள் கேட்கிறேன் / ஊமையாய் வெளியேறுகிறாய் நீ.” என்பதைக் கூறியிருப்பேன்.

பெண் எழுத்து என்பது தாய்மை நிறைந்தது மட்டுமல்ல, இந்த சமூகத்தில் புரையோடி போய்விட்ட பல தேவையற்ற செய்திகளை அப்புறப்படுத்தும் சமூக மாற்ற சிந்தனை கொண்டது. பெண்ணையும் சமமாக எண்ணவேண்டும் என்ற மனநிலையை ஏற்படுத்தும் ஆற்றல் வாய்ந்தது” என்று உரையை நிறைவு செய்தார்.

அங்குசம் சமூக நல அறக்கட்டளையின் தலைவர் ஜெடிஆர் கவிஞர் தனலெட்சுமி-க்கு யாவரும் கேளீர் – தமிழியல் பொதுமேடையின் நிகழ்வு தொகுப்பான இலக்கிய மலரை வழங்கினார். கவிஞர் தனலெட்சுமி தான் படைத்த நூல்களை அங்குசம் சமூக நல அறக்கட்டளை வழங்கினார். பெண் எழுத்தின் வலியே பெண் எழுத்தின் வலிமை என்பதை முதல்முறையாக இலக்கிய உலகில் யாவரும் கேளீர் பதிவு செய்துள்ளமையை நிகழ்வுக்கு வந்திருந்த சான்றோர் பெருமக்கள் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தமை பெண் எழுத்துக்குக் கிடைத்த பெருமையாக எண்ணினோம்.

நிகழ்வை முழுமையாக பார்க்க

 —    ஆதவன்

 

என்னைப் பற்றி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கிக்கு அண்மையில் உள்ள கிராமத்தில் பிறந்து எட்டாம் வகுப்பு வரை கிராமப் பள்ளியில் படித்து பின்னர் 9 முதல் 11ஆம் வகுப்பு வரை உயர்நிலைப்பள்ளியில் படித்து, பின்னர் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்தேன். இது அந்தக் காலத்தில் எல்லா பெண்களுக்கும் கிடைக்கும் இப்படிப்பட்ட வாய்ப்பு கிடைக்காது. எனக்குக் கிடைத்து பின்னர் டெல்லியில் சுகாதாரத் துறையில் பணியில் இணைந்தேன். பின்பு அங்கிருந்து திருச்சி விமானநிலையத்தில் சுகாதாரத் துறையில் பணியாற்றி 50 வயதைக் கடந்தபோது, இலக்கியப் பணிகளைச் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு பணியிலிருந்து ஓய்வு பெற்றேன். ஓய்வு பெற்ற பின்னர்தான் நான் 6 நூல்களைப் படைத்திருக்கிறேன். எல்லா நூல்களும் தமிழ் அமைப்புகளின் விருதை, பரிசைப் பெற்றிருக்கின்றன. எங்கள் குடும்பத்தில் நான்தான் முதல் எழுத்தாளர். எங்கள் உறவினர்கள் என்னைப் பெருமையோடு பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.