அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

இளம் மாணவர்கள் வெறியாட்டம் – கஞ்சா மட்டும் காரணமல்ல!

திருச்சியில் அடகு நகையை விற்க

வயது 18 ஆகாத தடிமாடுகள் ஒரு மனிதனை வெட்டும் விடியோ பலரையும் பதட்டத்துக்குள்ளாகி இருக்கிறது. அந்த மனிதன் மான் போல மருண்டு கிடக்கிறான். உணவுக்காக  ஆடு கோழி வெட்டுபவர்களிடம் கூட ஒரு மெல்லிய கருணையும் தயக்கமும் நுட்பமாக வெளிப்படும். வலிக்காம சாகணும் என்ற பிரயத்தனம் இருக்கும். இந்த வெறியர்களிடம் ஒன்றுமே இல்லை.

பலரும் இந்தச் செயலை கஞ்சா மற்றும் போதையோடு தொடர்புபடுத்துகிறார்கள். அப்படி முத்திரை குத்துவது பலன் தராது. பழியை கஞ்சா மீதும் போதை மீதும் போட்டுத் தப்பித்துக்கொள்ளத்தான் உதவும். நான் கஞ்சாவுக்கும் போதைக்கும் சப்போர்டுக்கு வரவில்லை. அது தனி ஏரியா. அதைப்பற்றி தனியாக எழுதுகிறேன். இந்தப் பிரச்சனை கஞ்சா மற்றும் போதை சம்மந்தப்பட்டது மட்டுமல்ல.

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

அது எப்படி டெம்ப்ளேட்டாக பலரும் கஞ்சா மற்றும் போதை பிரச்சனை. கையாலாகாத அரசு என பேசி முடித்துக்கொள்கிறார்கள் என வியப்பாக உள்ளது. எல்லாவற்றிற்கும் ஒரு ரெடிமேட் தீர்வு.

எத்தனையோ பேர் மூன்றாம் பேருக்குத் தெரியாமல் குடித்து விட்டு மூலையில் படுத்து உறங்குகிறார்கள். பாரம் தூக்குபவர் முதற்கொண்டு சாமியார் வரை கஞ்சா இழுத்து விட்டு பசு போல பதூசாகக் கிடக்கிறார்கள்.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

உலகில் பல நாடுகளில் கஞ்சா லீகல். அங்கெல்லாம் இளம் பயல்கள் இப்படி கஞ்சா அடித்து விட்டு கத்தியால் வெட்டிக்கொண்டா திரிகிறார்கள்?

சரி, என்னதான் பிரச்சனை ?

இது சமூகப் பிரச்சனை. கொஞ்சம் கொஞ்சமாகக் கெட்டுக்கொண்டு வந்ததை குடும்பங்களும், சமூகமும், ஆசிரியர்களும் , அரசும் கண்டுகொள்ளாமல் கைகழுவியதால் முற்றியிருக்கும் பிரச்சனை.

பாதையை மாற்றும் போதை! இளைஞர்களிடையேயான போதைப்பொருள் பயன்பாடு குறித்த  தலையங்கம்மாடர்ன் என்ற பெயரிலும் , முற்போக்கு என்ற பெயரிலும் அனைத்தையும் நார்மலைஸ் ஆக்கியதால் வந்த பிரச்சனை. முன்பு ரௌடிகள் என்ற தனி பிரிவு இருப்பார்கள். காலிப்பயல்கள் , பொறுக்கி , ரௌடி எனச் சொல்லி சமூகம் அவர்களை ஒதுக்கி வைக்கும். இப்போது ரௌடி பொறுக்கி எனத் தனிப்பிரிவு கிடையாது. ரௌடிகள் செய்யும் அனைத்தையும் நார்மலைஸ் ஆக்கி பொதுச் சமூகத்தில் இருப்பவர்களையும் பொறுக்கி ஆக்கி வைத்திருக்கிறோம்.

சினிமாவுக்கு இதில் பங்கிருக்கிறதா? நிச்சயம் பெரும்பங்கு உண்டு. ஆனால் சமீபகாலத்தில் ஏற்பட்டது அல்ல. அதற்கு ரஜினியிடம் செல்ல வேண்டும்.

