இந்தியாவில் முதல் முறையாக 360 டிகிரி மேடையில் யுவன் சங்கர் ராஜா !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

இந்தியாவில் முதல் முறையாக 360 டிகிரி மேடையில் யுவன் சங்கர் ராஜா! தமிழ் திரையிசை உலகில் முன்ணி இசையமைப்பாளராக வெற்றிகரமாக வலம் வரும் யுவன் சங்கர் ராஜா,அவ்வப்போது ரசிகர்களுக்கு நேரலையாக இசை நிகழ்ச்சியை நடத்தி அற்புதமான அனுபவத்தை வழங்கி வருகிறார்.

உலகின் பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்திய யுவன் சங்கர் ராஜா தற்போது ‘U1 லாங் டிரைவ் லைவ் இன் கான்செர்ட்’ எனும் பெயரில் சென்னையில் உள்ள நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் நேரலையாக இசை நிகழ்ச்சியை நடத்துகிறார்.

துணை முதலமைச்சர் உதயநிதி வாழ்த்து

இந்த இசை நிகழ்ச்சியை இசைத் துறையில் சிறந்து விளங்கும் பல்வேறு முன்னணி இசையமைப்பாளர்கள் மற்றும் முன்னணி இசைக் கலைஞர்களுடன் இணைந்து இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்தி, உலக அளவில் புகழ் பெற்ற,பத்து ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த நாய்ஸ் & கிரைன்ஸ் எனும் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெறுகிறது.

Yuvan Shankar Raja on 360 degree stage
Yuvan Shankar Raja on 360 degree stage

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

இந்த நிகழ்ச்சிக்கு பூமர் ஃபேஷன் எனும் முன்னணி ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனம் விளம்பரதாரராக பங்களிப்பு செய்கிறது.

இந்நிகழ்ச்சி தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் ஜூலை 24 நடைபெற்றது. இதில் நாய்ஸ் & கிரைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் மகாவீர் மற்றும் கார்த்திக் சீனிவாஸ், விளம்பரதாரரான பூமர் ஃபேஷன் நிறுவனத்தின் தலைவர் லிங்குசாமி மற்றும் ஹரிதா லிங்குசாமி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாய்ஸ் & கிரைன்ஸ் நிறுவனத் தலைவர் மகாவீர் பேசுகையில், “எங்களுடைய நிறுவனத்தின் பத்தாம் ஆண்டு இசை நிகழ்ச்சி இது. இந்த இசை நிகழ்ச்சி எங்களுக்கு மிகவும் சிறப்பானது. இந்த நிகழ்ச்சிக்காக யுவன் சங்கர் ராஜாவுடன் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக பயணித்து, இந்த முறை அவரிடம் அனுமதியை பெற்று இருக்கிறோம்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

கடந்த ஆண்டு முதல் நிகழ்ச்சியை நடத்தினோம். அதில் கிடைத்த வெற்றி.. எங்களின் அணுகுமுறை .. இசை நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த பாணி… ஆகியவற்றை பாராட்டி, இந்த ஆண்டும் எங்களுக்கு இசை நிகழ்ச்சியை நடத்த அனுமதி அளித்திருக்கிறார் யுவன் சார்.

‘யுவன் லாங் டிரைவ் லைவ் இன் கான்செர்ட்’ எனும் இந்த தொடர் இசை நிகழ்ச்சிகளின் முதல் நிகழ்வு பெங்களூருவில் நடைபெற்றது. மொழி எல்லைகளைக் கடந்து பெங்களூரில் நடைபெற்ற யுவனின் இசை நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து தற்போது சென்னையில் இந்த இசை நிகழ்ச்சியை நடத்துகிறோம்.

360 டிகிரி இசை நிகழ்ச்சி சர்வதேச அளவில் பல நாடுகளில் நடைபெற்றிருக்கிறது. அதனை முதன் முதலாக இந்தியாவில் அதுவும் சென்னையில் இந்திய கலைஞர்களைக் கொண்டு இந்தியாவில் நடைபெறும் 360 டிகிரி வடிவிலான மேடையுடனான நேரலையான முதல் இசை நிகழ்ச்சி இதுதான்.

சென்னையைத் தொடர்ந்து விரைவில் கோயம்புத்தூர் மற்றும் சிங்கப்பூரில் இதே போன்றதொரு இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறோம்” என்றார்.

இசையமைப்பாளரும், பாடகருமான யுவன் சங்கர் ராஜா பேசுகையில், ” இந்த நிகழ்ச்சி எனக்கு மிகவும் சிறப்பானது.‌ கடந்த முறை சென்னையில் இசை நிகழ்ச்சி நடக்கும் போது, எனக்கும்- ரசிகர்களுக்கும் இடையே சிறிய இடைவெளி விட்டு தடுப்பு சுவர் அமைக்கப்பட்டிருந்தது.

இதனால் ரசிகர்களிடமிருந்து சற்று தள்ளி இருக்கிறோமோ..! என்ற எண்ணம் ஏற்பட்டது. அதே தருணத்தில் ரசிகர்களுடன் மேலும் நெருக்கமாக இணைந்து இசை நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என விரும்பினேன். என்னுடைய விருப்பத்தை நாய்ஸ் & கிரைன்ஸ் குழுவினரிடம் தெரிவித்தேன்.

அந்த தருணத்தில் 360 டிகிரி வடிவிலான மேடையை அமைப்பது குறித்து விவாதித்தோம். இந்த புது அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்க தயாராக இருக்கிறேன். இந்த இசை நிகழ்ச்சியில் ரசிகர்களுடன் இணைந்து இசை நிகழ்ச்சியை நடத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். இது ரசிகர்களையும் , என்னையும் உற்சாகப்படுத்தும். ஜூலை 27ஆம் தேதியன்று ஒய் எம் சி ஏ மைதானத்தில் சந்திப்போம்.” என்றார்.

இந்த இசை நிகழ்ச்சியில் இடம் பெறும் 35 பாடல்களில் 15க்கும் மேற்பட்ட பாடல்களை யுவன் பாடுகிறார்.

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.