எம்ஜிஆர் , சிவாஜி, ஜெமினி , ஜெய்சங்கர் , முத்துராமன் என ஜெண்டில்மேன்களாக, நாகரிகமானவர்களாக, ஏழையாக இருந்தாலும் கௌரவமானவர்களாக ஹீரோக்கள் நடித்து வந்த காலத்தில் முதன்முதலாக பொறுக்கித்தனத்தை சினிமாவில் நுழைத்து அதற்கு ஒரு ஹீரோயிஸ அந்தஸ்தை வழங்கினார் ரஜினி.

சிகரட் குடிப்பது ஒரு சாதாரண பழக்கம். சிங்கில் டீக்கு டிங்கி அடிக்கும் ஒரு பயந்தாங்கொள்ளி கூட சிகரட்டோ பீடியோ இழுத்து விட்டுத் தூக்கிப் போடுவான். அதை ஒரு ஹீரோயிசமாக வளர்த்தெடுத்தவர் ரஜினி. உண்மையில் சிகரட் அடிப்பதுதான் உலகின் சுலபமான வேலை. அதற்கு ஒரு பில்ட் அப்.

திராவிட மண் என்கிறோம். கல்விதான் நம்மை உயர்த்தும் என்கிறோம். ஆனால் ரஜினி படங்களில் பெரும்பாலும் ஐயா படிக்காதவர். பெண்களின் பின்னால் போய் டீஸ் செய்பவர். சமூகத்தில் இப்படிச் செய்பவரை பொம்பளை பொறுக்கி என்பார்கள். பெண்களை மட்டம் தட்டுபவர். படித்த மற்ற கேரக்டர்களை கேவலமாகப் பேசுபவர். அடாவடித்தனம் செய்பவர். அவர் படத்தில் ஒரு பாடல் வரிகளைப் பாருங்கள். சூப்பர் ஹிட் பாடல்.

படிச்சா போதுமுன்னு நினைக்காதப்பா

இங்கே படிச்சிப்புட்டு பட்டம் விட்டா பறக்காதப்பா

எதிர்த்து பட்டம் விட்டா அறுப்பேணுப்பா

வந்த எவனோடும் மல்லுக்கட்டி ஜெயிப்பேனப்பா

படிச்சவங்க வாங்குற பட்டமும்

காகிதம்தான் காகிதம்தான்

படிக்காதவன் விடுற பட்டமும்

காகிதம்தான் காகிதம்தான்

இப்படி அந்தக் காலத்தில் சமூகத்தில் இருக்கும் பொறுக்கிகளுக்கு ஒரு சமூக அந்தஸ்து கொடுத்து, படித்துக் கொண்டு இருந்த மாணவர்களையும் பொறுக்கிகளாக மாற்றியவர் அண்ணன் ரஜினிகாந்த் அவர்கள்.

அதன் பிறகு அண்ணன் ரஜினி வழியே மற்ற ஹீரோ, இயகுநர்கள் எல்லாம் செல்ல ஆரம்பித்தனர். தமிழ் சினிமா ஹீரோவா ? பொறுக்கி. ரௌடி. ஆக்‌ஷன் படமா? ஹீரோ பொறுக்கி, ரௌடி.

நண்பர்கள் ஸ்டாலின்... அண்ணாமலை... : வாழ்த்தியவர்களுக்கு ரஜினி நன்றி!  rajinikanth thanks to political partyஅதன்பிறகு விதவிதமான ரௌடியிஸ , பொறுக்கியிஸ ஆக்‌ஷன் படங்கள் தமிழ் சினிமாவை ஆக்கிரமித்தன. சும்மா முதுகுக்குப் பின்னால் சட்டைக்குள் கத்தி வைத்துக்கொண்டு திரிந்த இளைஞர்களைப் பார்த்திருக்கிறேன். தமிழ் சினிமா சொல்லிக்கொடுத்தது. டிரெண்ட் செட் செய்தது.

தமிழர்களுக்கு சொந்த உணர்ச்சியே கிடையாது என எழுதியிருக்கிறேன். அம்மா பாசமா? ராஜ்கிரண் வந்து சுடுகாட்டில் அமர்ந்து சாம்பலை எடுத்துப் பூசிக்கொண்டு அழ வேண்டும். அம்மா என்றழைக்காத உயிரில்லையே என ராஜா சொல்லிக்கொடுக்க வேண்டும். அப்போதுதான் அம்மா பாசம் புடுங்கிக்கொண்டு அடிக்கும்.  காதலா? சுத்தம். சினிமா காதல் சீன்களைத்தான் மீட்டுருவாக்கம் செய்வார்கள் ரியல் லைஃபில். காதல் கடிதமா? இளையராஜா பாடல் வரிகள் தான்.

இப்படி ஒட்டுமொத்த சமூகமே  உணர்ச்சிகளை சினிமாவில் இருந்து கடன் வாங்கி வாழ்க்கையில்  இட்டு ரொப்பிக்கொண்டு இருக்கையில், இளைஞர்கள் என்ன செய்வார்கள்? இந்த ரௌடியிஸ, பொறுக்கியிஸ ஹீரோயிஸ கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டார்கள்.

நல்ல காலம் , தமிழ் நாட்டில் கல்வி பெருமளவு அன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் எட்டியதாலும்,  அன்றைக்கு படிப்பு மேல் மரியாதை குறையாமல் இருந்ததாலும் , ரஜினி ஹேங் ஓவரில் மாட்டியிருந்த பெருமளவு இளைஞர்கள் தப்பித்து ஓடி செட்டில் ஆனார்கள்.

அதனால் இந்தச் சீரழிவை சினிமா மூலம்  துவக்கி வைத்தவர் ரஜினி. அதை விடாமல் பிடித்துப் பாதுகாத்து வளர்த்து உருவாக்கியது ஒட்டு மொத்த “ஹீரோ ஓரியண்டட்” தமிழ் சினிமா. ரஜினிக்குப் பின் வந்த அனைத்து ஆக்‌ஷன் ஹீரோவும் இதை ஃபாலோ செய்தனர். ஆச்சரியப்படும் விதமாக, ரஜினி காலகட்டத்தில் இருந்த விஜயகாந்த், சத்யராஜ், பிரபு , கார்த்திக் என எவரும் இந்த பொறுக்கி கலாச்சாரத்தை ஃபாலோ செய்யவில்லை. ராமராஜன் உட்பட.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

சினிமாவுக்குப் பிறகு குடும்பங்கள்தான் காரணம்.

எந்த ஒரு பிள்ளைக்கும் குடும்பத்தின் மீது மரியாதை இருக்க வேண்டும். குடும்பத்தின் மீது மரியாதை என்றால், அப்பா மீது, அம்மா மீது, சகோதர சகோதரிகள் மீது, தாத்தா பாட்டி, மாமன் மச்சான் என அனைவர் மீதும் மரியாதை இருக்க வேண்டும். மரியாதை இருந்தால்தான் பயம் வரும். பயம் இருந்தால் தவறாக நடந்துகொள்ள, கெட்ட செயல்கள் செய்யக் கூசும்.

குடும்பத்தின் மீது பிள்ளைகளுக்கு  மரியாதை எப்படி வரும்? குடும்பத்தில் இருப்பவர்கள் மேன்மையாக நடந்துகொள்ளும் போது, குடும்பத்தில் இருப்பவர்கள் தீய செயல்களில் ஈடுபடாமல் , மரியாதையாக , நாகரிகமாக நடந்துகொள்ளும் போது குழந்தைகளுக்கு தானாகவே குடும்பத்தின் மீது மரியாதையும், பயமும் வரும்.

எல்லா பயல்களும் டீன் ஏஜில் குறும்பு என ஆரம்பித்து சில தீய நடவடிக்கைகளில் ஒருவித க்யூரியாஸிட்டியுடன் ஈடுபடுவது வழக்கம்தான். குடும்பத்தின் மீதான மரியாதையும், பயமுமே அதை ஒரு எல்லைக்கு மேல் செல்லாமல் தடுக்கும்.

சும்மா திருட்டு சினிமா பார்ப்பது, தம் அடிப்பது, தண்ணி அடிப்பது, லவ் லெட்டர் கொடுத்து செருப்படி வாங்குவது என்பதோடு நின்றது அன்று. அப்பா அம்மாவை எப்படி எதிர்கொள்வோம்? கூசாது? வெட்கமாக இருக்காது? என்ற எண்ணம் தான் பல இளைஞர்களை இன்று பொறுப்புள்ள அப்பாவாக ஆக்கியிருக்கிறது.

இன்று பெரும்பாலான இளைஞர்களுக்கு குடும்பத்தின் மீது மரியாதையோ, பயமோ இல்லை. வெட்க உணர்வே இல்லை. முக்கியமாக அப்பா அம்மா மீது கிஞ்சித்தும் மரியாதை இல்லை. அவர்களை ஜஸ்ட் இனப்பெருக்க உயிரியாக பார்க்கிறார்கள், அவ்வளவுதான். அவர்களும் நாய் குட்டிபோட்டு , கொஞ்ச நாள் பால் குடுத்து துரத்தி விடுவது போலத்தான் நடந்துகொள்கிறார்கள். என்ன மனித இனம் என்பதால், உடை , செல்ஃபோன் போன்றவற்றை எக்ஸ்டிராவாக வாங்கித்தருகிறார்கள். டோட்டல் பேரண்டிங் ஃபெயிலியர்.

பேரண்டிங் என்பது ஆக்சுவலி குழந்தையை வளர்ப்பது அல்ல. தான் ஒழுங்காக நடந்துகொள்வது. குறைந்த பட்சம், குழந்தைகள் எதிரிலாவது. என் தந்தையின் நடத்தையை வைத்துதான் எனக்கு அவர் மீது மரியாதையும் பயமும் வந்தது. என் தாயின் மேன்மையைப் பார்த்துதான் நான் கெட்டுப்போகாமல் இருந்தேன். கெட்டுப் போவதற்கு பற்பல வாய்ப்புகள் வந்தும்.

17,578 Family Respect Stock Photos - Free & Royalty-Free Stock Photos from  Dreamstimeதற்கால பெற்றோர்கள் ஏன் மரியாதையாக , மேன்மையாக நடந்துகொள்வதில்லை எனில், அவர்களுக்கு அது தெரியாது. எந்த எதிக்ஸ், வேல்யூ , மயிரு மண்ணாங்கட்டி ஏதும் தெரியாது. தெரிந்ததெல்லாம் பணம். அப்புறம் நாய், பூனை, பன்னி போல குட்டிப் பாசம், அவ்வளவுதான். எதையும் வாசிப்பதில்லை, அறிவார்ந்தவர்களுடன் பழகுவதில்லை, மொபைல் போன் ரீல்ஸில் பாவாட சுத்தறப்ப உள்ள தெரியறது பேண்டியா , யோனியா என தந்தைமார்கள் அவர்கள் வேலையில் பிஸியாக இருக்கிறார்கள். முதலில் செருப்பால் அடித்து ஜெயிலில் தூக்கிப் போடவேண்டியது இவ்விதக் குற்றச் செயல்களில் ஈடுபடும் இளைஞர்களின் தந்தைமார்களைத்தான்.

தாய்மார்களைப் பற்றி இப்போது விரிவாகப் பேச விரும்பவில்லை. ஆனால், தாய்மார்களே, உங்கள் பையன்கள் இப்படி வளர்ந்துகொண்டிருப்பது உங்களுக்குத் தெரியாதா? தெரிந்துகொண்டும் எந்த மயிர்களைப் பிடுங்கிக்கொண்டு இருந்தீர்கள்?

தாய் தந்தையர் இருவர் மீதும் கொஞ்சமும் மரியாதையும், பயமும் ஏற்படா வண்ணம் அப்படி என்ன கேவலமான வாழ்வு வாழ்ந்ந்துகொண்டிருந்தீர்கள் ஐயா? இப்போது கூட கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் ஜாமீன் எடுக்கச் செல்வார்கள். இதைப்போன்ற பெற்றோர்கள்தான் சமூகத்தின் முழுமுதற் நச்சுக் கிருமிகள். பிறந்த பிள்ளையை அழகாக கிரிமினலாக வளர்த்தெடுத்து சமூகத்தின் மீது ஏவி விடும் சாத்தான்கள்.

அடுத்து , பள்ளி, கல்லூரி, சமூகம் என வரிசையாகச் சொல்லிக்கொண்டு செல்லலாம். ஆசிரியர் , லெக்ஸரர், தெருவில் வசிக்கும் மூத்தவர் என எவர் மீதும் மரியாதை இல்லாமல் போனதற்குக் காரணம் என்ன என யோசிக்க வேண்டும்.

ஆசிரியர்களைக் கேட்டல் வேறு கதை சொல்வார்கள். பல்வேறு திடுக்கிடும் விஷயங்களைச் சொல்வார்கள். கண்டும் காணாமல் போவதுதான் நல்லது என்பார்கள். ஆம், குடும்பம், பள்ளி, தெரு, சமூகம் என எவரும் கண்டும் காணாமல் சென்றுகொண்டிருக்கிறோம். எவருக்கும் எவர் மீதும் மரியாதையோ, பயமோ இல்லை.

சரி இங்கெல்லாம் மரியாதை இல்லை, காவல் துறை மீது? சுத்தம். இப்போதெல்லாம் மாணவர்களுக்கு காவல்துறை மீது கொஞ்சமும் பயம் இல்லை. இதிலும் சினிமாவை இழுக்காமல் இருக்க முடியவில்லை.

“போலீஸ் ஸ்டூடன்ட் மேல கை வக்காது, வக்க முடியாது” என சினிமாவில் தொடர்ந்து பஞ்ச வசனம் பேசி போலீஸும் ஏனோ அதை நம்ப ஆரம்பித்து விட்டது.

அடுத்து அரசு.

எந்த அரசாக இருப்பினும் என்ன செய்ய முடியும்? அரசு கல்வி கொடுக்கிறது. இலவசமாக பேருந்து, புத்தகங்கள், காலை உணவு , மதிய உணவு , சீருடை , லேப் டாப், சைக்கிள் என என்னென்ன முடியுமோ எல்லாவற்றையும் தருகிறது. நான் திமுக அரசை மட்டும் சொல்லவில்லை. மாணவர்கள் விஷயத்திலும், கல்வியிலும் அதிமுக ப் திமுக இரண்டும் குறையில்லாமல் தான் நடந்து வந்திருக்கின்றன. இதற்கு மேல் அரசு என்ன ஒவ்வொரு வீட்டிலுமா நுழைய முடியும்? அரசா  போட்டித் தேர்வு வைத்து, வேலைக்கு ஆளெடுத்து குழந்தைகளைப்   புணர்ந்துப் பெத்தது?

ஒன்று செய்யலாம். போலி முற்போக்கு அரைகுறைகளின் விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் ஒழுங்கீனமான மாணவர்களின் மேல் கடும் நடவடிக்கை எடுக்க வைக்கலாம்.

மாணவர்களுக்கு என ஆங்காங்கே தனி காவல் நிலையம் உருவாக்க வேண்டி வரும் போலிருக்கிறது. எதிர்காலத்தில் ஒவ்வொரு பள்ளியிலுமே காவல் நிலையம் வந்து “பள்ளிக் காவல் நிலையம்” என அழைக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுத்வதற்கில்லை.

வெளிநாடுகள் போல இங்கே அரசு செயல்பட முடியாது. இங்கே இன்னும் தனிநபர் சமூகம் உருவாகவில்லை. தனி நபர் ஒழுக்கம், தனி நபர் பொறுப்பு என்பதெல்லாம் என்னவென்றே தெரியாது. அரசால் இப்படி அனைத்து தனி நபரையும் திருத்த முடியாது, கண்காணிக்கவும் முடியாது. குற்றம் நடந்தபின்பு நடவடிக்கைதான் எடுக்க முடியும். அதனால், இங்கே குடும்பத்துக்கும், சமூகத்துக்கும் பொறுப்பு அதிகம் ஆகிறது. ஆனால் இந்த பொறுப்பை கையில் வைத்திருக்கும் குடும்பமும் , சமூகமும், எந்த யோனியில் எந்தக் குறி நுழைவது என முடிவெடுப்பதில்தான் தன் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறது.

குடும்பமும் , சமூகமும், தங்கள் பொறுப்பை கைகழுவி விட்ட பிறகு, அரசுதான் இந்த மாற்றத்தை அசாதாரண மாற்றமாகக் கருதி புதிய திட்டங்களை யோசிக்க வேண்டும். புதிய சட்டங்களை அமல் படுத்த வேண்டும்.

இதைப்போல வெறி பிடித்த மெண்டல் பயல்களை கண்டுபிடித்து , சிறார் இல்லங்களில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வெறி நாய்களையே பிடித்து ஊசி எல்லாம் போட்டு ஷெல்டர் குடுத்து பராமரிக்கிறார்கள். இப்படி வெறியர்களாக உருவாகி இருப்பவர்களையும் பிடிக்க “வெறியர் வண்டி” உருவாக்கலாம். போலி முற்போக்காளர்களை சமாதானப்படுத்தும் விதமாக, அந்த வண்டி இன்னோவா ஹைப்ரிட் , ரேஞ்ச் ரோவர் அல்லது ரோல்ஸ் ராய்ஸாக கூட இருக்கலாம். அரசியல்வாதிகள் பினாமி பெயரில் ஓட்டிக்கொண்டிருக்கும் இத்தகைய வண்டிகளைக் கொடுத்து உதவலாம்.

நான் சினிமா, குடும்பம், சமூகம், பள்ளி என பல காரணிகளைச் சொல்லி இருக்கிறேன். இது அல்லாமல் வேறு சில காரணிகளும் உள்ளன. முக்கியமாக இவர்களைப் போன்றவர்களுக்குக் கொம்பு சீவி விட சிலரோ, சில அமைப்போ இருக்கும். அப்படி இல்லாமல் இந்த வயதில் இவ்வளவு தெனாவட்டும் தைரியமும் வராது. அதை எல்லாம் அரசு  தயவு தாட்சண்யம் பார்க்காமல் நொறுக்கித் தள்ள வேண்டும். களை எடுக்க வேண்டும்.

எதன் பெயரால் நடந்தாலும் தீவிரவாதம் தீவிரவாதம் தான் என ஒட்டுமொத்த உலக சமூகமும் அறிவித்தது போல, எதன் பெயரால் நடந்தாலும் பொறுக்கித்தனமும், ரௌடியிஸமும், ரௌடியிஸம் தான்.

கடைசியாக, இதைப்போன்று சீரழிந்த இளைஞர்களைத் திருத்தி சமூகத்துடன் ஒன்றிணைத்துக்கொள்ள வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக, ஒட்டு மொத்த ரௌடியிஸத்தையும் எதன் பெயராலோ மெல்ல மெல்ல நார்மலைஸ்  ஆக்கிக்கொண்டிருக்கிறோம்.  ரௌடியை , பொறுக்கியை சமூகம் ஒதுக்கிறதா? இந்தா புடி, ரௌடியை, படிக்காதவனை  ஹீரோ ஆக்கு என்ற ரஜினி ஃபார்முலாதான்  தமிழ்நாட்டில் நீண்டகாலமாக நடந்துகொண்டிருப்பது.

அனைத்தையும் சினிமாவில் இருந்து எடுத்தத்  தமிழர்கள், அரசியல் மற்றும் சமூகப் பிரச்சனைக்கும்,  தீர்வை சினிமாவில் இருந்து எடுத்துக்கொண்டார்கள்.

வெட்கக்கேடு.

—   ஆர்.  அராத்து

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.